புதன், 7 அக்டோபர், 2015

வல்லமை புகைப்ப்ட போட்டி -32

விஞ்ஞானம் வளர்ந்தாலும் அஞ்ஞானம் அகலாத மக்கள் இன்னமும் திருஷ்டிப் பூசணியில் திருப்திகொள்கின்றனர் என்று கூறும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், பூசணியுடன் அதன் வியாபாரி ஆசையாய் எடுத்துக்கொண்ட செல்ஃபி இது! என்று இப்புகைப்படத்திற்கு விளக்கம் தருகிறார்.--மேகலா ராமமூர்த்தி
திருஷ்டி
கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது
கண்ணேறு கழித்தல்என்பது
முன்னோர்கள் வாக்கு
அழகு அழகுன்னு
குழந்தையைகொஞ்சினா
கண்ணேறு படாமலிருக்க்
கன்னத்தில் வைப்பது
திருஷ்டி பொட்டு
புது வீடு கட்டினால்
புதிதான பூஷணிக்காயில்
படம் வரைந்து வாசலில்
திருஷ்டி பொம்மை
அகத்திய முனிவரே
கண் திருஷ்டியிலிருந்துவிடுபட
சுப திருஷ்டி கணபதி என்ற
மகாசக்தியைதோற்றுவித்தார்
விஞ்ஞானம் வளர்ந்தாலும்
அஞ்ஞானம் மாறா மக்கள்
வரைந்த பூஷணிக்கு
திருஷ்டி படாமலிருக்க
வரை படம்போல்
அழகு காட்டி அதன்
அழகில் மயங்கி ஆசையுடன்
எடுத்துக்கொண்டான் ஒரு செல்ஃபி
ஆசை யாரை விட்டது?
சரஸ்வதிராசேந்திரன்

4 கருத்துகள்:

 1. அருமையான கவிதை திருஸ்டி தொல்லைதான் போலும்!

  பதிலளிநீக்கு
 2. வலையில் பின் தொடர்வோர் பட்டியலை இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து!

  பதிலளிநீக்கு
 3. திரட்டிகளில் இணைத்தால் நீங்கள் விரும்பினால் இன்னும் பல நட்பை பெறமுடியும் இல்லை விரும்பியோர் தேடி வரட்டும் என்றால் அதுவும் உங்க சொய்ஸ்தான் !சொல்ல நினைத்தேன் நான் படிக்காதவன் !

  பதிலளிநீக்கு
 4. உங்கள் கருத்துக்கு நன்றி,,முயற்சிக்கிறேன்--சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு