செவ்வாய், 29 செப்டம்பர், 2015

அப்துல் கலாமுக்கு அஞ்சலி

                           அப்துல் கலாமுக்கு  அஞ்சலி
காவியத்தலைவன் நீ
திருராமேஸ்வரத்தில்  உதித்த    திருமகனே
திக்கெல்லாம்  புகழ் பரப்பிய ஏழை பங்காளனே
அன்புருவாய்   வந்து   மக்களை ஆட்கொண்டாய்
அறிவொளியால் மாணவருக்கு   வழி காட்டி
அகக்கண்   திறந்து விட்ட  அருட்செல்வன் நீ
தகுதி இருப்பவரை தேடி வரும் தலைவன் பதவி
பதவி செருக்கு கொஞ்சமும் இல்லாத பண்பாளன்  நீ
அஞ் ஞான இருளகற்றி அருள் பாலித்தாய் 
விஞ்ஞான  விளக்கேற்றி விண்ணளந்த மகான்
அக்னி சிறகுகள் விரித்து  அசத்தினாய்  உலகை
பொக்ரைனில் அணுவைப் பிளந்து அடக்கினாய் அண்டை நாட்டை
 ஊனமுற்ற குழந்தைகளுக்கு எடை குறைந்த
செயற்கை கால்களை வடிவமைத்த மனிதாபிமானி
 இந்திய நாடே என்  குடும்பம் என்றுரைத்து
இல்லற வாழ்வைத் துறந்த   துறவி   நீ
தன்னலம் இல்லா தனிப்பெரும் தலைவன் நீ
உன் கனவை நினைவாக்கி இந்தியாவை வல்லரசாக்க
புண்ணியன்  நீ காட்டிய வழியில் நடந்து
பெருமை சேர்ப்போம் என சபதம் ஏற்கிறோம்  உன்
பிறப்பு சம்பவமானாலும் இறப்பை சரித்திரமாக்கி
பிறந்த மண்ணுக்கு பெருமை தேடித் தந்த
ஈடு இணை இல்லாத காவியத்தலைவன் நீ
ஏவு கணை  சூத்திரதாரியே  உன்னைகாலனுக்கு
காவு கொடுத்துவிட்டு கலங்கி நிற்கிறது இந்தியா
 

2 கருத்துகள்: