புதன், 8 ஜூன், 2016

தமிழ்த்தேர்

தமிழ்த்தேருக்காகஎழுதப்பட்டது
பாராட்டு
தட்டிக்கொடுத்து பாராட்டப்படும் குழந்தை
எட்டாத உயரத்தையும் எட்டிப்பிடிக்கும்
கொட்டுமழைபோல் கொப்பளிக்கும் பாராட்டால்
தொட்டதெல்லாம் எட்டதிறமைக்கு அது ஊக்கமாகும்

அரசன் முதல் அரசியல்வாதிவரை இன்னொருவன்பாராட்ட
அன்று முதல் இன்றுவரை எதிர் பார்க்குமெண்ணம் ஏராளம்
தனக்குள்ளே தானிருக்கும் திறமைக்கு அங்கீகாரம்
மனமாற பாராட்டும் மாண்பு வேண்டும் அனைவருக்கும்
போட்டியிடுவோருக்கும் பந்தயத்தில் ஓடுபவருக்கும்
தேவை பாராட்டு உளமார்ந்த ஊக்கமாகும்
பதற்றப்படுவோருக்கும் பயம் கொள்வோருக்கும்
பாராட்டுதான் மாமருந்து மனித சக்திக்கு உந்து சக்தி
சுற்றி நின்று விசில் அடித்தால் குதிரைக்கும்சக்திவரும்
வெற்றிக்கோட்டை வெகு விரைவாய் எட்டிவிடும்
ஏற்றமுறச்செய்யவே சுற்றி இருப்போரையும்
போற்றிப்பாராட்டும் நல் குணத்தை பெற்றிடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக