வியாழன், 16 ஜூன், 2016

வல்லமைபுகைப்படப்போட்டி===67

தோள்மீது
தோழனாக
குரங்கு
 குரங்கின் உழைப்பே
குரங்காட்டியின் பிழைப்பு
குரங்கை விட்டால்
அவனுக்குபிழைப்பில்லை
அவனை விட்டால்
குரங்கிற்கிற்கும் கதியில்லை
அடிக்குப்பயந்தும்
ஆகாரத்திற்காகவும்
அவன்
ஆணைப்படி ஆடும்
அந்தரத்திலும் தொங்கும்
வித்தைகாட்டியின் விரலசைவுக்கு
இன்றைய பெற்றோர்களுமே
வித்தை காட்டிகள்தான்
பிள்ளைகளை
அதைப்படி இதைப்படி
டான்ஸ் ஆடு பாட்டுப்பாடுன்னு
கோலில்லாமல்
ஆட்டி வைக்கின்றனர்
குரங்கு எப்படி குரங்காட்டியின்
சொல்லுக்கு உடன் படுகிறதோ
அதேபோல் பிள்ளைகளும்
பெற்றோரின் செயலாக
வெளிப்படுமேயன்றி
தானாக எதுவும் செய்வதில்லை
என்பதே தெளிவு
சூழ் நிலையும் சந்தர்ப்பங்களும்
மக்களையும் குரங்காட்டியாகத்தான்
காட்டுகின்றன இன்றைய
அரசியலுக்கும் இது பொருந்தும்
எல்லாமே வயத்து பாட்டுக்குத்தான்
எல்லாருமே குரங்காட்டித்தான் – சரஸ்வதி இராசேந்திரன்
குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதால் என்னவோ குரங்கின் செயலுடன் மனிதன் செயலை ஒப்பிட்டுக் கூறும் மரபு உள்ளது. மரம் விட்டு மரம் தாவும் குரங்கின் செயல், எதிலிலும் நிலையில்லாத மனமுடைய மனிதனுக்கு உவமையாக வந்துள்ளது. மனம் ஒரு குரங்கு என்று கூறும் வழக்கமும் உண்டு. இங்கு குச்சியை எடுத்து குரங்கை ஆட்டுவிக்கும் குரங்காட்டியை, பிள்ளையைத் தன் விருப்பத்திற்கேற்ப கோலில்லாமல் ஆட்டிவைக்கும் பெற்றோர்களுக்கு உவமையாக சுட்டிக் காட்டியுள்ளார் கவிஞர். `கோலில்லாமல்’ என்று கூறுவதன் மூலம் பெற்றோர் குறிக்கோளில்லாமல் செயல்படுவதையும் எளிய வரிகளில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ள சரஸ்வதி இராசேந்திரனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு என் பாராட்டுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக