புதன், 6 ஏப்ரல், 2016

தடாகம் இலக்கிய வட்டம் மார்ச் மாத போட்டிகவிதை 2016

வாக்கு இல்லா நாக்கு  

ஜக்கம்மா வேறில்லை
திக்கம்மா என்று
வாக்கு இல்லா
நாக்கிற்குள் நாம்
ஐக்கியமாகிவிட்டோம்
கடன் கேட்போனிலிருந்து
உடன் இருப்பவன் வரை
வாக்குத் தவறாதவன் எனகூறியே
வாக்குத் தவறுபவன்தான் அதிகம்
நாக்கிலே தேனைத்தடவி
நயவஞ்சகமாய் பேசி
நங்கைகளை காதல் வலையில்
சிக்கவைக்கும் காளையர்
சிக்கியதும் கை கழுவீட்டு
சாக்கு சொல்வார் இஷ்டத்திற்கு
சொல்லும் திறத்தாலே
வெல்லும் வகை கற்றோன்
தங்க நகைகடைக்காரன்
எங்க கடை தங்கம் ஒரிஜினல் என்று
தங்கத்தில் ஈயம் சேர்த்திருப்பான்
வாக்கு இல்லா நாக்குக்காரன்
வானத்தையே வில்லாக வடிப்பான்
தானமாக கொடுப்பான் இலவசத்தை
வாக்கு கிடைத்ததும் வழிமறந்துடுவான்
நாக்கில் நரம்பில்லாத அரசியல் வாதி
அன்பான  நண்பன் கூடசில நேரம்
வம்பாக    மாறும்  சூழ்  நிலை
அவ்சரத்தேவைக்காக அழைத்தால்
கைபேசியில் பொய் பேசுவான்
வெளியூர் போய்க்கொண்டிருப்பதாக
வீட்டு வாசலில் நின்றுகொண்டே
வேதனைதான் யாரைச்சொல்ல யாரைவிட?
இனி உலக வாக்கு இல்லா நாக்கு நாள்
கொண்டாடும் நிலை வந்தாலும் வியப்பில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக