இயற்கைப் பேரிடரின் கோரக்கரங்களில்
தஞ்சமடைந்த இந்தப் பிஞ்சுகளை, இரக்கமெனும் இனியகுணத்தால் அணைத்துநிற்கும்
ஏழைமனிதனிவன்!’ என்று மனம்பூரிக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
இயற்கை விதைத்தவஞ்சத்தில் பெற்றமகனின்
உயிர் இழந்தான்
உடமை இழந்தான்
எஞ்சியதுஅவன்உயிர் மட்டுமே
கஞ்சிக்கே வழியில்லாதபோது
பிஞ்சுகள் இரண்டு வெள்ளத்தில்
தஞ்சம் ஆகின அவனிடத்தில்
பஞ்சப் பராரியான அவனோ
அஞ்ச வில்லை அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்ந்து நெஞ்சோடுஅணைத்து
பிஞ்சுகள் இரண்டும்
பஞ்சாகவும்
நஞ்சாகவும் கீழ்மைபடாமல் வளர்க்க
நெஞ்சு நிமிர்த்தி நடந்தான்
ஈரமான ஏழை மனிதன்
வெள்ளச்சேதத்தில் செழித்து வளர்ந்தது
மனிதாபிமானம்.
கவிதை அருமை அம்மா...
பதிலளிநீக்குநன்றி குமார்---சரஸ்வதிராசேந்திரன்
பதிலளிநீக்கு