துள்ளியோடும் இந்த பரதவச் சிறுவர்கள்,
மல்லிகையினும் மணமுடைய மனோரஞ்சிதங்கள்! மழைவெள்ளத்தில் சிக்கிய மக்களைக்
காத்துநிற்கும் தேவதூதர்கள்! வாடிநிற்போரைத் தேடிஉதவும் விடிவெள்ளிகள்!”
என்று புகைப்படச் சிறார்களுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
இந்த சிறுவர்களுக்கு
விளையாட்டு மைதானமும்
வாழ்க்கையுமே கடல்தான்!
இவர்களின் பெற்றோர்கள்
கடலுக்குள் சென்றால்தான்
இவர்களின் பசியும் பட்டினியும்
போகும் நிலை
இவர்கள் தந்தச் சிற்பங்கள் அல்ல
இவர்கள் அழகான கிளிஞ்சல்கள்!
சக மனிதர்களின் துன்பம் கண்டு
வேகமாய் ஓடித் தங்களால்
முடிந்தவரை வெள்ளத்தில் நீந்தி
கரை சேர்க்கும் மனித நேயம்
கொண்டவர்கள்!
மல்லிகையை விட மணமுள்ள
மானோ ரஞ்சிதங்கள்!
செந்தாமரையைக் காட்டிலும்
அழகான, உணர்ச்சிகளும்
கொண்ட சிறுவர்கள்!
இவர்கள் மீனவர்கள் அல்ல…
மீட்பவர்கள் தேவதூதர்கள்!
சென்னை வெள்ளத்தில்
தன்னை இணைத்துக்கொண்ட
தன்னலமற்ற நாளைய விடிவெள்ளிகள்!
இந்த சிறுவர்களுக்கு
விளையாட்டு மைதானமும்
வாழ்க்கையுமே கடல்தான்!
இவர்களின் பெற்றோர்கள்
கடலுக்குள் சென்றால்தான்
இவர்களின் பசியும் பட்டினியும்
போகும் நிலை
இவர்கள் தந்தச் சிற்பங்கள் அல்ல
இவர்கள் அழகான கிளிஞ்சல்கள்!
சக மனிதர்களின் துன்பம் கண்டு
வேகமாய் ஓடித் தங்களால்
முடிந்தவரை வெள்ளத்தில் நீந்தி
கரை சேர்க்கும் மனித நேயம்
கொண்டவர்கள்!
மல்லிகையை விட மணமுள்ள
மானோ ரஞ்சிதங்கள்!
செந்தாமரையைக் காட்டிலும்
அழகான, உணர்ச்சிகளும்
கொண்ட சிறுவர்கள்!
இவர்கள் மீனவர்கள் அல்ல…
மீட்பவர்கள் தேவதூதர்கள்!
சென்னை வெள்ளத்தில்
தன்னை இணைத்துக்கொண்ட
தன்னலமற்ற நாளைய விடிவெள்ளிகள்!
உள்ளந்தொடும் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்.
பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் நன்றியும் பாராட்டும்!
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
வாழ்த்துக்கள்அருமையாக உள்ளது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-