சனி, 1 ஆகஸ்ட், 2015

தடாகம் இலக்கிய வட்டம்

ஜூலை மாதப் போட்டிக்கவிதை
20-பொறாமை
பொறாமை என்பது என்ன?
இயலாத வர்களுக்கும்
முயலாத வர்களுக்குமே
வரும் ஒரு உணர்ச்சி
போறாத நல்ல குணங்களால் வருவதே
பொறாமை என்னும் தீ-அது
பற்ற வைப்பவர்களையே
பற்றித் தீய்க்கும் நெருப்பு
பொல்லாத குணங்களில் ஒன்று அது
பொறாமை என்றால் மிகையன்று
அடுத்தவர் வாழ்ந்தால் பொறுக்காது
தடுத்திடவே அது நாளும் முயலும்
பொறாமை என்றொரு குணமிருந்தால்
புறம் தள்ளி வாழ்ந்திடக் கற்றுக்கொள்
தன்னம்பிக்கை இல்லவர்கள்தான்
என்றும் பொறாமை கொள்வார் பிறர் மேல்
மனிதனை வீழ்த்தும் குணங்களில்
முதன்னமை ஆனது பொறாமைதான்
முயன்றால் முடியாதது இல்லையென
முடிவுடன் முயற்சி செய்திடுங்கள்
போட்டி இருக்கலாம் மனிதர்களுக்குள்
பொறாமை மட்டும் கூடவே கூடாது
தீண்டாமையை விட பொல்லாத
வேண்டாம் பொறாமை மனிதர்களே !
உழைத்து முன்னேறும் குணமிருந்தால்
தழைத்து வளருவீர்கள் நிச்சயம்
சரஸ்வதி ராசேந்திரன்

2 கருத்துகள்: