செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தமிழ்த்தேர் கண்ணதாசன் பாடல் கட்டுரை

யாரை எங்கே வைப்பது என்று  யாருக்கும் தெரியலே.....
 
கனி  பிழிந்த சாரங்களால்  காதல் கவிதைகள்   தந்தாய்
நனி   சிறந்த  சாரங்களால்  குழந்தைகளுக்கும் பாடல் தந்தாய்
தத்துவச்சாரங்களில்       தேன் கலந்து பாடிய வித்தகன்  நீ
அரசியல்   சுய நலமிகளின்   உண்மைகளை தைரியமாய்
நகைச்சுவை கலந்து  நயமாய்   பாடியவனும்   நீ
உன் பாடல்களை   கேட்க  கேட்க  படிக்க படிக்க 
நெஞ்சச்  சுவரினிலே   சொந்தங்களாய் ஒட்டிக்கொள்ளும்
மந்திரம்தான் என்னவோ தந்திரம்தான்  என்னவோ?
கரு படு  பொருளை உருப்பட வைப்பவந்தான் உயர் கவிஞன்
என்ற  உன்  வரிகளை  உனக்குள் பொருத்தி ப்பார்க்கிறோம்
உள்ளோன்று வைத்து  புறம் ஒன்று   பேசாதவன்  நீ அதனால்
தள்ள முடியாது உன்   கருத்துக்களை அள்ளி திளைத்தோம்
பாட்டினிலே  உன்னை    மிஞ்ச  எவரும் பிறக்கவில்லை
  நாட்டினிலே   உன் பாட்டுக்கு ஈடாக  எதுவுமில்லை
யாரை எங்கே வைப்பது என்று யாரூக்கும் தெரியலே  ஆனால்
மக்களுக்குத்தெரியும்  அனுபவக்கடலிலே   முத்தையா
 மூழ்கி எடுத்த அத்தனை  முத்துக்களும் அருமை என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக