ஜூன் மாத போட்டிக் கவிதை!
25- இயற்கையின் எழில்
தஞ்சமென்று எண்ணியே தினம் சோலையடைவேன்
மஞ்சமென்று எண்ணியே புல்தரை யில் படுப்பேன்
மாமரத்து சோலைதனில் தென்றல் வரும்
மானினங்கள் மிரட்சி யுடன் ஓடியே விடும்
வெண்ணில வும் குளிர்ச் சியுடன் அங்கேவரும்
வெண்மலரில் விந்தையுடன் காதல் புரியும்
வண்டினங்கள் மலர்களிலே தேன் எடுத்து
வயிறார உண்டுவிட்டு செல்லும் மலரடுத்து
அருவிகள் இசைபாட அல்லியும் நடம்புரிவாள்
அன்புடனே தென்றல் வந்துமுத் தமிடுவாள்
இளமையிலே தினம் தினம் இதை அனுபவித்து
இருப்பதிலே தான் எத்தனை எத்தனை சுகம்
நெஞ்சார இதை ரசித்து எழுதுவ தற்கு
கொஞ்ச மேனும் கவிதை உள்ளம் வேண்டாமோ?
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக