குழந்தைகளே...!
ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஒன்றுமில்லாததற்கு செய்யாதே முரண்டு
இரண்டும் இரண்டும் நாலு
இருக்கணும் வாழ்க்கையில் சவாலு
மூன்றும் மூன்றும் ஆறு
முன்னேறிப் படைக்கணும் வரலாறு
நான்கும் நான்கும் எட்டு
நல்லது அல்லாததை விரட்டு
ஐந்தும் ஐந்தும் பத்து
ஐம்புலன் அடக்கினால் இல்லை ஆபத்து
ஆறும் ஆறும் பனிரெண்டு
ஆறுவது சினம் எனப் பழகிவிடு
ஏழும் ஏழும் பதினான்கு
ஏழைக்கு என்றும் மனமிரங்கு
எட்டும் எட்டும் பதினாறு
எட்டும் வரையில் எதிலும் போராடு
ஒன்பதும் ஒன்பதும் பதினெட்டு
உண்பதில் வாயை நீ கட்டு
பத்தும் பத்தும் இருபது
தித்திக்கும் திருப்புகழ் தினமோது
ஒன்றுமில்லாததற்கு செய்யாதே முரண்டு
இரண்டும் இரண்டும் நாலு
இருக்கணும் வாழ்க்கையில் சவாலு
மூன்றும் மூன்றும் ஆறு
முன்னேறிப் படைக்கணும் வரலாறு
நான்கும் நான்கும் எட்டு
நல்லது அல்லாததை விரட்டு
ஐந்தும் ஐந்தும் பத்து
ஐம்புலன் அடக்கினால் இல்லை ஆபத்து
ஆறும் ஆறும் பனிரெண்டு
ஆறுவது சினம் எனப் பழகிவிடு
ஏழும் ஏழும் பதினான்கு
ஏழைக்கு என்றும் மனமிரங்கு
எட்டும் எட்டும் பதினாறு
எட்டும் வரையில் எதிலும் போராடு
ஒன்பதும் ஒன்பதும் பதினெட்டு
உண்பதில் வாயை நீ கட்டு
பத்தும் பத்தும் இருபது
தித்திக்கும் திருப்புகழ் தினமோது
- சரஸ்வதி ராசேந்திரன்.
அருமை... அருமை அம்மா... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் -சரஸ்வதிரசேந்திரன்
பதிலளிநீக்குஅருமை அம்மா...
பதிலளிநீக்குநன்றி-சே.குமார்-----------சரஸ்வதிராசேந்திரன்
பதிலளிநீக்கு