ஞாயிறு, 15 மார்ச், 2015

ரூபன் -யாழ்பாவணான் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய சிறு கதை போட்டி2015

ரூபன்  -யாழ் பாவணான் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதைபோட்டி- தலைப்பு அவர்கள்  ‘தடம் மாறிய பண்டிகை ‘’ கதை நாங்கள்  முண்ணூறு வார்த்தைகளில்

                 தடம் மாறிய பண்டிகை

                                     பொங்கல்
‘’என்னங்க  சொல்றீங்க  நாம பொங்கலுக்கு  கிராமத்துக்கு போறாமா?”
அதிர்ந்துபோய்  கேட்டாள் சுனிதா

‘’ ஏன் அதிர்ச்சியா இருக்கா சுனிதா,வேலை வேலைன்னு இங்க வந்து செட்டிலாகிவிட்டோம்  கிராமத்தையே  மறந்துட்டோம் எனக்கு பழைய நினைவுகள் வந்து விட்டது  ஆஹா   பொங்கல் விழாவை கிராமத்திலிருந்து  அனுபவிச்சு பார்த்தவங்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை  அதான் இந்த வருஷம்  நம்ம பிள்ளைகள் அதை அனுபவிக்கணும்  நினைக்கிறேன்  அதான் இந்த பிளான்  ‘’என்றான்குமார் 
சொல்லிவிட்டானேத்தவிர டிக்கட் கிடைப்பது அரிதாக இருந்தது .மிகவும் கஷ்டப்பட்டு  பஸ்ஸில்  கிடைத்தது .
அப்பா   வர்ணித்த  பொங்கல் விழா பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டகுஷியாக கிளம்பினார்கள்..
பத்து வருஷங்களுக்குப் பிறகு  பிள்ளை  குடும்பத்தோடு வருகுகிறசந்தோஷம் பெற்றவர்களுக்கு பேரக்குழந்தைகளுக்குப்பிடித்த வை  எது என்று தெரியாததால் பக்கத்து ஊருக்குப் போய் புது விதமான பிஸ்கட்டுகள்,சாக்கிலேட்டுகள் என்று வாங்கி வந்து  வைத்தார் .தணிகாசலம் ., டிவியையெல்லாம்  துடைத்து வைத்தார் நாற்காலிஷோபாவெல்லாம் பளீரென துடைத்து வைத்தார் 
ஆட்டோவில் வந்து இறங்கினான் குமார் குடும்பத்துடன் 
வயதையும் மறந்து ஓடிவந்த தணிகாசலம் ‘’வாம்மா,வாப்பா என் செல்ல பேரக்குழந்தைகளா?’’ என்றுகூறி அவ்ர்கள் பெட்டி பைகளை கையில் எடுத்து உள்ளேப்போனார் குமார் நீஉள்ளெ போ நான் கூலி கொடுத்துவிடுகிறேன் ‘’என்று கூறி ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளேவந்தார் தணிகாசலம் 
என்னப்பா குமார் பயணம் சவுகரியமா இருந்ததா? சரோஜா வென்னீர் போட்டு வைத்தாயா  எல்லோரும் குளிக்க ?’’
எல்லாம் ரெடியா இருக்கு   சுனிதா குளிக்கலாம் வாம்மா ‘’ மருமகளை அழைத்தாள்.அப்பாவும் பிள்ளையும் ஊர் நலம் விசாரித்துக்கொண்டார்கள்,  பின் கொல்லைப்புரம் சென்ற குமார் ‘’என்னப்பா ,ஒரு மாடுதான் நிற்குது மற்றவை..?’’  அதெல்லாம் கொடுத்தாகி விட்டது .  நங்க ரெண்டுபேர்தானே உங்க அம்மாவால வேலை செய்ய முடிய்லே  அதான் ‘’என்றார் தணிகாசலம் 
‘ஏம்ப்பா,மாரிமுத்து வறதில்லையா வேலை செய்ய?>’’
‘  நீ பழைய கிராமம்னு நினைச்சுகிட்டு பேசறியா?  மாரிமுத்து மகன் துபாயில்   இருக்கான்  நல்ல மாடி வீடு கட்டிட்டான்     வேலைக்குபோகக்   கூடாதுன்னு சொல்லிட்டான் ,அதனால வரதில்லை  கிராமமே தலை கீழா மாறிட்டுப்பா ‘’
அப்பாசொன்னது நிஜம்தானு  ...கிராமத்தில் நடந்தவைகளைப்பார்த்து புரிந்து கொண்டான் 
நைட்டிகளில் பெண்கள்,,ஹாஃப் டிராயர்க
ளில் ஆண்கள் சகட்டு மேனிக்குப் போய்க்கொண்டிருந்தனர் ’
பொங்கல்னா கல்லில் அடுப்புக்கட்டி அதற்கு கோலம் போட்டு  பானைகளுக்கும் கோலம் வரைந்து புத்தரிசி போட்டு பொங்கல் வைக்கும் அம்மா காஸ் அடுப்பில் அலுமினிய பானையை வைத்து பொங்கலிட்டதை பார்த்து  சுனிதா கணவனிடம்  என்னங்க என்னவோ சொன்னீங்க இப்ப அத்தை இதிலே வைக்கிறாங்க”என்று ரகசியமாக கேட்டாள்குமாரால் பதில் சொல்லமுடீயவில்லை .அடுத்த  நாள் மாட்டுப்பொங்கல் என்றால்  எப்படி காலை நான்குமணிக்ககே எழுந்து அல்லி வட்டம் புள்ளிவட்டம் போட்டு கள்ளிச்செடி நட்டு பூ வைத்து வீடே களேபரம் ஆகும் ஆனால்  மாட்டை சும்மா கு
ளிப்பாட்டி பேருக்கு இரண்டு நெட்டி மாலை போட்டு குங்குமம் வைத்து பூஜை செய்தார் தணிகாசலம்   மாலை மேய்ச்சலுக்குப்போய்வரும் மாட்டை கோனார்கள் வாத்திய இசையோடு அழைத்து வந்து வீடு   வீடாக விட்டு  வேஷ்டி துண்டு என்று மரியாதை பெற்றுக்கொள்வார்கள் என்று பிள்ளைகளிடம் சொல்லியிருந்ததால் பிள்ளைகள் ‘’என்னப்பா   நீ சொன்னதிலே ஒண்ணுகூட நடக்கலையே என்று கேட்க  குமார் அப்பாவை பார்த்தான். ‘’குமார்  எல்லாமே தடம் மாறிட்டுப்பா,   நசிஞ்சு  போயிட்டுப்பா பாரம்பரியம் எல்லாம்     ஏன் வேறு வழியில்லாம நாங்களும் மாறிட்டோம் ,,
‘’   நான் பழைய கிராமத்தை நினைச்சு  பிள்ளைகள் நல்லா எஞ்சாய் பண்ணுவார்களென்று அழைத்து வந்தேன் எனக்கும் ஏமாற்றம் என் பிள்ளைகளுக்கும் ஏமாற்றம்தான் . ரேக்ளாபோட்டி,,ஜல்லிகட்டு என்று ஒன்றுமேஇல்லாமல் வெறுமையாக முடிந்த இந்த பொங்கலுக்காக
எத்தனை கன்வுகளுடன் ஊர் வந்தோம் எல்லாமே நசிந்து போய்விட்டதே  ,மக்களெல்லாம் சிட்டியைப்போல் டிவிக்களில் ஒன்றிக் கிடந்தது பார்க்க வேதனையாக இருக்க   வெறுமையுடன் தடம் மாறிப்போன பண்டிகையை நினைத்து பெரு மூச்சு வீடபடியே ஊர் திரும்பியது குமார் குடும்பம்

சரஸ்வதி ராசேந்திரன்   மன்னார் குடி 

6 கருத்துகள்:

 1. கதை படித்தேன் அம்மா...
  அருமை... வாழ்த்துக்கள்.
  எனது பகிர்விலும் சொல்லியிருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  அம்மா
  கதை படித்து விட்டேன்... வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பரிசு பொருட்கள் மிக விரைவில் வந்தடையும்....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. பழமையின் பெருமையை நினைத்து பெருமூச்சு விடவைத்த கதை. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள சகோதரி,

  திருவாளர்கள் ரூபன் & யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் தாங்கள் இரண்டாம் இடம் பிடித்துப் பரிசு பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  கதை நன்றாக இருக்கிறது. அருமை.
  நன்றி.

  பதிலளிநீக்கு