வியாழன், 4 ஆகஸ்ட், 2016

கவியருவி நோன்பு கவிதை

நோன்பின் மாண்பு
உரித்தது யாவும்
உயரிய தாக்கும்
உயரதின் நன்மை
உயிருற வைக்கும்
உய்விக்குமாம் நோன்பு
உடலமைதி கொஞ்சும்
உயிரருள் விஞ்சும்
உள்ளொளி கிட்டும்
உள்நிற்கும் ஆன்மமே
உணர்த்தும் நோன்பு
அருளின் மகிமை
அறிந்திட ஓதும்
அனுபவம் சொல்லும்
அனைத்தும் சிறக்கும்
அருமருந்தாம் நோன்பு
இறையருள் கூட்டும்
இறப்பையும் வெல்லும்
இறையொளி யாவும்
இயங்கும் சக்தியே
இரமலான் நோன்பு
நன்மை சுரக்கும்
நஞ்சினை நீக்கும்
நம்பிக்கை ஊறும்
நயம்பட வைக்கும்
நன்மருந்தாம் நோன்பு
சுழல்போல் துன்பம்
நிழல்போல் தொடரும்
ஆழ்மனம் ஒன்றே
ஊழையும் வெல்லும்
விழைவனதருமாம் நோன்பு
தொழுகை ஒன்றே
தொய்விலா வாழ்வு
தொடரும் செயலால்
தொடர்ந்திடும் நன்மை
தொழுகையாம் நோன்பு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக