புதன், 3 ஆகஸ்ட், 2016

வல்லமை புகைப்படபோட்டி --70

வல்லமை புகைப்படபோட்டி --70
எல்லைச்சாமி, காவல் தெய்வம் என்று தெய்வங்கள் பல இருந்தாலும், நாட்டில் கொலையும், கொள்ளையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நடந்த வண்ணம் உள்ளனவே. காவல் தெய்வமே கடமை மறந்து நீயும் லஞ்சம் வாங்கி விட்டாயோ? என்று நாட்டின் உண்மை நிலை குறித்த கருத்தினை எடுத்துக் கூறியுள்ளார் சரஸ்வதி இராசேந்திரன்
முன் பெல்லாம்
கண் முன் தெய்வம்
தோன்றுமென சொல்வார்கள்
அன்றாடும் அற்புதங்கள்
ஆற்றும் அதிசயங்கள்
அரங்கேறி உள்ளன ஆனால்
கடமைகள் மற ந்து நீயும்
தடம் புரளுவது ஏன் ?
இறைவன் உண்டு என்று
இறைவனை ஏத்தியே
எழுதினார்கள் பாக்கள் அன்று
இயற்கை சீற்றம் தந்தாய்
எங்கள் தவறென உணர்ந்தோம் வெளியில் செல்லும் பெண்களை
பலியிடும் ஆண்களை கண்டும்
காணாதது மாதிரி இருப்பதேன்?
கொலை கொள்ளை என
கொலைக்களமாக மாறியிருக்கும்
தமிழகத்தை காக்கமல் இருப்பதேன்
தளர்ந்து போயிட்டாயா அல்லது கை
தாழ்ந்துபோய் நீயும் லஞ்சம் வாங்கி விட்டாயா?
வானகம் சாட்சி
வையகமும் சாட்சி
எல்லை சாமியே நீ இனியாவது
கொலைச் சாமியாகாமல் உன் குலப்
பெண்களுக்கு கொடுமை நேராதுகாத்திடு
துக்கம் துயரமெல்லாம் தூரம் போக
திக்கு திசையெட்டும் அருளாலே
மக்களை மக்களாக வாழவிடு
மாக்களாக மாற்றாமல்!
எஞ்சியுள்ள காலமாவது இனியதாக
வஞ்சகங்கள் சூழாமல் காப்பாயாக எல்லை சாமியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக