குடிக்கத் தண்ணீரின்றிக் கண்ணீர் சிந்தும் இந்தக் குரங்கு, ”பாட்டில்(bottle) தண்ணீரையாவது என் கண்ணில் காட்டக்கூடாதா?” என்று மனிதர்களிடம் இறைஞ்சுவதை நம் இதயம்தொடும் பாடலாக்கியிருக்கிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
குரங்கு புத்தி
திருகி திருகி பார்க்கிறேன்
திடீரென இரண்டு சொட்டு நீர்
அது தண்ணீர் அல்ல
என் கண்ணீர்
ஆம் இது தண்ணீர் தேசமல்ல
கண்ணீர் தேசம்
இருக்கும்போது
அருமை தெரிவதில்லை
மூடாமலே கிடக்கும் குழாய்
இப்போது திறந்தே கிடந்தாலும்
காற்றுகூட வரவில்லை
நாக்கு வரளுகிறது கண்கள் இருளுகிறது
யாராவது அம்மா பாட்டில் தண்ணியாவது
தாருங்களேன்
குடியிருப்புகளில் உள்ள
தண்ணீர் டாங்குகளில் மூடியை
தூர வீசிவிட்டு
உள்ளேகுதித்து குதுத்து
கும்மாளமிட்டு நீரை
உள்ளேகுதித்து குதுத்து
கும்மாளமிட்டு நீரை
சிந்தினேன் இன்று கண்ணீரை
சிந்துகிறேன்
என்னிலிருந்து பிறந்தவன் தானே
சிந்துகிறேன்
என்னிலிருந்து பிறந்தவன் தானே
மனிதன் அவனுக்கும் என் புத்திதானே?
சரஸ்வதிராசேந்திரன்
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
வெற்றி மீது வெற்றி வந்து சேர்வது பெருமை....அம்மா வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை அம்மா...
பதிலளிநீக்குநன்றி ரூபன்-சரஸ்வதிராசேந்திரன்
பதிலளிநீக்குநன்றி தனபாலன் ==சரஸ்வதிராசேந்திரன்
பதிலளிநீக்கு