திங்கள், 22 பிப்ரவரி, 2016

பேரிடர் ..டிசம்பர் 1

பெரு மழையில் பெருக்கெடுத்தமனிதாபிமானம்
டிசம்பர் --1
மழை வேண்டி தவ மிருந்த நாட்கள்போக
மழையே ஏன் வந்தாய் நீ போய் விடு என
கெஞ்சும் நாளானதுடிசம்பர் ஒன்றுஅன்று
விண்ணிலிருந்து வீழ்ந்த மழைத் துளிகள்
மண்ணை நனைத்து பின் ஊருக்குள் ஓடி
வெள்ளமாய் பெருக்கெடுத்துபோக இடமின்றி
கள்ளன்போல் எல்லோர் வீடுகளிலும் நுழைய
பயந்து அலறிய மக்கள் உயிர் பிழைத்தால்
போதுமென்றெண்ணி மாடியில் ஏறினார்
இயற்கையின் சீற்றம் அதிகரிக்க அதிகரிக்க
செயற்கை (இன் வெட்டர்) கரண்ட்டும் நின்றது
போனில் அழைக்க முடியவில்லையாரையும்
இரண்டு நாட்களாக பிள்ளைகளும் பசி பட்டினி
பணக்காரர்களுக்கும் பசி என்றால் என்னவென்று
பாடம் கற்பித்தது பேரிடர் மழை
சாதிப்பிரிவினைகள் மறந்து எல்லோரும் சமம்என்று
சாதிப்பு உன்னதத்தைக் காட்டிய நாளது
பெரிய மனிதன் முதல் சிறியவர்கள் வரை
யாராவது வரமாட்டார்களா காப்பாற்றமாட்ட்டார்களா
யாவரும் பரிதவித்து கண்கள் சோர கால் கடுக்க நிற்க
புதிய காற்றாய் களமிறங்கினர் அலட்சியப்படுத்தப்பட்ட
அதிசய இளைஞர்கள் போனிலும் வாட்சப்பிலும்
கூட்டணி சேர்த்து உயிரையும் துச்சமாய் எண்ணி
குடும்பம் குடும்பமாய் அள்ளிச்சென்று கரை சேர்த்தார்கள்
சிறு பான்மை மக்கள் கூட பள்ளி வாசலை திறந்து விட்டார்கள்
சிறு துளி பெரு வெள்ளம்போல் அவரவரால் முடிந்தஉதவிகளை
செய்து சீரழிந்த சென்னையை சீர்படுத்தினார்கள்
அடடா மனிதம் மலர்ந்த தருணங்கள் அவை
காதுக்கு இல்லாத ஈவும் இரக்கமும் இளைஞர்களின்
கண்ணுக்கு இருந்தது, பிஞ்சுகளும் முதியோரும்
கடைசி இழையில் ஊசலாடிய காட்சி கண்டு
இளைஞர்களின் நெஞ்சு உரம் பெற்று சட சடவென இறங்கி
இளைய சக்தியின் உத் வேகத்தை காட்டிய பொழுது
மனிதம் மரிக்க வில்லை மாண்புடன் வளர்ந்திருப்பது புரிந்தது
வளர்க மனித நேயம் வாழ்க மனித மாண்புகள்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக