செவ்வாய், 24 நவம்பர், 2015

புகைப்பட்டகவிதை ---39

ஊரெல்லாம் கேட்கும் வெடிச்சத்தத்தில் எங்கள் வயிறுபோடும் பசிச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை; இருள் மண்டிக்கிடக்கும் எங்கள் இல்லம் தற்காலிகமாய் ஒளிபெறுவது யாரோ கிழித்துப்போட்ட மத்தாப்பின் கணநேர வெளிச்சத்தில் மட்டுமே!’ என, கல்விக்கனவுகளைச் சுமந்து திரியும் ஏழைச்சிறுவன் ஒருவனின் ஏக்கத்தை ஆழமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்--மேகலாராமமூர்த்தி

. எங்கள் அவதரிப்பு                                                                                       
புவியில் போராடத்தான்
உயிரைப்பணயம் வைத்து
உழைக்கிறோம்
கந்தகத்தையும் பாஸ்பரஸையும்
கையில்பூசிக்கொண்டு
சிறார்களைவேலைக்குப்
பயன் படுத்தக்கூடாதென்று
சட்டம் இருந்தாலும்
சட்டத்தை சட்டை செய்யாதவர்கள்
இருக்கும் வரை எங்கள்
குடும்ப வண்டிக்கு பழுதில்லை
[…]
ஊரெங்கும் கேட்கும் வெடிச் சத்தத்தில்
எங்கள் வெறும் வயிறு
போடும் சத்தம் காணாமல் போகும்
இருள் மண்டி கிடக்கும் எங்கள்
இல்லத்தில் யாரோ எறித்துப்போட்ட
மீதமான கம்பி மத்தாப்பின்
ஒளியில் ஏற்படும்
தற்காலிக வெளிச்சம் மட்டுமே
மீதி நேரம் வீடும் வயிறும்
புகைச்சலில் போராடும்
என் போன்ற சிறார்கள்
நன் முறையில் பள்ளிபோக
நான் மட்டும் வெடிக்கிடங்கில்
என் பள்ளிக்கனவுகள்
எப்போது விடியும்?


2 கருத்துகள்: