திங்கள், 17 ஜூன், 2013

ரொம்ப தேங்க்ஸ் -- கல்கி--- 6-7- 2008


ரொம்ப தேங்க்ஸ்
'வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரலாமா ன்னு பெண் வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்க "ஜயா கணவனிடம் சொல்லும்போது மாதவன் உள்ளே வந்தான் .
மாதவா ,வெள்ளிக்கிழமை லீவு போட்டுட்டு போகலாமாடா "என்றதும் "போலாம்பா' என்று உற்சாக குரல் உடனே வந்தது
ராமசாமி போன்போட எதிர் முனையில் எதிபாராத வகையில் பெண்ணே போனை எடுக்க ,
"ஒண்ணுமில்லேம்மா ,வர்ற வெள்ளிக்கிழமை உன்னை பெண்பார்க்க வரலாமான்னு உங்க அப்பா அம்மா கிட்டே கேட்கத்தான் பண்ணினேன் "என்று ராமசாமி சொல்ல ,-
... சார், உங்க பையன் கிட்டே கொஞ்சம் தனியா நான் தனியா பேசணும் ,முதல்ல அவரை மெகாமார்ட் வரை அனுப்ப
முடியுமா ?'பிரியா கூச்சமின்றி கேட்டாள்.
அதிர்ந்து போன ராமசாமி விஷயத்தை ஜெயாவிடம் சொல்ல -'என்னங்க எது இப்படி கூச்ச நாச்சமின்றி கேட்கிறாள் "என்று
திடுக்கிட்டவளிடம் "அம்மா ,அவள் வேலை பார்ப்பவள் ,இந்தகாலத்து பெண் .நீங்கள் அதிர்ச்சி அடைய தேவையில்லை ,
நான் பாத்துக்கிறேன் 'என்று சமாதானம் சொன்னான் மாதவன் .
மாதவன் மட்டும் பெண் பார்க்க போனான் மெகா மார்ட்டுக்கு .
திரும்பி வந்தவனை பெற்றோர்கள்துளைத்து எடுத்தனர் .அவனும் அவளும்பேசிய விவரங்களை சொன்னான் மாதவன்
"மிஸ்டர் மாதவன் ,எனக்கு சுற்றிவளைத்து பேசுவது பிடிக்காது .நான் கேட்கும் கேள்விக்கு நேரடியாகவே பதில் சொல்லலாம் ,அதைத்தான் நான் விரும்புகிறேன் "
"சரிங்க ,கேளுங்க "
நம்ம கல்யாணத்திற்கு பிறகு உங்க அப்பா,அம்மா எங்கே இருப்பாங்க? "
ஏன்?என்னோடதான் '
'நோ ,நம்ம வாழ்க்கையை நாம ரெண்டு பேர்தான் ஷேர் பண்ணிக்கணும் "-அவள்
அப்பா உங்க அப்பா அம்மா ?"
'"எப்போதாவது கெஸ்ட்மாதிரி வருவாங்க '-அவள்
"அப்புறம் ,உங்களுக்கு சமைக்க தெரியுமா ?"-அவள்
'ஏன் ,உங்களுக்கு தெரியாதா ?"-அவன்
"அதற்கில்லை ,நானும் வேலை பார்க்கிறேன் ,வீடு திரும்பினா டயர்ட் ஆயிடும் .என்னால சமைக்க முடியலைன்னா வேலையை நீங்க ஷேர் பண்ணிக்கணும் - " அவள்
'வெல்டன் அப்புறம் என்ன கேள்வி இருக்கு மிஸ் "-அவன்
;"உடனடியாக பிள்ளை பெத்துக்க முடியாது நாலைந்து வருஷம் கூட ஆகலாம் '-அவள்
"அட பாவி ,பெண்ணா வளத்துருக்காங்க ?,என்னடா அநியாயம் ,''-ஜெயாவும் ,ராமசாமியும் அலறி நீஎன்னதாண்டா சொன்னே /?"
'தேங்க்ஸ் ரொம்ப சந்தோசம் ,இத்தனை போல்டா பேசினதுக்கு அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி பேசினதுக்கு ,உங்க சந்தோசமும் என் குடும்ப நிம்மதியும் பறிபோகாம காப்பாற்றியது உங்கள் பேச்சு ,நீங்க எதிர் பார்க்கிற மாதிரியே ஒரு நல்ல
கணவன் கிடைக்க என் வாழ்த்துக்கள் ரொம்ப தேங்க்ஸ் ,நான் வரேன் ''-அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டேன் .
நல்ல காரியம் பண்னேடா ''நிம்மதி பெருமூச்சு விட்டனர் ஜெயாவும் ,ராமசாமியும்
கல்கி -- 6 - 7 - 2008

3 கருத்துகள்:

  1. வணக்கம் அம்மா...

    வலைச்சரத்தில் தங்களைப் பற்றி தெரிவித்துள்ளேன்... நேரமிருப்பின் கீழிருக்கும் இணைப்பின் வழியாக வலைச்சரம் வந்து பாருங்கள்...

    நன்றி...

    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_3.html

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. நடைமுறையில் தற்போதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது! அதை அழகாய் எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு