ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

கொடுத்துவைத்தவள் --தினமலர்--பெண்கள் மலர்---2 --12-- 2006

  உஷா அந்த ஹாலின் அழகான டைனிங் டேபிளை பார்த்து ஒரு முறை பெருமூச்சு விட்டாள் வெள்ளித்தட்டுகள்,பீங்கான்

கோப்பைகள் ,கண்ணாடி கிண்ணங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன ,.நறுமணம் கமழும் சுவையான ,தென்னிந்திய சமையல் ,பாஸ்ட் பூட்,எல்லாம் உள்ளே தயாராகி கொண்டிருந்தன .நெருங்கின தோழியை நீண்ட நாள் கழித்து சந்திக்கப்போகும் சந்தோசம் அவள் மனதில் நிறைந்திருந்தது .
...


கல்பனா கொடுத்து வைத்தவள் ,நிறைவான வாழ்க்கை அவளுக்கு கிடைச்சிருக்கு .ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்தாலும் இப்படி அடிக்கவேண்டும் ஏக்கப்பெருமூச்சுடன் வீட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும்போது நடிகை கல்பனா ஒயிலாக மாடிப்படிகளில் இறங்கி வந்தாள்.

"உஷா ,வந்து ரொம்ப நேரமாச்சா ?'என்று கேட்டுக்கொண்டே ஓடிவந்து அவள் கைகளைப்பிடித்துக்கொண்டால் .கல்பனா

இருவரும் டைனிங் டேபிளில் அமர வேலை ஆட்கள் சாப்பாட்டு அயிட்டங்களை கொண்டு வந்து டேபிளில் அடுக்கினர்

மலைத்துப்போனாள் உஷா

"என்ன மலைச்சு போயிட்டே சாப்பிடு உஷா "

தோழியிடம் பழைய கதைகளை பேசினாள் கல்பனா .ஒவ்வொரு அயிட்டத்தையும் ருசித்து சப்பிட்டப்படி கல்பனா சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தாள் உஷா .

அப்பொழுதுதான் கல்பனாவின் தட்டை பார்த்தாள்உஷா ,

"ஏய் கல்பனா ஏன் எதையுமே சாப்பிடாம சாப்பாட்டை அலைஞ் சிட்டிருக்கே ?'

"உஷா ,நான் கொஞ்சம் சாபபிடணும்.ஸ்வீட் ,பால் தயிர் எதையும் அதிகமா சாப்பிடக்கூடாது ,கிழங்கு வகைகளை தொடவே கூடாது .என் உடம்பு பெருத்துடுச்சுன்னா சினிமாவில சான்ஸ் கிடைக்காது அப்புறம் எப்படி உல்லாச வாழ்க்கை வாழறது ?சினிமாவில நடிக்கிறமாதிரி வீட்டுலேயும் சாப்பிடறமாதிரி நடிக்கவேண்டி இருக்கு ,வெளில இருக்கிறவங்களுக்கு ,நாங்க

கொடுத்து வைத்த மாதிரி தெரியும் ஆனால் நாங்களும் பல வகையிலும் கஷ்டப்படுகிறோம் என்பது தெரியாது சில நேரங்களில் நடிப்புக்கே முழுக்குப்போட்டுடனும் நினைப்போம் ஆனால் சொகுசு வாழ்க்கைக்கு அடிமையை ஆகிட்டோமே

விட முடியலே இக்கரைக்கு அக்கரைபச்சை அவ்வளவுதான் "அலுத்துக்கொண்டாள் கல்பனா .

வீட்டுக்குள் வந்ததும் கல்பனாவின் ஏகபோக வாழ்க்கையைப்பார்த்ததும் பொறாமைப்பட்ட உஷாவி மனது இப்போது அவளுக்காக வருந்தியது .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கத்தான் செய்யுது இதுதான் வாழ்க்கை போலும்



தினமலர் பெண்கள் மலர் 2--12--2006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக