புதன், 8 மார்ச், 2017

தமிழமுது கவிச்சாரல்---14=2-2017--சிப்பிக்குள்ஒளிந்திருக்கும் புன்னகையே

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
- பாவேந்தர்
வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்...
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 14--2--17 நாளாம் போட்டி கவிதையின்
#தலைப்பு_#சிப்பிக்குள்_ஒளிந்திருக்கும்_புன்னகையே.....தொடரவும்
#சுவாசமாய்_நீ_வருவாயா....முடிக்கவும்
வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதி ராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
#கவிஞர்_கவிச்சிற்பி__பெ.தெ.ரசிக்குமார் நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் புன்னகையே என்
சுவாசமாய் நீ வருவாயா*(கண்ணதாசன் சான்றிதழ்)
சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் புன்னகையே
சிறு வயிற்றில் குடியிருக்கும் குலக்கொழுந்தே
உன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கேன்
என் செங்கரும்பே சிந்தையினிக்க நீ வா
நினைத்தாலே இன்பம் விளையுதடா
நீங்கா அன்பை நீ வளர்ப்பாய்
நெஞ்சின் கவலைகள் தீரும்
நெருங்கிய உறவெல்லாம் பாராட்டும்
ஓடி விளையாடும் உன் அழகு
உயிரோவியமாய் தோன்றுமடி
தேடக்கிடைக்காத தங்கம் நீ
தேகம் சிலிர்க்கும் உன் அழகில்
மலடி என்ற பெயர் போக்கி என் மானம் காத்த மலர்க்கொடி நீ உன்
அழுக்கு கையால் தொட்ட உணவுகூட
அமிர்தமாய் இனிக்கும் எனக்கும்
உன் கண்ணுக்கு மையிட்டு நான்பார்ப்பேன்
என் மெய் நோகாமல் நீ வர வேண்டும்
கோடி பணம் சொத்தெல்லாம் வேண்டாம்
தேடி வரும் செல்வம் நீ போதும்அமுதே
என் சுவாசமாய் வருவாயா
சரஸ்வதி ராசேந்திரன்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக