புதன், 24 செப்டம்பர், 2014

வலைச்சரம் அறிமுகம்

எனது வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு நன்றி குமார்......
http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_3.html
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
blogintamil.blogspot.

டி.வி,மற்றும் பத்திரிக்கைகளில் நான் பெற்ற பரிசுகள்

டிவியில் நான் பெற்ற பரிசுகள்
1 ஏவிஎம் நிம்மதி உங்கள் சாய்ஸ் ---ஆடியோ கேசட்
2விஜய் டிவியில் 'கண்ணாடி கதவுகள் ''விமர்சனத்திற்கு ---- 4 கிராம் தங்க காசு
3ஜெயா டிவியில் ஜாக்பாட் ஹோம் வின்நேர்ஸ் கேள்வி போட்டியில் -----5000 RS பட்டுபுடவை
4 மக்கள் டிவியில் - அரசியல் கேள்விகளுக்கு பதில் போட்டியில் ----- இரண்டு முறை இரண்டு வெள்ளி குங்குமச்சிமிழ்
5 கலைஞர் டிவியில் ''வைர நெஞ்சம் ''போட்டியில் ------500 பெறுமான பான்சி புடவை
6ராஜ் டிவியில் ' புத்தம் புது பாடல் ''போட்டியில் ------- பாரகன் செருப்பு ஒரு ஜோடி
7 ஜெயா டிவி குமுதம் இணைந்து நடத்திய ''அண்ணி''தொடர் பற்றிய விமர்சனத்திற்கு ------
2500 RS பட்டு புடவை ஒன்று
மற்றும்
இதயம் மந்த்ரா கடலை எண்ணெய் பற்றிய சிறந்த அனுபவத்திற்கு ------2500 RS பட்டு புடவை
அவள் விகடன் இதழ் நடத்திய ''தினம் ஒரு மிக்சி '' போட்டியில் ----பிரிமியர் மிக்சி குமுதம் நடத்திய ''பொன்னெழுத்து ''போட்டியில் ------ பவுன் மூக்குத்தி
அவள் விகடன் நடத்திய டிப் கேள்வி போட்டியில் ------1கிராம் தங்க நாணயம்
இதயம் நல்லெண்ணெய் நடத்திய ''இதயம் தொட்ட நல்லவர் ''போட்டியில் --- 500 RS பெருமான காப்பர் பாட்டம் பாத்திரம் மூன்று
இதயம் நல்லெண்ணெய் நடத்திய இதயத்தி பூரி வடை போட்டியில் ------- ராசாத்தி நெய்ட்டி
அவள் விகடன் நடத்திய '' தீபாவளி அனுபவங்கள் ''போட்டியில் -----ஸ்பிரே அயர்ன் பாக்ஸ்
அவள் விகடன் நடத்திய '' வாசகியர் கை மணம் '' போட்டியில் ------- 3ஜார் ப்ரீத்தி மிக்ஸ்யர் கிரைண்டர்
மங்கையர் மலர் நடத்திய '' பண்டிகை ஸ்பெஷல் ''போட்டியில் -----2000 RS பெறுமான சில்க் காட்டேன் புடவை
        

வம்சம்

வம்சம்
\
‘’இதோ பாருங்க , நான் எங்க குடும்பத்தை விட்டுட்டு,என் சொந்த பந்தங்களைவிட்டுட்டு,காதலுக்காக உங்களோடு வந்திருக்கேன் , நீங்க ஒத்த ரூபாய் சம்பாதித்தாலும் எனக்கு கவலையில்லை ,ஆனால் அந்த ஒத்த ரூபாய் நேர்மையாய் சம்பாதித்ததாக இருக்கணும் புரியுதா ?’’வள்ளி சொன்னாள் .
‘’புரியுது வள்ளி , நான் இதுவரை அப்படித்தான் ஆட்டோஓட்டி பிழைக்கிறேன் ,இனியும் அப்படியே இருப்பேன் ‘’ என்று சொன்னவன் தான் வேணு,ஆனால் வள்ளி முழுகாமல் இருக்கிறாள் என்று தெரிந்ததும் வேணு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள படாத பாடு பட்டான் .பாவம் வ்சதியான குடும்பத்தை சேர்ந்த வள்ளி காதலுக்காக கஷ்ட படக்கூடாது என்று நினைத்தான் வேணு ,உள்ளூரில் ஷேர் ஆட்டோவந்ததிலிருந்து ஆட்டோவிற்கு வருமானம் குறைந்தது
வேறு யாரையும் தெரியாது வேணுவுக்கு ,ரொம்ப குழம்பிப் போய் இருந்தபொழுது தான் அவ்ன் கூட்டாளி கணேசன் வேணுவை ஒரு கட்த்தல் காரனிடம் அறிமுகப்படுத்தினான் .
கடத்தல் காரன் சொல்கிறபடி கேட்டால் பணம் கிடைக்கும் . வேணு அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை வள்ளிக்குத் தெரிந்தால் கோபப்படுவாளென்று .ஆனால் கூட்டாளி ஏதேதோ சொல்லி அவனை மடக்கிவிட்டான் .பணத்தைப் பார்த்ததும் வேணுவும் மாறிப்போனான்.
வள்ளிக்கும் தனக்கும் பிறக்கப்போகும் குழந்தையின் எதிகாலத்தை எண்ணி ,கணேசன் சொல்லுக்குக் கட்டுப்பட்டான்
இது வள்ளிக்குத்தெரிந்தால் ....அவள் ஏற்பாளா ? ஒரே மனப்போராட்டம் வேணுவுக்கு வெகு சீக்கிரமே கடத்தல் காரனிடமிருந்து தகவல் வர ,ஓடினான் வேணு .
‘’இதோ பார் வேணு , நான் சொல்ற இடத்திலே, நான் சொல்ற அடையாளத் திலே ஒர்வன் கையில் பெட்டியுடன் நிற்பான் . நீன் இரட்டை விரலை காட்டினால் அவ்ன் உன்னிடம் பெட்டியை சேர்ப்பான் .அதை போலீசில் மாட்டாமல் சாமர்த்தியமாக என்னிடம் சேர்த்தால் உடனே யே ஐயாயிரம் ரூபாய் கொடுப்பேன் என்ன சொல்றே?’’
‘’சரி கணேஷ் ,போலீசில் மாட்டிக்கொண்டால் ..?’’
‘’மாட்டிக்கொண்டாலும் என் பெயரை சொல்லக்கூடாது ,மாட்டாம வர்றதுதான் உன் சாமர்த்தியம் உ.ன் மனைவி
வேறு முழுகாமலிருப்பதாக கேள்வி பட்டேன் .இந்த சமயத்தில் நல்ல ஆரோக்கியமான உணவு தர வேண்டாமா ? நான் உனக்கு நிறைய பண உதவி செய்கிறேன் பயப்படாதே ‘’
வேணுவும் தயங்கி தயங்கி பின் ஒத்துக்கொண்டு பெட்டியை சேர வேண்டிய இடத்தில் சேர்த்து பணத்தையும் பெற்றுக்கொண்டான் . அவ்ன் மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் மிதக்க ,வள்ளிக்காக ஹார்லிக்ஸ் ,பழங்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்க் விரைந்தான் .
வீடு பூட்டியிருக்க ,பக்கத்து வீட்டில் விசாரித்தான் .
வள்ளி மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக சொல்ல செக் அப்பிற்கு சென்றிருப்பாள் என நினைத்து ஆட்டோவில் விரைந்தான் .
மருத்துவ மனையில் படுத்திருந்த வள்ளியைப் பார்த்ததும் வேணு மிரண்டு போனான் .’’வள்ளி என்னாச்சுடா உனக்கு?’’
வள்ளி கண்களில் நீர் பெருக மவுனமாக இருந்தாள் .
அங்கு வந்த நர்ஸ் சொன்னாள் .
‘’அவங்க கர்ப்பம் கலைஞ்சுடுச்சு ‘’
‘’வள்ளி,, நர்ஸ் சொல்றது உண்மையா? எப்படி வள்ளி ?’’
துடித்தான் வேணு .
‘’இதப்பாருய்யா ,உன்னை காதலிச்ச குற்றத்திற்காக என் குடும்பத்தை விட்டு ஓடிவந்தேன் நான் ..ஏன்? நீனல்லவன் ,னேர்மையான்வன் என்று தானே? ஆனால் நீ பணத்திற்காக ,வசதிக்காக பாவமான செயலை செய்ய துணிஞ்சுட்டேன்னு நினைக்கும்போது என் மனசே உடைஞ்சுடுச்சுய்யா , நல்ல குடும்பத்தில் பிறந்தவன்னு சொல்றதுதான்யா எனக்கு பெருமை ,அப்படி நேர்மையில்லாத உனக்கு ஏன்யா குழந்தை ? கடத்தல்காரனுக்கு ,பிறந்த பிள்ளையின்னு நம்ம வம்சத்தையே தப்பா பேசறதை கேட்கணுமா நான் ? வேண்டாம்யா அதான் நம்ம குழந்தையை நானே அழிச்சுட்டு இங்க வந்து படுத்துட்டேன் ,இப்படியொரு வம்சம் தழைக்கணுமா?உன்னை கட்டிக்கிட்ட பாவத்துக்காக பிள்ளையை கொன்னுட்டு நானும் பாவத்துக்கு ஆளாயிட்டேன்
உயிரோடு இருந்தா அந்த குழந்தையும் மற்றவர்கள் கேலிக்கு ஆளாகி என்னையும் வசை பாடுமே ..அதான் ....’’கேவி கேவி அழுதாள் வள்ளி .
‘’ஐயோ ,,,வள்ளி .. நான் ஏன் இப்படி புத்தி கெட்டு போனேன் ? என்னை மன்னிச்சுடு வள்ளி ,...எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம் நான் திருந்த .அதற்காக,..பிள்ளையை...
கொன்றிருக்க வேண்டாம் ... எத்தனை கன வோடு வந்தேன் ..’அழுது புலம்பினான் என்னதான் அழுது புரண்டாலும் மரித்த கரு வருமா?
சரஸ்வதி ராசேந்திரன் --தங்க மங்கை ==ஏப்ரல் =2014

கடித போட்டி (வல்லமை இதழ் நடத்தியது ) பரிசு பெற்றது





வல்லமை இணைய இதழில் 
'அன்புள்ள மணிமொழிக்கு' 
என்ற தலைப்பில் நடைபெற்ற கடித இலக்கியப் போட்டியில் 
என்னுடைய இக்கடிதத்துக்கு ஆறுதல் பரிசு என்பதில் 
அளவிலாத மகிழ்ச்சி. 
போட்டியைத் திறம்பட நடத்திய 
வல்லமை இணைய இதழ் குழுவினருக்கும், 
போட்டியை அறிவித்த தேமொழி அவர்களுக்கும்,
நடுவர் இசைக்கவி திரு.ரமணன் அவர்களுக்கும் 
மனமார்ந்த நன்றிகள்.




 அன்புள்ள மணிமொழிக்கு
நலம், நாடுவது அதுவே, ,மணிமொழிஒரு இடத்தில் உள்ள செடியை பிடுங்கி வேறு இடத்தில் நடும்போது அது முதலில் சற்று வாடி பின் தான்
தழைக்கும் அதுதான் இயற்கை ,ஏனெனில் புதிய மனிதர்கள் புதிய சூழ் நிலை ,புதிய இடம் ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும் ,போக போக பழகிடும் ஏனெனில் , நீ வீட்டிலிருந்தபடியே பள்ளியில் இருக்கமுடியுமா?எல்லாஇடங்களிலும் வீட்டிலிருந்த படி சுதந்திரமாக இருக்க முடியாதே,இது உனக்கும் தெரியும்தானே? உனக்கு நான் அறிவுரை கூறுவதாக எண்ணாதே, அன்புரைஎன்று எடுத்துக் கொள்ளவும் நீபுதிய பொறுப்புகளை ஏற்றியிருக்கிறாய் அந்த பதவி மனைவி என்ற பதவி ,உனக்கு இப்போது பொறுப்புகள் அதிகம் நேரமும் இருக்காது ,அதனால், நான் சொல்ல வேண்டிய விஷயங்களை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் மனித வாழ்வின் மகத்துவம் குடும்ப வாழ்வின் வெற்றியை பொறுத்த.துதான் எப்போதும் சுய நலமும் ,சுக வாழ்க்கையும் கெடுதியில்தான் முடியும் .
குடும்ப வாழ்க்கை என்பது ஒரு வேள்வி போன்றது ஒரேகுடும்பத்தில் பிறந்த
நம்மிடையே எத்தனையெத்தனை வேறுபாடாணகுணங்களிருக்கிறது அதே
போல்தான் புகுந்த வீட்டிலுள்ளவர்கள் குணமும் அப்படித்தானே இருக்கும்
அதனால் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் ,தேவைப்படும்போது தியாகமும் செய்யவேண்டும் . .உன் மாமனார் ,மாமியாரை பெற்றவர்போல் பாவிக்க வேண்டும் ,உன் நாத்தி .மைத்துனரை
தங்கை,தம்பி என்று நினைத்துக்கொண்டால் எந்த பிரச்சனையும் இருக்காது
இப்படியாக எண்ணி பொறுமையாகவும் ,சகிப்புத்தன்மையுடனும் இருந்து நீ
புகுந்த வீட்டில் எல்லோரையும் சரிக்கட்டிக்கொண்டு வழி நடத்துவாய் என்று எனக்கு தெரியும் ஏனெனில் நீபுத்திசாலியாற்றே, விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று நீயே சொல்வாயே ,
அதுதான் சிறந்த பண்பு .,வீடென்றால் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும் ,இதை பகுத்துணர்ந்து உன் புத்திசாலித்தனத்தால் எல்லவற்றையும்
வென்று கணவனும் ,மனைவியும் ஒற்றுமையாக வாழ்ந்து நன்மக்கட்பேறு பெற்று குடும்பத்தை மங்கலமாக ஆக்குவாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு குடும்ப பாரம்பரியத்தைகாப்பதுதானே பாரதப்பண்பாடு ,உன்னைப்போல் நானும் உன் பிரிவை தாங்கிக் கொள்ள என்னை தயார் படுத்திக்கொள்கிறேன் சேக்கிழார் சொன்னதை ஞாபகத்தில் வை பெண் மனையறத்தின் வேர் என்பதை .
குடும்பத்தை பற்றிஎன் நண்பர் எழுதிய பாடலுடன் என் கடித்த்தை முடிக்கிறேன்.
கூட்டாமல் கழிக்காமல் குடும்பம் இல்லை
கோணாமல் நாணாமல் இன்பம் இல்லை
நீட்டாமல் முடக்காமல் வாழ்க்கை இல்லை
நெளிவின்றிச் சுளிவின்றி நியதி இல்லை
ஊட்டாமல் ஆட்டாமல் குழந்தை இல்லை
ஓயாமல் சாயாமல் . முதுமை இல்லை
பூட்டாமல் திறக்காமல் கதவு இல்லை
புகழாமல் இகழாமல் வளர்ச்சி இல்லை
மகளே , குடும்ப வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டிய இந்த கவிதையைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன ?
உன் அன்பில் மகிழும் அம்மா அமுதா கணேசன்

உயிரின் இருப்பு --வல்லமை மின்னிதழ்- 21--5--2014

உயிரின் இருப்பு!


பந்த பாசம்
சொந்தங்கள்
என்று காலம்
காலமாய்
இருந்து வந்த
பாரம்பரியம்
சிதைந்து போனது!

இட நெருக்கடி,
பொருளாதாரச் சூழல்
மனஸ்தாபங்கள் எனக்
குடும்பத்தின்
ஆணிவேர்கள்
காய்ந்து விட்டது!
உறவுச் சங்கிலிகளின்
கண்ணிகள்
ஒவ்வொன்றாய்
அறுந்து போனது!
நீர் நிறைந்து நிறைந்து
காய்ந்து வற்றிப்போன
குட்டையில்
வாழ்ந்ததற்கான
அடையாளமாய்
நண்டு ஓட்டின்
சிதிலங்களும்
உள்கவியும்
வாசனையும்
உயிரின் இருப்பை
உணர்த்தியது
வல்லமை மின்னிதழில் வெளி வந்த கவிதை (21-5-2014)

இண்டர் வ்யூ

இன்டர் வ்யூ
மகன் அருணை விட அவனது தாய் சரோஜாவும்,தந்தை ராமமூர்த்தியும்தான் ஒரே டென்ஷனாக இருந்தார்கள்
‘’இதோ பார் ,அருண் நீரொம்ப பொறுமையாக இருக்கணும் ,இன்டர்வூன்னா சம்பந்தமில்லாமல்தான் கேள்வி கேட்பாங்க அதுக்காக கோவிச்சுக்கிட்டு வந்தா ,,யாருக்கு நஷ்டம்? முன்பெல்லாம் நேர்மை இருந்தது ,ஒரு பண்பு இருந்தது இப்ப காலம் மாறிப்போச்சு,,எது கேட்டாலும் பொறுமையா பதில் சொல்லு , நீ இந்த தடவை ரிஜெக்ட் ஆகாமல் இருக்கணும்
அப்பதான் எங்களுக்கும் நிம்மதி புரியுதா ?பார்த்து நடந்துக்க ‘’
சரோஜா சொன்னாள்
‘’ஆமாப்பா, நீ ரொம்ப பொறுப்போடு நடந்துக்குவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு,,பார்த்து நடந்துக்க,குண்டக்க,மண்டக்க கேட்டாலும் கோபப்படாதே’’ராம மூர்த்தி கவலையோடு சொன்னார் .

‘’ நான் பார்த்துக்கிறேன் நீங்க கலைப்படாதீங்க’’ தைரியம் சொன்னான் அருண்
இண்டர்வூக்கான நேரம் நெருங்க, நெருங்க பயம் கவ்விக்கொண்டது பெற்றோர்களுக்கு, அருகில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு ஓடி மகன் தேர்வு ஆகவேண்டுமே
என்று வேண்டிகொள்ள ஓடினர்
அருண்
உள்ளே போய் வணக்கம் கூறினான்
‘’ நீங்க போடுகிற் டிரஸெல்லாம் யார் செலக்ட் பண்ணுவாங்க?’’
இதென்ன கேள்வி பையித்தியக்காரத்தனமால்ல இருக்கு,கோபம் வந்தாலும் பெற்றோர்களை நினைத்து பொறுமையானான்
‘’ நாந்தான் செலக்ட் பண்ணுவேன் சமயத்திலே அம்மாவும் பண்ணுவாங்க’’
’’உங்க சம்பளத்தை யார்கிட்ட கொடுப்பீங்க முதலில்?’’
‘’அம்மாகிட்டதான் ,’’
‘’மனைவி வந்தபிறகு ?’’
‘’ முதல் மரியாதை பெற்றவர்களுக்குத்தான்’’
இன்னும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன, ஆனாலும் திருப்தி இல்லாததால் அருண் நிராகரிக்கப்பட்டான்

“ஏண்டா நீ இப்படி அ நியாயத்துக்கு நல்லவனா இருக்கே ,அதனாலதான் முப்ப்த்தைந்து வயதாகியும் எந்த பெண்ணுமே உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டேன்கிறாள் அவ்ள்கேட்ட கேள்விக்கு நீ ஒகே சொல்லியிருக்கலாமே’’
‘’அம்மா நீ உங்க அம்மா,அப்பாவை விட்டுட்டு என் கூட வரணும்னு சொல்றாள் , நான் சொன்னேன் நீயும் உங்க அம்மா அப்பாவை விட்டுட்டு இருந்தால்...எனக்கும் ஒகேன்னு சொன்னேனே .’’,கோபப்பட்டு எழுந்து போயிட்டாள்
’’ எங்களைப்பற்றி நீஎண்டா கவலைப்படுறே,போடா பொழைக்கத்தெரியாத பிள்ளையாய் இருக்கிறியே’’

வல்லமை தாராயோ?

வல்லமைதாராயோ?
மாலினியின்வீட்டைப்பார்த்து,மாமியார்,மாமனார், நாத்தனார்,மைத்துனன்,அப்பா,அம்மா,தம்பி,தங்கைஏன் உறவினர்  அனைவருமேஅசந்துபோய்,பாராட்டினர்
மாலினிக்கு சிரிப்பு வந்தது.அன்று அவள் வேலைக்கு
கிளம்பியபோது,வெளியில்வேலைக்குப்போய் கஷ்டப்படனும்னுஅவ,சியமில்லே,என்பிள்ளைசம்பளம்  நடத்தினர்இன்றுபெண்கள்,,ஆள்,ஆளுக்குகருத்தை
 வீசினர்,கணவன்வசந்த்மட்டும்,ஆட்சேபிக்கவில்லை
அன்றுமாலினி,யோசித்திருந்தால்,,இன்றுஇந்தவீடு,வசதி,பிள்ளைகளின்படிப்பு,என்றெல்லாம் உச்சத்திற்குபோயிருக்கமுடியாதே,பொறுக்கமுடியாத
உறவினர்கள்வாய்க்கு வந்தபடியெல்லாம்வம்புபேசினர்,வீட்டின் அழகில்மயங்கிய மாமியார்,இரண்டுஇடத்திலும்வேலைபார்ப்பதுகஷ்டம்னுசொன்ன்னேன்என்னை தப்பாபுரிஞ்சுகிட்டீங்க,என்றுசொல்லிஅந்தர்பல்டிஅடித்தார்.மாலினிக்குசந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது அவ்ளது மானேஜர் கொடுத்த வெள்ளிகுத்துவிளக்குஎல்லோரையும்கவர்ந்ததுஅதுதான் மாலினிக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது அவர்,ஏன்,இவ்வளவு செலவு செய்து அன்பளிப்பு செய்யணும்னு குழம்பினாள்,,மாலினி குடும்பம்வாடகை வீட்டைவிட்டுபுது வீட்டிற்கு குடிபோனது,.. நாட்கள்.,ஓடியது ஊர்,கண்பட்டதுபோல்
மாலினிக்கு,சோதனை,வந்தது,
அலுவலகத்தில்,ஒருநாள்
‘’என்ன,மாலினி,போனவாரம்,கொடுத்த,தபால்களையெல்லாம்,சரி பார்த்துடெஸ்பாட்ச்,பண்ணிட்டீங்களா?’’கேட்டார்மானேஜர்,மதனகோபால்.
‘’சாரி,சார்போனவாரம்லீவு,போட்டதால்அதை ரெடி பண்ணமுடியவில்லை,இப்ப,பார்த்துடறேன்,’’என்றாள்மாலினி
‘’பரவாயில்லை,இன்னைக்கு,இருந்து,முடிச்சு,கொடுத்துட்டு,போங்க’’
அவர்,.  நோக்கம்புரியாமல்,மாலை மணி,ஆறரை ஆனதுகூட தெரியாமல்,வேலை பார்த்துக்கொண்டிருந்தாள் மாலினி அலுவலகமே காலியாகிவிட்டது.வாட்ச்மேன் வடிவேலுவந்து’’மேடம்
இன்னும் வேலை முடியலையா? நான்காஃபி குடிக்கப்போறேன் உங்களுக்கு வாங்கி வரவா?’’கேட்டான்
;;’ நோ தாங்க்ஸ் நான்வீட்டுக்குப்போய் குடிச்சுக்கிறேன்’’ அதற்குள்,அங்கு வந்த மேனஜர்’’வடிவேலு  ப்ளாஸ்க்கை எடுத்துகிட்டுபோய்
உடுப்பியிலே இரண்டு காஃபி வாங்கிட்டுவா’’?ஆணையிட்டார்
‘’  நீங்க,வீட்டுக்குப்போகலே, நான்முடிச்சுட்டுபோறேன்
பயப்படாதீங்க?’’
‘’இல்லே மாலினி  உங்கிட்டே இன்னொரு வேலை இருக்கு அதையும் முடிச்சுகொடுத்திட்டீங்கன்னா  நான் போயிடுவேன்’’
‘’என்ன வேலைசார்’’
வடிவேலு போனதை  நிச்சயித்துக்கொண்டுமாலினியின் அருகில் வந்தார்,
’’இதோ இந்த செல்லைப்பாருங்க’’என்று ஆன்செய்தார்
அந்த செல்கேமராவில்..சே  பார்க்கமுடியாமல் அவமானத்தால் கூனிக்குறுகிதலைகவிழ்ந்தாள்
மானேஜர்சிரித்தபடியே’’மாலினி ஏன் பேசாமடந்தையாய் ஆகிவிட்டாய் ?’’
மாலினி நற நறவென்று பல்லைகடித்தாள்
‘’இதிலே நீ அவமானப்பட ஒன்றுமில்லை,ஒரே நாள்
என் இச்சைக்கு அடி பணிந்துவிட்டால் உனக்கு இன்னும் பல சலுகைகள் அளித்து
பிரமோஷனும் வாங்கி கொடுப்பேன்  என்ன சொல்றே?’’
 ‘’சீ நீ ஒரு மனுஷனா? கல்யாணமான ஒரு பெண்கிட்டே இப்படி நடக்க வெட்கமாயில்லே?’’
‘’இதிலேவெட்கப்பட என்ன இருக்கிறதுஅநாவசியமா நாம ஒரு எல்லைக்குள் குறுக்கிக் கொண்டு வாழணும்?வாழ்க்கையை இஸ்டம்போல் வாழ்வதற்காகத்தான் நமக்கு தரப்பட்டிருக்கிறது பயப்படாதே’’
‘’அடப்பாவி,இன்னொருத்தன் மனைவியிடம்  நீதாறுமாறாபேசறதே தப்பு அதிலும் இப்படி என்னை கீழ்த்தரமா  போட்டோ வேறு எடுத்துட்டு..சே  இப்பபுரியுது
நீஏன் இவ்வளவு காஸ்ட்லியாபிரசண்ட்பண்ணேன்னு மரியாதையாசொல்றேன் வேண்டாம்
''எனக்கு  வேண்டுமே  பயப்படாதே இந்த விஷயம் நம்ம இரண்டு பேருக்குமட்டும்தானே தெரியும் , இதை விடுத்து நீயாக ஏதாவது செய்தாலும் இந்த அலுவலகத்தில் யாரும் என்னை தப்பாகவே யோசிக்கமாட்டார்கள் ,உன் பேச்சு  எடுபடாது ஏனெனில் இதுவரை உன்னை  நான் மரியாதையாகதான் நடத்திருக்கிறேன் இப்பவும் நமக்குள் நடப்பது நமக்குள்தான் இருக்கும் ,என்ன சரியா?'        இவன்  பசுத்தோல் போர்த்திய புலியாக இருந்திருக்கான் இத்தனை நாளும் சே இந்த ஆண்கள் பெண்களின் மென்மையை பலவீனமாக அல்லவா நினத்துக்கொள்ளுகி றார்கள் ,பெரியவர்கள் சொல்வதுபோல் வேலைக்கு வந்திருக்கக்  கூடாதோ?
''என்ன மாலினி யோசிக்கிறாய் ?எனக்கு இணங்காவிட்டால்  இந்த படம் நெட்டில் உலா வரும் பரவாயில்லையா ? நீ என்னை மாட்டிவிட நினைத்தால்....இப்பவே நெட்டில் போட்டுவிடுவேன் உன் கணவர் ,மாமனார் ,மாமியார் எல்லோரும் உன்னை கேவலமாக பார்ப்பார்கள் போதாதற்கு நான் கொடுத்த கிப்ட் வேறு எல்லோரையும் சந்தேகப்பட     வைக்கும் என்ன சொல்றே ?''
மூர்க்கனும் ,முதலையும் கொண்டது விடா   இவனை இப்போது ஏதாவது சொல்லி சமாளிப்போம்  என் எண்ணி ''சார் இந்த படத்தை அழித்து விடுங்கள் ,நான் யோசித்து சொல்கிறேன் ''
''ஏன் ஏதாவது குறுக்கு வழி யோசிக்கிறாயா? ஒரு நாள் அவகாசம் தருகிறேன் நல்ல பதிலை சொல்லு .''மானேஜர் சொல்லி முடிக்கவும் வடிவேலு வரவும் சரியாக இருந்தது ''.சரி மாலினி நாளைக்குள் முடித்து விடுங்கள் ,வீட்டிலே தேடப் போறாங்க நீங்க கிளம்புங்க ''நல்லவன் போல் பேசினான் மதனகோபால் ,
வீட்டிற்குப் போன மாலினிக்கு அழுகையாக வந்தது இரவு தூக்கம் வரவில்லை   நிறைய வருத்தப்பட்டாள்நிறைய வருத்தப்பட்டாள்வேலையை விட்டு விடலாமா?இல்லை தற்கொலை பண்ணிக் கொள்ளலாமா? வேலையை விட்டால் கடனை யார் அடைப்பதுதற்கொலை பண்ணிக்கொண்டால் மட்டும் அவப்பெயர் மறைந்து விடுமா? பெண்களின் இந்த மனோபாவத்தைகண்டுதான் ஆண்கள்துணிச்சலாக இப்படிப்பட்ட காரியங்களை செய்கிறார்கள்.இதற்கு இடம் தரக்கூடாது ,இல்லை என்றால் மறுபடிபெண்கள்குண்டு சட்டியில் குதிரை ஓட்டவேண்டியதுதான் ,காலம் காலமாக பெண்களைமுடக்கிப்போட  நினைக்கும் ஆண்களுக்கு  ஒரு பாடம் கற்பிக்கனும் ,பெண்னின் மென்மையேவலிமை என்பதற்கு   ராமயணமே சாட்சி  தேவர்களனைவரையும்
ஒடுக்கி மூவுலகையும் அடக்கி ஆண்ட வலிமைக்குச் சொந்தக்கரன் ராவணன் அவனது அழிவுக்கு காரணமானவள் சீதாபிராட்டி  ஏன் மகளிர் மட்டும் படத்தில்அந்தமூவரும்பாடிய மொத்து மொத்தனும் பாடல் நினைவுக்கு வந்தது  நெடுநேரம் யோசித்து ஒரு முடீவுக்கு வந்தாள்  கணவனையும் மற்றவர்களையும் கூட்டி விவரத்தைச் சொல்லஅவ்வளவுதான் ஆளாளுக்கு  இஷ்டம் போல் பேச ஆரம்பித்து விட்டனர் வேலைக்கு போனதே தப்பு என்பதுபோல் பேச-மாலினி வெகுண்டாள்
‘’இது மாதிரி ஒரு பிரச்சனை வெளியில்  நடந்தாலெல்லோரும் எப்படி பேசுவீர்களோஅப்படித்தான் பேசுகிரீர்கள்.யாராவது ஒருவரால் கூட தீர்வு சொல்ல முடியுதா?’  நீங்கள் நான்  சொல்றபடி கேட்டால் தீர்வு காண முடியும்  நேரடியாக மோத நினைத்தால் அவன் தப்பித்து விடுவான் என்ன சரியா?’’ எல்லோரும் ஒகே சொன்னதும்  மாலினி  தன் அறைக்குள்சென்றாள்  வல்லமை தாராயோ என்று வேண்டிக் கொண்டு  படுத்தாள்
காலையில் மதனகோபால்  பேசினார் ‘’சார்  நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் ,என்னால என் குடும்ப கவுரவம் கெடக்கூடாது ,என் குடும்பத்திற்கும் இது தெரியக்கூடாதுநான் உடன் படுவதாக முடிவு செய்து விட்டேன் ,,அதனால
 நான் என் தோழியின் வீட்டிற்கு உங்களை அழைக்கிறேன் ‘’
‘’என்னை மாட்டிவிடவா யோசிக்கிறாயா  மாலினி ’’
‘’அயோ என்னை நம்புங்க சார் ,என் தோழி ஊரில் இல்லை வீட்டு சாவி என்னிடம்தான் இருக்கிறது நான் எப்படி வாக்கு தவறாமல் நடக்கிறேனோ அதேபோல் நீங்களும் அந்த செல்லில் உள்ளதை அழித்து விடணும் சரியா?’’
நீ புத்திசாலின்னு எனக்குத்தெரியும் மாலினி  இதோ புறப்பட்டு விட்டேன் இன்னும் ஐந்து நிமிடத்தில் அங்கேஇருப்பேன் ‘’
சொன்னபடியே வாயெல்லம் பல்லாக   உள்ளே வந்தான்
‘’வாங்க சார் ‘’வரவேற்ற மாலினி அவன் உள்ளே வந்ததும் கதவை சாத்தினாள்
‘’என்ன மாலினி கதவை சாத்தரே?’’மிரண்டான் மதனகோபால் ’’ஏன் சார் நாமே திருட்டுத்தனமாக வந்திருக்கோம் இதில் கதவை திறந்து வைத்தா அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டமுடியும் ?அதனால்தான் ‘’ உட்காருங்கள் சார் இதோ வறேன் ‘’என்று  கூறி உள்ளேபோய் சைகை காட்ட
அவள்வீட்டார் அத்தனை பேரும் கையில்ஆளுக்கொரு கட்டையுடன் நிற்க;அரண்டுபோன மதனகோபால் செவதறியாமல் எழுந்து நின்றான்
அடே உட்காருங்க மாப்பிள்ளை நாங்க எல்லோரும் சேர்ந்து
மாலினியை உங்களுக்குத் தாரை வார்த்து தர வேண்டாமா?’’
என்று கூறி அவனை துவட்டி எடுக்க அலறி மன்னிப்பு கேட்டான் அவன் கையிலுள்ள செல்லைப்பிடுங்கி சிம்மை எடுத்து விட்டு உடைத்து போட்டார்கள்,,வேற் ஏதாவது செய்ய நினைத்தால்  நீஉயிரோடு இருக்க முடியாது ‘’என்று மிரட்டி அடித்தனர்
‘’ ஏண்டா பொம்பளைங்கன்னா உங்களுக்கு கிள்ளுக் கீரையாபோயிட்டா  எத்தனை காலத்துக்குத்தான்  நீங்க இது மாதிரி அசிங்கமா போட்டோ எடுத்து பிளாக் மெயில் பண்ணுவீங்க >வெட்கமாயில்லெ நீஎன்ன க்ககூசில்    உள்ளதையா திங்கறே உன் புத்தி ஏன் இப்படி போச்சு நாங்க
மென்ன்மையானவங்கதான்  இன்முகமானவங்கதான் ஆனால் எங்களை சீண்டினால் எங்க உண்மை முகத்தைபார்ப்பீங்க ,இனிமேலாவது உன் மனைவிக்கு துரோகம் செய்யாமல் மற்ற எல்லா பெண்களையும் தாயா சகோதரியா பாரு பிழச்சுப்போ’’ விரட்டினர்
வாழ்வின் அடி தாங்க முடியாமல் தப்பித்து வந்தான் மதனகோபால்









9



/




விடை --வல்லமை மின்னிதழ்--ஜூலை 2---7--2014




                                விடை


              நாணத்தால்           சிவந்த             கண்கள்

              நகைதவழ்ந்து        மின்னும்         இதழ்கள் 


              மான்கொடுத்த        மருட்               பார்வையளே 

              மனமிலையோ       வாய்                மலர்த்த

              
              தங்கத்தில்               வைரம்           பதித்ததுபோல்

              அங் கமெலாம்        அழகு             மிளிர்ந்திட 

              சிந்தையினிக்கும்     செந்தமிழ்      சிலையே

              வந்து தானாக           மலர் வாய்     திறவாயோ


               நாளுக்கு                 நாளுன்னை     நினைந்திரங்கி

                நான் மெலிந்து      போனேன்          வாடும்  என் 

                 தோளுக்கு           தோள்கொடுக்க    மனமிரங்கு

                  வாள் தோற்கும்   விழியழகு        செல்வியே

                  வாய்  மலர          என்னதடை  ?     ஏது தடை ?


                    உன்னை            சிலையென      வணித்ததாலா


                 நான் விடுத்த      சொல்லுக்கு      விடையேயில்லை


                  வல்லமை மின்னிதழில் வந்தது    ஜூலை 2    2014


              

பாரதியே உன்னை மறப்போமா?

    பாரதியே  உன்னை மறப்போமா?

                          வீரத்தின்  விளை  நிலமே
 
                           விடுதலை இயக்கத்தின்ஆதாரமே
                          நீவாங்கித் தந தசுதந்திரத்தால்  நாங்கள்
                            
                           சுதந்திரமாய் இருக்கிறோம்  
                       உன் பாக்களையும் பாடுகிறோம்  எப்படி?
                                பார் ,பாரதியே   பார்
                        
                               பாருக்குள்ளே  நல்ல நாடு--- எங்கள்
                                 (bar)பார்   அது    நாடு  ,என்று
                           குடும்பம் இரண்டு பட்டால் இங்கு வாழ்வு--அது 
                            இல்லையெனிலனைவருக்கும் தாழ்வு
                           
                         ஜாதி ,மதங்களில் அரசியல் செய்வார் --அவர்
                               ஜென்மம் எடுத்ததே அதற்காகத்தான் தேசத்தில்
                         அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
                         அக்கிரமங்கள் செய்வதற்குஅச்சமில்லையே
                        எங்கும்  ஊழல் என்பதே பேச்சு ----  நாங்கள்
                        எல்லோரும் ஏற்றுக்கொள்வதே உறுதியாச்சு
                        ஓடி விளையாடி காலை உடைச்சுக்காதேபாப்பா-- நீ
                       உட்கார்ந்துவீடியோகேம்  விளையாடு
                        காக்கை குருவி எங்கள் ஜாதி அதனால்தான்
                      எங்க ளைப் போல் செல் போன்  டவரிலேயே
                       குடியேறி சமாதியாகிறது
                       நீ கண்ட கனவு   நினைவாயிற்று
                       கரண்டி பிடித்த காரிகையர்கள்
                       கணனியில் கலக்குகிறோம்
                        பாதகம் செய்பவரை கண்டு 
                       பயந்து  ஒளிகிறோம்
                      உன் பாட்டுத் திறத்தால் அக்கிரமம் கண்டு
                     வீரம் வருகிறது ஆனால் அந்த வீரம் 
                    வஞ்சகர்களால்  பேரம்  பேசப்பட்டு 
                      ஓரம் போய்விடுகிறது 
                     வீழ்வேனென்று நினைத்தது   நீமட்டுமல்ல 
                     விலைவாசியும்தான் 
                        ஆனாலும் உன்னை நாங்கள் மறக்கவில்லை
                      உன் நினைவு நாளன்று விழா எடுத்து
                     உன் புகழ் பாடுகிறோம்,பாரதி  உன்னை நாங்கள்
                    மறப்போமா?உன்னை மறப்போமா?
                     மறுபடி நீ வந்துதான் இந்த நாட்டில் தூர் எடுத்து 
                    சுதந்திரத்தின்  அர்த்தத்தை விளக்கவேண்டும்
                      வருவாயா?பாரதியே!

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

சுதந்திரமாய்...


Aug 15

                                        சுதந்திரமாய்      ......


                           கண்ணாய்  தலைவரெல்லாம்

                           காத்து          நமக்களித்த 
  
                           சுதந்திரத்தை  காத்தோமா?


                           அ ந் நியரை விரட்டி விட்டொமென

                             அடைகிறோம்  ஆனந்தம்  ஆனால் 

                           அ ந் நிய  பொருள்களை

                           பொருளாதர ஆதிக்கத்தை
                   
                           விரட்டி  விட்டோமா?

                          பகலில் கூட பெண்கள்
 
                          சுதந்திரமாக ந்டமாடமுடிகிறதா

                         காமுகர்களால் !   ,சுதந்திரமாய்

                         எல்லா     துறைகளிலும்

                         லஞ்சமும் .ஊழலும் செய்து

                          வஞ்சகமாய் திரிவதைத்தானே
                        
                         பார்க்கிறோம் 

                        இது 67-ம் ஆண்டு சுதந்திர தினமாம் 
 
                        இனியாவது லஞ்சம் ஊழல் தவிர்த்து
 
                        அ ந் நிய பொருளாதார 
 
                         ஆதிக்கத்தை  விரட்டி 

                         பெண்களை கண்ணென மதித்து

                         உண்மையான சுதந்திரத்தை 

                        சுவாசிப்போம்  சுத்ந்திரமாய்..

என் பார்வையில் கண்ணதாசன்

                                           என் பார்வையில் கண்ணதாசன்

    கண்ணதாசன்   படிப்பறிவு இல்லாவிட்டாலும் பட்டறிவால் வாழ்க்கை அவலங்களை  பாடல்களாக புனைந்தவர்.ஒரு நாத்திகனாக இருந்து  ஆத்திகமானவர் கதை ,கவிதை ,கட்டுரை,அர்சியல் என்று எல்லாத்துறையிலும் எழுதுவதில்வல்லவர் , வீரம் ,காதல் , நகைச்சுவை   முதலிய ஒன்பான் சுவைபடவும் பாடும் கவிஞர்.

தமிழ் திரைப்பட வரலாற்றில்  பல்லாயிரகணக்கான  பாடல்களை எழுதி  மக்கள்மனதிலே நீங்காத இடத்தை பிடித்து  சிம்மாசனமிட்டவர். ..பழைய தலைமுறையிலிருந்து,இன்றைய தலைமுறை வரை அவரது பாடல்களை  விரும்பி பாடுவதிலிருந்தே புலப்படும்  .வாழ்க்கையின் நிதர்சங்களையே பாடல்களாக புனைந்தவர் .அவருக்கு மட்டுமீலை  நம் ஒவ்வொருவருக்கும்கூட அதுபொருந்தியிருக்கிறன .என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கலான நேரங்களில் அவர் பாட்டுகள் மன அமைதியையும் , தெளிவையும் தந்திருக்கின்றன.
‘’அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவிள்ளாத  வெள்ளம் வந்தால் ஆடும் ’’
இன்ப நிலை வந்து விட்டால்  துன்ப நிலை மாறிவிடும்.இது உண்மைதானே?
என்னதான் அண்ணன் தம்பியாக இருந்தாலும் ஒருகஷ்டம் வந்தால் ,எத்தனை பேருக்கு உதவ மனம் வரும் ?அதைத்தான்  பாட்டாக வரைந்து குமுறுகிறார்
எப்படி,,  ;;அண்ணன் என்னடா தம்பி என்னடா
                    அவசரமான  உலகத்திலே
                    ஆசை கொள்வதி ல்  அர்த்தமென்னடா
                    காசில்லாதவன் ‘’

  நெருங்கிய உறவினர் இறந்து விட்டால்  மனம் விட்டே போய்விடும்  ஆனால் உண்மை என்ன?
                                     போனால் போகட்டும் போடா  இந்த
                                     பூமியில் நிலையாய்  வாழ்ந்தவர் யாரடா

                                    வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த
                                    மண்ணில்  நமக்கே  இடமேது?
எத்துனை கருத்துச் செரிவான பாடல் இது
நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்க வில்லை
       பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு  கண்
        பார்வை   போடுதே    சுருக்கு

‘’ வாழைத்தண்டு  போல உடம்பு   அலேக்   நான்
  வாரி அணைச்சா  வழுக்குறீயே  அலேக் ‘’

அவர்  தனக்கு பிடிச்ச தத்துவப்பாடல் என்று குறிப்பிட்டது
  ‘பரமசிவன்  கழுத்திலிருந்து  பாம்பு   கேட்டது
   கருடா சவுக்கியமா   யாரும்
  இருக்கும் இடத்தில் இருந்து கொண்டாள் எல்லாம் சவுக்கியமே

இது மட்டுமா? கனி பிழிந்த சாரங்களினால்  காதல் கவிதைகளையும்  தேன் சொட்டச்சொட்ட பாடி உள்ளார்
             ‘’பார்த்தேன் ,சிரித்தேன் பக்கம் வரதுடித்தேன்
                உனைத்தேன் என   நான் நினைத்தேன் ’’

          நான் மலரோடு தனியாக ஏன் இங்கு  நின்றேன் ‘’
          என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன் ‘’  எத்தனை நாசுக்கான
பாடல் இது
மனிதனின் குண இயல்புகளையும்  படம் பிடித்து  காட்டுவதில் அவருக்கிணை அவரே

‘’ போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே அதில்
  பொய்யும் புரட்டும் கலந்து பூமியை கெடுத்தானே’’

கண்ணதாசன் தன் குறைகளை என்றுமே மறைத்ததில்லை.,மதுத் தண்ணிர் விட்டேதான்   தன்  கவிதைகளை வளர்த்திருக்கிறார் ,அதை கூட பாடலாக வடித்திருக்கிறார்   ‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
                                          ஒரு கோலமயில் என் துணையிருப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் ‘’எழுதி தான் ஒரூ முழுமையான ஆன்மீக வாதின்னு நிரூபிச்சிட்டார் , யேசு  காவியம்  பாடி  எம்மதமும் சம்மதம் என்பதை காட்டியுள்ளார்

  ‘’ மண்ணிடை யேசு மறுபடி  வருவார் என்பது  சத்தியமே

     புண்கள்     இருக்கும் வரை மருந்து தேவை நித்தியமே’’

கண்ணதாசன்  சாக வில்லை அவர் பாடல்களாலே  நம்மிடை வாழ்ந்துகொண்டிருக்கிறார்  என்பதுதான்     நிஜம் .
என் சிற்றரிவுக்கு எட்டியது  கொஞ்சமே ,அவரப்பற்றி பேச  தாள்போதாது, நாள் போதாது ,,அவர் புகழ் ஒலித்துக்கொண்டெதான் இருக்கும் ,எங்கள் இதயம் இயங்கும் வரை அவர் பாடல்கள் ஒலித்துக்கொண்டெதான் இருக்கும்
அவரின் பாடல் நெஞ்சை அள்ளக்கூடியது ,அதே சமயம் ஆழ்ந்த இலக்கிய அழகு கொண்டது ,அவரின் பி டித்தமான  நடையும் ,சொல்லழகும்  எல்லோரையூம் மயக்குபவை ,காவிய ரசம் பொருந்தியவை ,கால்த்தையும் மீறி நிற்கக்கூடியவை  என்பது மிகையல்ல,.கண்ணதாசா  உன் புகழ் எண்ணதாசா..    

 சரஸ்வதி ராஜேந்திரன்











‘’







வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

                                                          வெந்தணல்


                                                   தினசரி                      இதழ்களில்

                                                   தினம்                       வரும் செய்தி

                                                  மனிதர்களின்            காமம்
                 
                                                     மரண                       குழிவெட்டும்
                
                                                   சோகம்                         தினமும்

                                                    மலராத                     மொட்டுகளையும்

                                                   மதி கெட்டு                 கசக்கும்

                                                   காமுகர்                      கூட்டம்

                                                 கொலை                        கொள்ளை
                                    
                                                 லஞ்சமயம்                 ஊழல்

                                                 வித விதமாய்           சாதிசன சண்டைகள்

                                                விலையுயர்                 ஏழ்மை வலிகள்

                                                மத வெறியில்             வன்முறைகள்

                                               இத்தனையும்                அரங்கேறுகின்றன
                                       
                                                சுதந்திரமாய்                 சுலபமாய்

                                                பொது வெளியில்        படும்

                                                அவஸ்தைகள்             கண்டும்

                                                  அரசியல்                       வாதிகள் கூட
                                          
                                                  அரசியல்                       பண்ணுகிறார்கள்

                                                  மக்களிடமும்            அவர் தம் மக்களிடமும்

                                                  பொறுக்க                     முடியாத

                                                   பூமித்தாய்க்கும்        கூட,அடிக்கடி


                                                  பிரஷர்                          வருகிறது(காற்றழுத்தம் )
                
                                                  புயலாக                         ஆடுகிறாள்

                                                  நீராகவும்                        ஓடுகிறாள்

                                                  ஆனாலும்                      குளிரவில்லை

                                                   அக்கிரமங்களின்     வெந்தணல்

                                                   அப்படியேதான்         இருக்கிறது



                        சரஸ்வதி  ராஜேந்திரன்

                         sathiramannai@gmail.com






                                                   

திங்கள், 23 ஜூன், 2014

வி ஐ பி வியாதி ---கல்கி---23-8-2009


தெருவெங்கும் மந்திரியின் உருவத்தை தாங்கிய பிளக்ஸ் போர்டுகள் , பேனர்கள், கொடிகள்
மந்திரி அந்த தெருவில் நடக்கும் திருமணத்திற்கு தலைமை தாங்க வருகிறார் என்பதால்
தெருவே முதல் நாள் மாலையிலிருந்தே வண்ண விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தது
தெருவின் ஓரங்களில் இரண்டு பக்கமும் சீரான இடைவெளியில் வட்ட வட்டமாய்
பிளீச்சிங் பௌடரினால் கோலமிடப்பட்டிருந்தது, தெருவே கட்சி கறைகளாய் காட்சியளித்துகொண்டிருந்தது.
எல்.கே.ஜி படிக்கும் பேரனை பள்ளிவிட்டு அழைத்துவரும்போது தெருவின் கோலத்தை
பார்த்து நடந்து வந்தவன்.
" என் தாத்தா காரெல்லாம் நிறைய வருமா?"
" வெடியெல்லாம் போடுவாங்களா?"
நிச்சயமா போடுவாங்க, காது கிழிய
" இது என்ன தாத்தா வெள்ளை வெள்ளைய பவுடர்?
அது பிளீச்சிங் பவுடர்
" அதை எதுக்கு போட்டிருக்காங்க?
வியாதி பரவாமலிருக்க
"எத்தனையோ கல்யாணம் நடந்துதே, அப்பவெல்லாம் போடலிய ஏன்?
இது வி . ஐ. பி வரும்போதுதான் போடுவாங்க
" இப்ப புரியுது தாத்தா"
என்ன புரிந்தது? புரியாமல் கேட்டார் தாத்தா!
வி. ஐ. பி களாலதான் வியாதி பரவுது இல்லையா தாத்தா?
தாத்தாவுக்கு சரியான பதில் தெரியவில்லை!!!

கல்கி 23 /08 /2009 மன்னைசதிரா

அட்டாக்--குமுதம்==6-4-2011


மாசிலாமணிக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் பண்ணி யே ஆகணும்முனு டாக்டர் சொல்லிட்டார் . இரண்டிலிருந்து மூன்று இலச்ச்ங்கள் ஆகலாம் .
சிக்கனமா யிருந்து நே ர்மை யாய் சம்பாதித்து முன்னுக்கு வந்தவர் .கால்கு லேட்டட் பெர்சன் வயது எண்பது
அவருக்கு சம்மதமில்லா விட்டாலும் மனைவி தன் கணவருக்கு பைபாஸ் பண்ணியே ஆகவேண்டும் என
உறுதியாகஇருந்தாள் ,அன்பு கணவராயிற்றே மூன்றைஇலச்சங்களை விழுங்கி மாசிலாமணி உயிர்பெற்றார் வீட்டற்கு வந்ததும்
" பைத்தியக்காரியா இருக்கியே இந்த வயசிலே இவ்வளவு செலவு தேவையா ? போனால் போகட்டுமுன்னு விடாம காசை கரியாக்கிட்டே
" என்னங்க இப்படி சொல்லுறீங்க ? எனக்கு இந்த நிலைமை வந்திருந்தால் நீங்க சும்மா விட்டுருப்பீர்களா ? "
" நான் செலவு பண்ணியிருக்கமாட்டேன், உன்னைமாதிரி" என்றதும்தான் தாமதம் விசாலி ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டாள்.

குமுதம் 06 /04 /2011

டெக்னிக்--தினமலர்-பெண்கள்மலர்---15-5-2010

ரமா கோபமாக இருந்தாள்.ஊரில் நடக்கும் பங்குனி திருவ்ழாவிற்க்காக ஓர்ப்படி லதாவையும் ,பிள்ளைகளையும் அழைத்திருந்தாள்.தன்வீட்டிற்கு .அவர்கள் வந்த சமயம் வேலைக்காரி வரவில்லை என்றால் கோபம் வராதா?'
'
அக்கா, இதெல்லாம் சகஜம்தானே ?ஆளுக்கு கொஞ்சமாய் வேலைகளை செஞ்சுட்டா போச்சு 'என்று சொல்லி அன்றைய
வேலைகளை பகிர்ந்து செய்தார்கள் கீதாவும் ,ரமாவும்.. அடுத்த நாள் வேலைக்காரி முனியம்மா தன் எட்டு வயது மகளை
அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததும் தான் தாமதம் ரமா ,நேற்று வேலைக்கு வராத கோபத்தை வார்த்தைகளால்
கொட்டி தீர்த்தாள்.அத்தனை பேச்சுக்களையும் கேட்டு கொண்டே மகளுடன் உள்ளே சென்று வேலைகளை முடித்து விட்டு
வந்தாள்முனியம்மா .அவள் போனதும் கீதா கேட்டாள்.
"ஏங்க்கா,உங்க வேலைக்காரி பரவாயில்லையே நீங்க இத்தனை டோஸ்விட்டும் வாயே திறக்கம எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு போறாளே இந்த காலத்தில் இப்படி ஒருத்தியா ?"
' "நீ வேற ,கோவத்திலே கன்னாபின்னான்னு திட்டிட்டு உடனே பத்தோ இருபதோ கொடுத்திடுவேன் சமாதானத்திற்கு பேசாம போயிடுவா .இதெல்லாம் ஒரு டெக்னிக்தான் ஆனா நாம கோவத்தை காட்டலேன்னா அவள் நம்மை சாதாரணமா நினைச்சிடுவா அதுக்குத்தான் இந்த திட்டு "என்றாள்ரமா .
வீட்டிற்கு போகும்போது முனியம்மாவினுடைய மகள் " ஏனம்மா ,இப்படி வாயில வந்தபடி திட்டுறாங்க ...இதெல்லாம் கேட்டுட்டு அங்கே வேலை பார்க்கனுமா ?"என்று கோபமாக கேட்டாள்.
'"அடி போடி பைத்தியம் ,அந்தம்மா இன்னைக்கில்ல ,எப்பவும் கோவம் வந்தா இப்படித்தான் கத்தும் அதுக்காக ரோசம் பார்த்தா முடியுமா ?நாம வாயை திறக்காம இருந்தா கத்திட்டு உடனே பண்ம் கொடுக்கும் .சம்பளத்தை தவிர எக்ஸ்ட்ராவா பணம் கிடைக்குதில்லே இதெல்லாம் ஒரு டெக்னிக் "
முனியம்மாவை வியப்பாய் பார்த்தாள்அவள் மகள் .
தினமலர் -பெண்கள்மலர் 15 ---5---- 2010

வேதனைதான் வேர்வைக்கும் -தங்க மங்கை --ஆகஸ்ட்-2012


'அம்மா இப்ப என்ன குடி முழ்கிடுச்ச்னு நீ ஒப்பாரி வைக்கிறே ?'வாசவி கேட்டாள்
'நீ ஏண்டி சொல்ல மாட்ட,உங்க அப்பா இருந்தா இப்படி செய்திருப்பாரா ,உங்க பெரியப்பா ,வாயில்லா பூச்சியானஉங்கப்பா இருக்கையிலேயே ,பங்குகளை நான் பார்க்கிறேன்னு சொல்லிச்சொல்லி லாபத்தில பெரும் பகுதியை அவர் சாப்பிட்டுட்டு மீதியைத்தான்கொடுப்பாரு உங்கப்பா கிட்டே அண்ணன் சொல்லை தட்டாத தம்பியாச்சே உங்கப்பா .நம்பி நம்பி ஏமாந்தாரு.நான் ஏதாவது சொன்னாகூட சண்டைக்கு வருவாரு இப்ப,அவரே போனதுக்குபின்னாலே .,உங்க பெரியப்பா என்னசெஞ்சாரு ,கொஞ்சக்கூட ஈவு இரக்கமில்லாமல் பெண்
பிள்ளையை வச்சிருக்காலேன்னாவது,நம்மை ஏமாற்றாமல்
நமக்கு சேர வேண்டியதை கொடுத்தாரா?அதை இதை கணக்கு காட்டி நம்மை அம்போன்னு விட்டார் அதை மறக்க சொல்றியா ?ஜானகி குமுறினாள்
"அம்மா ,நடந்தது நடந்திட்டு ,இத்தனை காலம் நம்ம கையை ஊன்றி இன்னைக்குநல்ல நிலைக்கு வந்துட்டோம் .இன்னமும்
நீ அதையே சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி?
அப்பாவுக்கு தப்பாதவள்டி ,நீ இந்த நிலைக்கு வர ,நாம எத்தனை அவமானங்களை சந்திருச்சிருப்போம் ,மறந்துட்டியா ?'
'சரி இப்ப செய்யணும்னு சொல்றே ?"
"அந்த ஆளுக்கு நீ பத்திரிகை அனுப்பக்கூடாது ,அவர் கண் பட்டாலே இந்த வீடு புகைஞ்சிடும் "
"அம்மா ஒரு திருத்தம் ,நான் நேரில் போயோ ,தொலை பேசியிலோகூப்பிடலே .மூன்றாம் மனுஷனுக்கு அனுப்பற மாதிரி
பத்திரிக்கையை தபாலில் போட்டுடறேன் சரியா?"
"அதுதான் சரி ,அப்படியே ரோசம் கெட்டு போய்வந்தாருன்னா ,நான் பேசிக்கிறேன் "ஜானகி கோபத்தோடு சொன்னாள்.
அவள் கோபப்பட காரணம் உண்டு
ஏகாம்பரமும் ,ராஜவேலுவும் அண்ணன் தம்பிகள் .ராஜவேலு அண்ணனிடம் அளவுக்கதிகமான பாசமும் ,மரியாதையும் வைத்திருப்பவர் ..ஏகம்பரமோ சுயநலவாதி ,பெற்றோர்கள் சொத்தை கூட ,தம்பிக்கு அதிக விளைச்ச லில்லாத் பங்கையும்
தனக்கு நல்ல பங்குமாகத்தான் பிரித்தார் அதையும் தானே விவசாயம் பார்ப்பதாகசொல்லி வருடா வருடம் மூக்கால்அழுதபடியே தான் நெல் அளப்பார் .என்ன ஏன் என்று கூட ராஜவேலு கேட்கமாட்டார் .அண்ணன் எதிரில் நின்று கூட பேசபயப்படுவார்.திடீரென்று எதிர் பாராதவிதமாக விபத்தில் ராஜவேலு இறந்து போனார் .ஏகாம்பரத்துக்கு கொண்டாட்டமாக
போய்விட்டது அதுக்கு கடன் வாங்கினான் ,இதற்குகடன் வாங்கினான் என்று பொய்சொல்லி ராஜவேலுவின் பங்கையும் விற்று சுவாகா பண்ணிவிட்டார் .தன்மைகளுக்கும் ,மகனுக்கும் சகல ராஜபோகங்களையும் தந்தவர் ,தம்பி மனைவியையும் ,படித்துக்கொண்டிருந்த வாசவியையும் அம்போன்னு விட்டுவிட்டார் .ஜானகி தனக்கு தெரிந்த ஒயர் பின்னுதல் ,பிரம்புகூடை பின்னுதல் என சுய வுதவி குழுவில் சேர்ந்து பல தொழில்களை செய்து தன்னையும் மகளையும் காப்பாற்றிகொண்டாள்.கல்லூரியில்உதவி தொகை துணையுடன் வெற்றிகரமாக படிப்பை முடித்து இன்று கலெக்டர் ஆகிவிட்டாள்.
தன்சொந்த பணத்தில் அழகான வீட்டை கட்டி ,தனக்கு பிடித்தவனுடன் திருமணமும் செய்துகொள்ள போகிறாள் .அதற்கான
கிரகபிரவேச பத்திரிக்கையை தான் ,தன்னை ஏமாற்றிய மைத்துனருக்கு ,அனுப்பக்கூடாது என்று ஆத்திரப்ப்டுகிறாள் நியாயம்தானே ? பல வி .ஐ .பி க்கள் வாசவி வீட்டிற்கு வந்தார்கள் .அவர்களை எல்லாம் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்த வாசவி ,வீட்டு வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கிய தன் பெரியப்பாவையும் ,பெரியம்மாவையும் பார்த்து அதிர்ந்தாலும் ,அம்மா கண்ணில் பட்டால் என்னவாகுமோ என பயந்து ஓடினாள்தெருவிற்கு .
"வாங்க பெரியப்பா ,வாங்க பெரியம்மா ,எங்கே நேரில் வந்து கூப்பிடலைன்னு வராம இருந்திருவிங்களோன்னு பயந்தேன் "
என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அவர்களை பார்த்துவிட்ட ஜானகி ஆவேசத்தோடு அவர்களை நோக்கி வர ,வாசவி தவித்து போனாள்.
. அவசரமாக அம்மாவை நோக்கி போனாள்.'"அம்மா இது வி. ஐ .பி க்கள் வந்திருக்கிற விழா .விரோதியா இருந்தாலும்
வாசல் தேடி வந்தவங்கள அவமரியாதை செய்யக்கூடாது விழா முடிந்ததும் மற்றதை பார்த்துக்கலாம் .உனக்கு பிடிக்காட்டி
,நீ வேற வேலையை பார் ,நான் அழைச்சுக்கிட்டு போய்,சாப்பிட வைக்கிறேன் . தயவு செய்து எல்லோர் முன்னாலேயும் விழாவை அசிங்கப்படுத்திவிடாதே .மற்றவர்கள் நம்மை தப்பா நினைப்பாங்க புரிஞ்சுக்க ..."
'அப்பாவை போலவே பொண்ணு ,நீயும என்னை வாயடைச்சுடு ,என்னவோ போ ''ஜானகி கோபித்துகொண்டு உள்ளே போனாள் . நிலைமையை புரிந்து கொண்ட ஏகாம்பரம் வாசவின் கைகளை பிடித்துக்கொண்டு தன்தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டார் .எல்லோர் முன்னிலையிலும் .ஆனால் வாசவி அதை தடுத்து ,"பெரியப்பா ,நான் உங்களை தப்பா நினைக்கலை
.நீங்க அன்னைக்கு அப்படி செய்யாதிருந்தால் இன்று நான் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டேன் .யாருடைய வெற்றிக்கும்
ஒரு வேதனைதான் வேர் வைக்கும் ,இன்னைக்கு நான் கலெக்டர் ஆனதுக்கு காரணமே நீங்க .
என்னை உதாசீனப்படுத்தியதுதான் .அந்த நன்றிக்காகதான் உங்களை அழைத்தேன் .இந்த விழாவிற்கு .நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் .நீங்களும் மறந்துடுங்க .நீங்கதான் முன்னே நின்னு ,என் அப்பா ஸ்தானத்தில் இந்த கிரகபிரவேசத்தையும் அடுத்த சில நாட்களில் நடக்கபோற என் கல்யானத்தையும்முன்னே நின்று நடத்தி வைக்கணும் பெரியப்பா "என்றுசொல்ல ,
கூனிக்குறுகி அவள் கைககளை பிடித்துகொண்டு "உனக்கும் உங்கப்பாவை போலவே பெருந்தன்மை அதிகம் ஆன்னல் நான்
துரோகி என்னை போய்முன்னே நின்று நடத்த சொல்றியே .அதுக்கு எனக்கு தகுதியே இல்லம்மா .இந்த சின்னவயசிலே உனக்குத்தான் எத்தனை மனபக்குவம் "கண்ணீர் விட்டார் .
"பெரியப்பா நாளும் கிழமையுமா இப்படி கண்ணீர்விடலாமா ?போங்க போய் வேண்டிய காரியங்களை பாருங்க ,சீக்கிரம்.....
கண்ணீரை துடைத்தபடியே உள்ளே போனார்கள் ஏகாம்பரமும் வசந்தாவும் .இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஜானகி ,
தன மகளின் மனப்பக்குவத்தை பார்த்து தானும் அவர்களிடம் மரியாதையாக நடந்து கொண்டாள் அதை பார்த்த ஏகாம்பரமும் வசந்தாவும் மனம் நொந்து அழுதார்கள் குற்றமுள்ள நெஞ்சாயிற்றே /ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டார்கள்
Thanga mangai,
August,2012
(Monthly magazine)

இளிச்ச வாயன் --தினமலர்-வாரமலர்--12--8--2012


"என்ன பாண்டியா ?வேலையெல்லாம் முடிஞ்சு டுச்சா?வீட்டுக்கு கிளம்பிட்ட ...?"சகஊழியர் மோகன் கேட்டான்.
"அதில்லையப்பா ...என் மனைவி சினிமா பார்க்கணுமுன்னு சொன்னா .டிக்கெட்ரிசர்வ் பண்ணிருக்கேன் .இருக்கவே இருக்கான்,இளிச்சவாயன் வசந்த் ,அவன் கிட்ட கொடுத்தா ,என் வேலையையும் சேர்த்து செஞ்சு வைக்க போறான் "என்று கூறி சிரித்தான் பாண்டியன் .
"அதுவும் வாஸ்தவம்தான் .நம்ம ஆபீஸ்ல ரொம்ப பேர் அவன்கிட்ட வேலை வாங்குறாங்க .ஆனாலும் மனுஷன் முகம் சுளிக்கணுமே,நல்ல மனுஷ்ன்பா ..."என்றான்மோகன் . எல்லார் வேலையையும் இழுத்துப்போட்டு செய்வதால் வசந்துக்கு இளிச்சவாயன் பட்டம் கொடுத்தார்கள் ஊ ழியர்கள் .தினமும் லேட்டாக வீட்டுக்கு போவது வசந்த் மட்டும்தான் .இது அவன் மனைவிக்கு கோபத்தை ஏற்படுத்தியது . வசந்த் வீட்டுக்குள் வந்ததும் ......
"ஏங்க ,வாசுகி புருஷன் உங்க கூடத்தான் வேலை பார்க்கிறாரு .அவரெல்லாம் டான்னு அஞ்சு மணிக்கே வீட்டுக்கு வந்துடுறார் .நீங்க மட்டும் லேட்டா வரிங்க ,கேட்டா வேலை இருந்துச்சுங்கரிங்க .."என்று எரிந்து விழுந்தாள்
"யாராவது ஒருத்தர் பொறுப்பா இருந்து பார்க்கணுமில்லே கீதா .."என்ற வசந்த் முகம் கழுவ சென்றான் .
"வேலை செய்கிரவன்கிட்ட வேலையை கொடு , தூங்கிறவன்கிட்ட சம்பளத்தை கொடுங்கிறபழமொழியை உங்களுக்காகத்தான் சொல்லிருக்காங்க போல ..நீங்க இப்படி இளிச்சவாயனா இருந்தா உங்களை எல்லாரும் ஏமாத்ததான்
செய்வாங்க .."என்று கீதா கூற ,சிரித்தபடியே நகர்ந்தான் வசந்த் . ஒரு மாதத்திற்கு பின் ........இனிப்பு பொட்டலத்தோடு வந்த
வசந்த் ,மனைவி கீதாவை அழைத்து இனிப்பை ஊட்டிவிட ..."என்ன விஷேசம் ?.எதுக்காக இனிப்பு?"என்றாள் கீதா
"எனக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு .."என்றான் வசந்த் .
"என்னங்க சொல்றிங்க ?உங்களுக்கு பிரமோஷனா?உங்களுக்கு மேல் சீனியர்கள் எல்லாம் இருக்காங்கன்னுசொல்வீங்க
..அப்படி இருக்கிறப்ப உங்களுக்கு எப்படி பிரமோஷன் கொடுத்தாங்க ?"ஆச்சரியமாக கேட்டாள்கீதா .
"உனக்கு மட்டுமில்லே ,எல்லாருக்குமே இந்த ஆச்சரியம்தான் .எல்லாரும் அவங்க வேலையை என்கிட்டே கொடுத்ததாலே என்னால எல்லோருடைய வேலையையும் கத்துக்க முடிஞ்சது ..என்திறமையையும் வேலையையும் பார்த்த ம எம் .டி , எனக்கு பிரமோஷன் கொடுத்துட்டார் .இனிமே நான் மேனேஜர் .இப்ப சொல்லு யார் இளிச்சவாயன் ?"என்று கேட்டதும் ,வியப்பால் விழி விரிய கணவனை பார்த்தாள். கீதா
தினமலர் -வாரமலர் ----ஆகஸ்ட் 12 ------2012

வீடு --தினமலர்-பெண்கள் மலர்--19-6- 2010


'வீட்டுக்கு ஒரே பையன்தான்
' அவனுக்கு கூட பிறந்தவங்க யாரும் கிடையாது .அப்பா அம்மா மட்டும்தான் பையன்தான் . கூட இருக்காங்க
பிக்கல் பிடுங்கல் கிடையாது நம்ம பாப்பா வேலை பார்க்கிற கம்பெனிக்குபக்கத்தில இருக்கிற பாங்கில்தான் பையனுக்கு வேலை .தனிக்குடித்தனம்தான் ....என்ன சொல்றிங்க ?"தரகர் கேட்டார்
உஷாவுக்கும்மோகனுக்கும் இந்த இடம் பிடித்து போனது ,தன்மூத்த மகனிடமும் மருமகளிடமும் விவரம் சொன்னார்கள்
அவர்களும் ஓகே சொல்லி பேசி முடிக்க சொன்னார்கள்
"உஷா..நம்ம பையன் கிட்டேயும் மருமகள்கிட்டேயும் கேட்டுட்டோம் கல்யாணம் பண்ணிக்கப்போற தர்ஷினிகிட்டே கேட்கவேண்டாமா ?'என்றார் மோகன் ,

.
''அவ இந்த காலத்து பெண்ணுங்க ,இப்படி பட்ட சான்சை வேண்டாம்னா சொல்லுவா ?எதற்கும் கேட்போம் '"என்றாள்உஷா
வேலை முடிந்து வந்த தர்ஷினியிடம் தரகர் சொன்ன விவரங்களை சொன்னார்கள் தேடினாலும் இது போன்ற இடம் .
கிடைக்காது என்றார்கள் .எல்லாவற்றையும் கேட்ட தர்ஷினி" உங்களுக்கெல்லாம் இதில் சம்மதமா ?"கேட்டாள்
"'எங்களுக்கெல்லாம் பிடிச்சதினாலேதான் கேட்கிறோம் ,ஏன் உனக்கு பிடிக்கலையா ?"
.""வீடு என்பது வாழறதுக்கு ....நான் வாழ னுமும்னு நினைக்கிறேன் ."
அப்படின்னா "
"நாலு பேரோட சந்தோஷமாவாழறது தான் வாழ்க்கை ,இங்கே எப்படி அம்மா அப்பா ,அண்ணன் ,அண்ணின்னு கூட்டு குடும்பமா வாழ்றேனோ அப்படித்தான் புகுந்த வீட் லேயும் வாழ ஆசைப்படுகிறேன் .ஆபீஸ் விட்டு வந்து இரண்டு பேரும்
அடைபடுகின்ற கூடுகளாய் வீடுகள் மாறுவது எனக்கு பிடிக்கலே .தனிக்குடித்தனம் என்பதுவசித்தலுக்கானகூடு
வீடு என்பது பலருடன் விட்டுக்கொடுத்து வாழ்தலுக்கானது நீங்க பார்த்திருக்கிற பையனோட அப்பாவும் அம்மாவும் எங்ககூட
சேர்ந்து ஒரே வீட்டுல இருப்பாங்கன்னா இந்த இடம் ஓகே இல்லன்னா வேற இடம் தேடுங்க .''என்றாள் தர்ஷினி தீர்மானமாய்.
பெற்றவர்கள் வியப்பாய் அவளை பார்த்தார்கள்
தினமலர் -பெண்கள்மலர் - ஜூன் 19 - 6 - --2010

பானுவின் மாமியார் --அவள் விகடன்-25-10-2011


கோமதி ஈசி சேரில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள் .வெளி கேட் திறக்கும் சப்தம் கேட்க -மருமகள் பானுவின் அப்பா ஆராவமுதன் வந்து கொண்டிருந்தார் .சட்டென்று எழுந்து ரூமுக்குள் சென்று விட்டாள்.
"பானு.....பானு "
அடுப்படியில் வேலையாக இருந்த பானு ,பசுவின் குரல் கேட்ட கன்று போல் துள்ளி வந்தாள். "வாங்கப்பா ,உட்காருங்க ,ஊரிலே அம்மா ,தம்பி ,தங்கைகள் நல்லாஇருக்காங்களா ?"
"எல்லோரும் நல்லா இருக்காங்க ,உங்க மாமியார் நல்லைருக்காங்கள?இந்தா ....இந்த அல்வா மிக்சர் ,பூ ,உன்மாமியாருக்கு
பிடிச்ச பச்சை நாடான் பழம் .வாழை பழத்தை அவங்ககிட்டே கொடு "
" ஏன்பா இவ்வளவு ?'
"மகளை பார்க்க வரப்ப வெறுங்கையோடு வரலாமா?சரி மாப்பிள்ளை நல்லைருக்காரா?'.
எல்லோரும் நல்லா இருக்கோம்பா"
பானு..பானு 'கோமதி கூப்பிட்டாள்.
'உட்காருங்கப்பா ,அத்தை கூப்பிடறாங்க கேட்டுட்டு வரேன் "
"என்ன அத்தை ?""யாரோட பேசிட்டிருக்கே ?'
"அப்பா வந்திருக்காங்க "
"அதான் கல்யாணமான மூணு மாசத்திலே ஆறு தடவை வந்திட்டாரே "
இதை கேட்டதும் முகம் வாடி போனாள்பானு அந்த சமயம் எதிர் வீட்டு பத்மா"கோமதியக்கா "என்று குரல் கொடுக்க
அவசரமாக வெளியே சென்றாள்கோமதி வந்திருந்த சம்பந்தியை என்னவென்றுகூட கேட்காமல் .
"என்ன பத்மா ?
ரேசனில் பருப்பு போடறாங்களாம் நீங்களும் வரிங்களா ?"
"இரு பானுவை அனுப்பறேன் "என்றவள் உள்ளே திரும்பி -
"பானு ,"பத்மாவோட போய் ரேசனில் வாங்கிட்டு வந்துடு '"
"இதோ அப்பாவுக்கு காப்பி கொடுத்துட்டு ..வந்துடுறேன் '
"அவர் காப்பி சாப்பிடாமலா வந்திருப்பார் '?அவர் எங்கேயும் ஓடிப்போக மாட்டார் ,போயிட்டு வந்து கொடுக்கலாம் ,பாவம் பத்மா நிக்கறா "..
"அப்பா இதோ வந்துடுறேன் "
இதற்கு மேலும் அங்கிருக்க கிறுக்கா அவருக்கு ? "இல்லம்மா ,உன்னை பார்க்கத்தான் வந்தேன் பார்த்துட்டேன் புறப்படுறேன்
வரேன் சம்பந்தி "வாஞ்சையுடன் சொல்லி புறப்பட்டார் ஆராவமுதன்
பானுவுக்கு ஆத்திரமாக வந்தது ,பாவம் அப்பா அவர்கிட்டே இரண்டு வார்த்தை கூட பேச விடாம விரட்டுராங்களே ...ச்சே ,வீட்டுக்கு வந்தவரை வாங்கன்னு தான் சொல்லலே காப்பியாவது கொடுத்து அனுப்பலாம்னு பார்த்தா
,ஏன் இப்படி இருக்காங்க அத்தை ?என்னை நல்லாத்தான் வெச்சுருக்காங்க ,பிரியமாத்தான் இருக்காங்க அப்புறம் ஏன் இப்படி ?நான் வேணும் ...என் குடும்பம் பிடிக்கலையா ?"அப்பாவுக்கு என்னை பிரிஞ்சுருக்கிறது கஷ்டமா இருக்கு பாசத்தில் இரண்டு மூணு தடவை வந்திருப்பார் ,அதுக்காக இப்படியா ?'
"இந்தாம்மா ..கார்டை கொடுத்துட்டு பையை பிடி "ரேசன் கடைக்காரர் கேட்டதும்தான் சிந்தனை கலந்தால் பானு .
"பானு ஏன் ஒரு மாதிரியா இருக்கே ?என்று ஆரம்பித்தாள்பத்மா .
"ஒண்ணுமில்லே பத்மா அத்தே "
"இல்லை பானு கடையிலேயே பார்த்தேன் நீ ஏதோயோசனையிலேயே இருந்தே .என்னவிசயம் ?'
இவரை நம்பி பேசலாமா? இவர் அத்தைக்கு வேண்டியவராச்சே ...நாம அவசரப்பட்டு எதையாவது சொல்ல அவர் ஒன்னுக்கு இரண்டா போட்டுகொடுத்துட்டா ..?உஷாரானாள்பானு . "ஒண்ணுமில்லே அத்தை ..தலை வலி அதான் "என்று மழுப்பினாள் . "எனக்கு தெரியும் பானு உங்கப்பா உன்னை பார்க்க வந்ததும் ,உங்க அத்தை அவரை இன்சல்ட் பண்றதும் எனக்கு தெரியும்
அதானே உன் கவலை ?'
"இல்லையில்லை ...அதெல்லாம் ஒண்ணுமில்லை "அவசரமாக மறுத்தாள்பானு ."எனக்கு எல்லாம் தெரியும் உன் அத்தை நல்லவங்க பானு உன் அப்பா சாதாரண வேலையில் இருப்பவர் தினக்கூலி வாங்குபவர் அவர் உன்னை பார்க்க வரப்ப ல்லாம்
இருநூறு ரூபாய்க்கு குறையாம ஏதாவது வாங்கிட்டு வறாராம்அந்தப்பணம் இருந்தா ...உன் அப்பா குடும்பத்துக்கு இரண்டு நாள் சாப்பாட்டு செலவுக்கு வருமாம் உன் அத்தை இப்படி பேசினாலாவது ,,தன வரவை குறைச்சு .குடும்பத்துக்கு செலவு செய்வாரேன்னுதான் கோமதியக்கா இன்சல்ட் செய்றது மாதிரி நடிக்கிறாங்கலாம்.இதை என் கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க
இனி பதினைந்து நாட்களுக்கொருமுறை உன்கிட்ட பழம் ஸ்வீட்ன்னு வாங்கி கொடுத்து அப்பாவை போய் பார்த்துட்டு வரச்சொல்லி அனுப்பனும்னு கூட சொன்னாங்க இது பற்றி மகன் கிட்டே யும் பேசிட்டாங்களாம் . கோமதிரொம்ப நல்லவள்
பானு .கை பிடித்து சொன்னாள் பத்மா .இதை கேட்ட பானுவின் விழிகள் நனைந்தன .
அவள் விகடன் ----------------25 -10 -2011

விருது --தங்க மங்கைசெப்டம்பர் 2012


"கல்வி அதிகாரி ஐயா உங்களை கூப்பிடுகிறார் ஐயா "உதவியாளர் ரங்கசாமி சொன்னான்
எதற்காக கூப்பிடுகிறார் என்று யோசனையுடன் சென்றார் தலைமையாசிரியர் மணிவாசகம்
"வாய்யா,ஒண்ணுமில்லே நல்லாசிரியர் விருது பட்டியல் தயாராயிட்டு இருக்கு , உங்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுங்கள் "
"இல்லே ஐயா ,எனக்கு இந்த விருதெல்லாம் வேண்டாம் ஐயா "
"என்னய்யா இப்படி சொல்றே ஊரிலும் .மாணவர்களிடமும் கெட்டபேர் வாங்குகிற ஆசிரியர்களெல்லாம் மந்திரி சிபாரிசிலே
போட்டி போட்டு விண்ணப்பம் கொடுக்கிறார்கள் ,உனக்கு எல்லாத்திறமையும்இருக்கு இயல்பா வரதைவேண்டாம்னு சொல்றியே ஏன் ?
"நீங்க சொல்றமாதிரி கெட்டபேர் வாங்கியவர்களோட பட்டியலில் என் பெயர் வந்தால் ......எப்படியய்யா ?வெளிலே இருக்கிறவங்களுக்கு தெரியாது ஆனால் ஊரிலுள்ளவர்களுக்கும், மாணவர்களுக்கும் உண்மையில் யார் நல்லாசிரியர்னு தெரியும் , நீங்க சொன்ன பட்டியலில் நான் இடம் பெற்றால் இவரும் அப்படித்தான்னு நினைச்சிடக்கூடாதில்லேஅதுக்குத்தான் ,அதோட என்கிட்டே படிக்கிற மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தோட ,நல்லாப்படிச்சு பெரிய வேலைகளை அமர்ந்து ,அந்த ஆசிரியர்கிட்டே தான் படிச்சு முன்னுக்கு வந்தேன்னு சொல்றாங்க பாருங்க அதுதான் எனக்கு பெரிய விருது , அந்த விருது எனக்கு போதும் ஐயா "வியப்பாய் பார்த்தார் கல்வியதிகாரி "மணிவாசகம் ஒரு வார்த்தை சொன்னாலும் அதுதான்யா திருவாசகம் "புகழ்ந்தார் கல்வியதிகாரி
தங்க மங்கை செப்டெம்பர் இதழ்