Monday, 22 June 2015

வல்லமை புகைப்பட போட்டி ---17

பொற்கதிரோன் அழகில் சொக்கி கவிபுனையாக் கவிஞரும் உளரோ? என்று கேட்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், விடியாத இருளும் விலகாத துயரும் உலகிலில்லை எனும் நன்மொழிகளோடு கவிதையை நிறைவுசெய்துள்ளார்.saraswathirajendran wrote on 18 June, 2015, 11:03
மேகலா ராமமூர்த்தி

பாடம்
பொற்கதிர்       பரப்பி          வையம்
பூரிக்கபகல்      தந்த         கதிரோன்
அற்புதமாய்     வேலை     முடித்து
அழகாய்         மறைய       துவங்குகிறான்
செக்கச்          சிவந்த           வானம் அதில்
சீர்மிகு           பார்டராய்         நீலக்கடல்
கதிரவன்       மறையும்     நேரம்
பூக்கும்           மேகம்         பல வடிவாய்
சொல்லிட     இயலா       இன்பம்
சொட்டியே    நிற்கும்       அழகாய்
வாழ்வில்      இறப்பும்     பிறப்பும்
மாறி              மாறியே      வரும்என்று
அருமை     யாம்பாடம்    சொன்னாய்
அறிந்தோம்  அகக்கண்   திரைதனிலே
தினம் உன்   வருகை      மறைவு அழகை
இனிதாய்     காண்கிலேன்   எனில்
இம்மண்ணில்  கவிஞர்    கள்யாரோ?
சூரியன்        நிலவாய்     ஆகும் அங்கே
சுடர்பரப்பி    நிலவு      காலை சூரியனாகுமோ?
விடியாத     இருளும்   இல்லை
விலகாத     துயரமும்   இல்லை இது
இறைவன்  செய்யும்     லீலை 
சரஸ்வதி ராசேந்திரன்

Monday, 15 June 2015

முத்துகமலம் --சிறுவர் பகுதி 16-5-2015


Verse
கவிதை

சொல்லி முடியுமோ உன் பெருமை!


நிலவு வருது நிலவு வருது
நீல வானில் மிதந்து வருது
உலவும் அதன் முகத்திலே
கலையாய் இருக்கு ஒரு மச்சம்
பார்ப்போர் கண்கள் பரவசத்தில்
பரவும் சோதி முகத்தினிலே
தன்னிகரில்லா தண்ணிலவு
தன்னலமில்லா தகையழகு
ஊருக்கெல்லம் ஒளி கொடுக்கும்
உயர்ந்த திருவுளம் கொண்டதது
அம்புலி நீயோ இருக்குமிடம்
அறியோம் எங்கும் சுற்றிடுவாய்
குடிசைக்கிடையே பாய்ந்தொளியை
கூட்டி ஏழையை மகிழ்த்திடுவாய்
அம்மா நாடுவாள் உன் தயவை
அழும் குழந்தைக்கு சோறூட்ட
கவிஞர் ரசிப்பார் உன்னழகை
கருத்துடன் கவிதை தேரோட்ட
அல்லியும் மலர்ந்திடும் உனைக்கண்டு
சொல்லி முடியுமோ உன் பெருமை

- சரஸ்வதிராசேந்திரன்.
   நன்றி -முத்துகமலம்

Sunday, 14 June 2015

வல்லமை -புகைப்படபோட்டி=16 -குரங்கு புத்தி

குடிக்கத் தண்ணீரின்றிக் கண்ணீர் சிந்தும் இந்தக் குரங்கு, ”பாட்டில்(bottle) தண்ணீரையாவது என் கண்ணில் காட்டக்கூடாதா?” என்று மனிதர்களிடம் இறைஞ்சுவதை நம் இதயம்தொடும் பாடலாக்கியிருக்கிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.


saraswathirajendran wrote on 11 June, 2015, 11:35
குரங்கு  புத்தி
திருகி திருகி  பார்க்கிறேன்
திடீரென இரண்டு சொட்டு  நீர்
அது தண்ணீர்  அல்ல
என் கண்ணீர்
ஆம்   இது தண்ணீர் தேசமல்ல
கண்ணீர் தேசம் 
இருக்கும்போது
அருமை தெரிவதில்லை 
மூடாமலே கிடக்கும் குழாய்
இப்போது திறந்தே கிடந்தாலும்
காற்றுகூட வரவில்லை
நாக்கு வரளுகிறது கண்கள் இருளுகிறது
யாராவது அம்மா பாட்டில் தண்ணியாவது
தாருங்களேன்
குடியிருப்புகளில் உள்ள
தண்ணீர் டாங்குகளில் மூடியை
தூர வீசிவிட்டு
உள்ளேகுதித்து குதுத்து
கும்மாளமிட்டு நீரை
சிந்தினேன் இன்று கண்ணீரை
சிந்துகிறேன்
என்னிலிருந்து பிறந்தவன் தானே
மனிதன் அவனுக்கும் என் புத்திதானே?

சரஸ்வதிராசேந்திரன்

Monday, 8 June 2015

வல்லமை----ஜூன் -8-6-2015 - உள்ளம்

உள்ளம்

-சரஸ்வதி ராசேந்திரன்
எழில்   பாடும்   இளமங்கை  எழுந்தோடி   வந்தாள்
எனைப்   பார்த்து    இனிமையுடன்   இதைக்  கேட்கலானாள்
புனல்   பாடும்    பொய்கையில்  நீராடச்    சென்றேன்
புரியாத   ஓர் ஒலியை  நான்  கேட்டு   நின்றேன்
புனல்   பாடும்   பாட்டென்று  நீர்கூறி வந்தீர்
புணர்ச்  சியையே  பாட்டாக்கித் தருகிற  தென்றீர்
புரியாமல்  விழித்திட் டேன் புன்மை  அறி வால்
புதிருடனே  சிரித்திட்  டீர்  பெரும்   புலவர்  நீரே

வல்லமை --புகைப்பட போட்டி--15 - உயர உயரப் போகிறேன்

saraswathirajendran wrote on 6 June, 2015, 15:20
 பரிவின்றிச்சுட்ட நரிக்குண மனிதனைக் கண்டு அஞ்சி, ஆண்டவனை நோக்கி அபயக்குரல் எழுப்பும் சிறுபறவையைக் கண்முன் நிறுத்துகிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்---மேகலாராம மூர்த்தி

உயர உயரப் போகிறேன்
வற்றிப்போன
நதிகள் ஏரிகள்
வறண்டு போன
வாய்க்கால்கள்
ஒருவேளை உணவு கூட
கிடைக்காமல்.
வாழ்வதாரம் தேடி
பறக்கின்றேன்
எனைக்கண்ட
நரிக்குண மனிதன்
பரிவின்றி சூட்டான்
ஓலமிட்டபடியே
உயர உயர பறக்கின்றேன்
என்னை காப்பாற்றிக்கொள்ள
இறைவா நீதான் என்னில்
நிறைவாயா  இல்லை
நானே உன்னில் மறைவேனா?

சரஸ்வதி ராசேந்திரன்

Monday, 1 June 2015

புகைப்படபோட்டி-- 14 வல்லமை---

ஒருவரின் மகிழ்ச்சியில் இன்னொருவரின் வீழ்ச்சி ஒளிந்திருக்கக் காண்கிறோம். இதுதான் வாழ்வின் நியதி என்கிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
கொடுத்து கொடுத்தே
சிவந்தன கர்ணனின் கரங்கள்
நீயும் கூட நூலிழை கொடுத்தே
சிவப்பு நிறம் கொண்டாயோ
மல்பரி இலைகளில் வளர்ந்து
மற்றவர்களுக்காக உயிர் விடுகிறாய்
இது யார் குற்றம்?
படைத்தவனின் குற்றமா இல்லை
பட்டுப்புடவைக்கு ஆசைப்பட்ட
மகளிரின் குற்றமா?இல்லை இல்லை
இறைவன் போட்ட கணக்கு பாதி வழியில்
இறப்பு,ஒருவரின் துன்பம்
மற்றவரின் லாபம்
இது இறைவன்வகுத்த நியதி
இதில் வருத்தம்  ஏன்  அமைதி

  நன்றி வல்லமை

வல்லமை --1-6-2015---வைகாசி விசாகத் திரு நாளாம்

வைகாசி விசாகத் திருநாளாம்!

-சரஸ்வதி ராசேந்திரன்
தேடி   உன்னைச் சரண் அடைந்தேன்
திருத்தணிகை   முருகா!
தீமைகளைத்    தகர்த் தெறிவாய்
திருச்செந்தூர்    ஷண்முகனே!                   lord muruga
பாடி உன்னைச்   சரணடைந்தேன்
பழனிமலை  முருகா!
கோடி நலம்    செய்திடுவாய்!
குறைகள்     எல்லாம் தீர்ப்பாய்!
பாவங்களைப்    போக்கிடப்பா
பச்சை மலை   முருகா!
வல்வினைகள்  போக்கிடுவாய்
வைகாசி    விசாகனே!
அமைதியைத்   தந்திடுவாய்
அழகர்   மலைக் குமரா!
சிரத்தையுடன்    வேண்டுகிறோம்
சிக்கல்   சிங்கார வேலா!
விரைந்து நீ  வந்திடு
விராலிமலை   வேலவா!
பக்தர்களின்   குறை தீர்த்திடு
பவழமலைஆண்டவனே! 
பால் காவடி,  பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்
பக்தர்கள் வந்து நின்றோம் உன் காலடிக்கு!