Sunday, 27 December 2015

வல்லமை புகைப் பட போட்டி--44

’பொக்கைவாய்ச் சிரிப்புடன் ஞானச்சுடரேற்றும் இக்குழந்தை இறைவனின் அருட்கொடையே!’ என்று இன்மொழி பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.---மேகலா ராம மூர்த்தி
பொக்கை வாய் சிரிப்புடன்
புதுக்கவிதையாய் புறப்பட்டு
கள்ளங் கபடமின்றி என் செல்லம்
தப்புத்தாளங்களில் வாசித்தாலும்
ஏதோ ஞானச்சுடரென்றோ
என்முன் விரிந்து தெரிகிறது
நல்ல பண்புகள் ஓடி விட்ட காலத்தில்
தீமைகள் ஆட்டம் போடும் உலகத்தில்
மெல்ல தமிழ் ஊட்டி உன்
அருளால் அறிவை ஊட்டி
நாவும் கையும் நல்லனவற்றில்
துலங்கச் செய்த இறைவா நீ
ஈந்த இந்த அருட்கொடைக்கே
இனிதாய் சொன்னேன் நன்றியே

Wednesday, 23 December 2015

வல்லமை படக்கவிதைப் போட்டி 43

இயற்கைப் பேரிடரின் கோரக்கரங்களில் தஞ்சமடைந்த இந்தப் பிஞ்சுகளை, இரக்கமெனும் இனியகுணத்தால் அணைத்துநிற்கும் ஏழைமனிதனிவன்!’ என்று மனம்பூரிக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
இயற்கை விதைத்த
வஞ்சத்தில் பெற்றமகனின்
உயிர் இழந்தான்
உடமை இழந்தான்
எஞ்சியதுஅவன்உயிர் மட்டுமே
கஞ்சிக்கே வழியில்லாதபோது
பிஞ்சுகள் இரண்டு வெள்ளத்தில்
தஞ்சம் ஆகின அவனிடத்தில்
பஞ்சப் பராரியான அவனோ
அஞ்ச வில்லை அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்ந்து நெஞ்சோடுஅணைத்து
பிஞ்சுகள் இரண்டும்
பஞ்சாகவும்
நஞ்சாகவும் கீழ்மைபடாமல் வளர்க்க
நெஞ்சு நிமிர்த்தி நடந்தான்
ஈரமான ஏழை மனிதன்
வெள்ளச்சேதத்தில் செழித்து வளர்ந்தது
மனிதாபிமானம்.

Sunday, 13 December 2015

வல்லமை புகைப்பட போட்டி--42


தன் இறப்பின்மூலம் முதலாளிக்கு ’நிவாரணம்’ தரும் ஆட்டுக்குட்டி, தன் தாய்க்குத் தருவதென்னவோ ஆறாத ’ரணம்’ ஒன்றைத்தானே?’ என்ற உண்மையை உரைக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்நரக நெருப்பில் வீழ்ந்தேனே !
மறந்திருந்த துக்கத்தை
மறக்கவொட்டாமல் செய்கிறதே
வளர்த்த மேய்ச்சல் காரன்
வரைந்து வைத்தான் சோகத்தில்
அச்சுஅசலா என் மகள்படத்தை
ஊரு பக்கம் பேய் மழையாம்
ஊதகாத்து வேறு வீசுதாம்
ஆத்துப் பக்கம் வெள்ளம் வருதாம்
ஒத்தையிலே போகாதேன்னு
தலை தலையா அடிச்சுகிட்டேன்
தங்க மகள் கேட்காம போய்
தண்ணியோட போயிட்டாளே !
மேட்டுமேலே நின்னு மகள்
போறதை வேடிக்கை பார்க்க
மட்டும்தானே முடிஞ்சுது
மேய்ப்பவன் குடும்பத்தை பார்ப்பானா
தண்ணியிலே போற உன்னை மீட்பானா?
மகளே உன்னை மறக்க முடியாம
இந்த படத்தை நுகர்ந்து நுகர்ந்து
விழியிலே நீர் ஓடி நரக நெருப்பில்
நாளும் வீழ்கிறேனே !என் மகளே
சரஸ்வதிராசேந்திரன்

சரஸ்வதிராசேந்திரன்
saraswathiRjendran wrote on 12 December, 2015, 15:29பிரிய மகனே !
நானோ உன்னை காணாத
துயர வெள்ளத்தில்
முதலாளியோ வெள்ள
நிவாரணமாய் ஆட்டுக்கு
மூவாயிர்ம் கிடைக்கும் என்ற
மகிழ்வில் ! ஆம் அவனுக்கென்ன?
தழை பறித்துப்போடுபவனும் அவந்தான்
தலையை வெட்டி காசு பார்ப்பவனும் அவந்தான்
செத்து கொடுத்தாய் வளர்த்தவனுக்கு சொத்து
பெத்தவளுக்கு தீரா துயர்தான் கொடுத்தாய்
நில்லாத என் கண்ணிரால்உன் முகம்
வருடி வருடி உன் நினைவை காக்கின்றேன்
என்னிடம் திரும்பி வருவாயே என் மகனே
சரஸ்வதி ராசேந்திரன்

Sunday, 6 December 2015

வல்லமை புகைப்பட போட்டி--41

துள்ளியோடும் இந்த பரதவச் சிறுவர்கள், மல்லிகையினும் மணமுடைய மனோரஞ்சிதங்கள்! மழைவெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காத்துநிற்கும் தேவதூதர்கள்! வாடிநிற்போரைத் தேடிஉதவும் விடிவெள்ளிகள்!” என்று புகைப்படச் சிறார்களுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.  
இந்த சிறுவர்களுக்கு
விளையாட்டு மைதானமும்
வாழ்க்கையுமே கடல்தான்!
இவர்களின் பெற்றோர்கள்
கடலுக்குள் சென்றால்தான்
இவர்களின் பசியும் பட்டினியும்
போகும் நிலை
இவர்கள் தந்தச் சிற்பங்கள் அல்ல
இவர்கள் அழகான கிளிஞ்சல்கள்!
சக மனிதர்களின் துன்பம் கண்டு
வேகமாய் ஓடித் தங்களால்
முடிந்தவரை வெள்ளத்தில் நீந்தி
கரை சேர்க்கும் மனித நேயம்
கொண்டவர்கள்!
மல்லிகையை விட மணமுள்ள
மானோ ரஞ்சிதங்கள்!
செந்தாமரையைக் காட்டிலும்
அழகான, உணர்ச்சிகளும்
கொண்ட சிறுவர்கள்!
இவர்கள் மீனவர்கள் அல்ல…
மீட்பவர்கள் தேவதூதர்கள்!
சென்னை வெள்ளத்தில்
தன்னை இணைத்துக்கொண்ட
தன்னலமற்ற நாளைய விடிவெள்ளிகள்!
 
உள்ளந்தொடும் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்.
பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் நன்றியும் பாராட்டும்!

Sunday, 29 November 2015

வல்லமை புகைப்பட போட்டி-- 40
தலைக்கனம் குறையத் தலைமுடி யிழப்பாய்; இழந்ததை விரைவில் பெறுவாய் பலமடங்காய்!’ என்று மனமினிக்கும் மணிமொழிகளை இம்மழலைக்குச் செப்புகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.-      மேகலா ராமமூர்த்தி
தலை தலையாய்
வேண்டுதல் இந்த
வேண்டு தலை
கடந்த ஜென்மத்து
பந்தங்களை துண்டிக்க
இந்த வேண்டு தலை
இந்துக்களின் முக்கிய சடங்கு
குல தெய்வத்துக்கு
முடி கொடுத்தால்
முடி மட்டுமல்ல
குழந்தையும் ஆரோக்கியமாய்
வளரும் என்பது ஐதீகம்
தலைக்கனம் போக
தலைமுடி தருவாய்
பார் பார் உனக்கு முடி
எப்படி வளரப்போகுதுன்னு
அழாமல் முடிகொடு சாமிக்கு
அடுத்துக்கொடுப்பார் சாமிசீக்கிரமே
ஆறடி க்கூந்தலை உனக்கு

Tuesday, 24 November 2015

புகைப்பட்டகவிதை ---39

ஊரெல்லாம் கேட்கும் வெடிச்சத்தத்தில் எங்கள் வயிறுபோடும் பசிச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை; இருள் மண்டிக்கிடக்கும் எங்கள் இல்லம் தற்காலிகமாய் ஒளிபெறுவது யாரோ கிழித்துப்போட்ட மத்தாப்பின் கணநேர வெளிச்சத்தில் மட்டுமே!’ என, கல்விக்கனவுகளைச் சுமந்து திரியும் ஏழைச்சிறுவன் ஒருவனின் ஏக்கத்தை ஆழமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்--மேகலாராமமூர்த்தி

. எங்கள் அவதரிப்பு                                                                                       
புவியில் போராடத்தான்
உயிரைப்பணயம் வைத்து
உழைக்கிறோம்
கந்தகத்தையும் பாஸ்பரஸையும்
கையில்பூசிக்கொண்டு
சிறார்களைவேலைக்குப்
பயன் படுத்தக்கூடாதென்று
சட்டம் இருந்தாலும்
சட்டத்தை சட்டை செய்யாதவர்கள்
இருக்கும் வரை எங்கள்
குடும்ப வண்டிக்கு பழுதில்லை
[…]
ஊரெங்கும் கேட்கும் வெடிச் சத்தத்தில்
எங்கள் வெறும் வயிறு
போடும் சத்தம் காணாமல் போகும்
இருள் மண்டி கிடக்கும் எங்கள்
இல்லத்தில் யாரோ எறித்துப்போட்ட
மீதமான கம்பி மத்தாப்பின்
ஒளியில் ஏற்படும்
தற்காலிக வெளிச்சம் மட்டுமே
மீதி நேரம் வீடும் வயிறும்
புகைச்சலில் போராடும்
என் போன்ற சிறார்கள்
நன் முறையில் பள்ளிபோக
நான் மட்டும் வெடிக்கிடங்கில்
என் பள்ளிக்கனவுகள்
எப்போது விடியும்?


Sunday, 15 November 2015

வல்லமை புகைப்பட போட்டி --38

 நாட்டில் மண்டிவரும் மதவாத நச்சுச் செடிகளை உதவாது என வேரோடு பிடுங்கியெறிந்து, அனைத்து மதங்களும் ஒன்றே என நிலைநாட்டுதற்குத்தான் இந்தப் பத்ரகாளித் தோற்றமா? இல்லை…இதுவும் பாமர மக்களை ஏய்க்கும் பொய்வேடமா? என்று தெய்வவுருவைப் பார்த்துக் கேள்வியால் வேள்வி செய்யும் கவிதை ஒன்று!  --மேகலாராமமூர்த்தி                                                                 தீவிர வாதமும்
பயங்கர வாதமும்
உச்சமாகிப்போனது
கொலைகளைச்செய்வதையே
கொள்கையாய் கொண்டோரையும்
நின்றழிக்கும் பத்ர காளியாய் தோன்றி பயமுறுத்த புறப்பட்டாயோ?
எம்மதமும் நம் மதமாய்
சம்மதித்து வாழ வழி செய்வாயோ
இல்லை நீயும் பொய் வேடமிட்டு
குண்டு வைப்பாயோ யாரறிவார்?
கடவுள் பெயராலேயே
கன்னக்கோல் சாத்தும் உலகமாயிற்றே
எல்லாம் கலிகாலம்
திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்-

Monday, 9 November 2015

புகைப்பட போட்டி 37பகல் வேடம் அம்பலமாகிக் காவல்துறையிடம் மாட்டிக் கொண்டு கம்பியெண்ண வேண்டியிருக்குமோ? என்று அஞ்சும் மனிதர்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.


saraswathiRjendran wrote on 7 November, 2015, 13:49பகல் வேஷம்
இருட்டானால்
திருட்டு
பகலானால்
பகல் வேஷம் என்று
நல்லாத்தானே போய்கிட்டிருக்கு
பொல்லாத வேலையா இன்று
போலீஸு பார்க்குது
நண்பா பின்னாடி பார்க்காதே
வம்பா போயிடும் கெத்தா நில்லு
சந்தேகம் வ்ராத அளவுக்கு
தீபாவளி நேரம்
தீவிர வேட்டைக்கு நிற்குது போலீஸு
நாரதனிடம் இரவல்
கேட்காதே என்றேன்
கேட்டியா இப்பப்பாரு
வண்டியிலே பெட்ரோல்
இல்லாம நிற்க வைத்து
அவன் புத்தியை காட்டிட்டான்
நேரம் தெரியாமல் ரயில் வேறு
லேட்டாயி கேட்டாலே
மாட்டப்போறோமோ?
சரஸ்வதி ராசேந்திரன்

Sunday, 1 November 2015

படக்கவிதைப் போட்டி 36-இன் முடிவுகள்

செய்த பாவம் போதாதென்று நம் மக்கள் கணபதி சிலையைக் காலால் உதைத்துக் கடலில் கரைக்கும் பாவத்தைவேறு செய்யத் தொடங்கிவிட்டனர்; அதனால்தான் கணேசனார் கரையாமல் கரையேறுகின்றாரோ? என்று வினவுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
முதல்வன் நீ
மண்ணில் பிறந்தவை
மண்ணிலேயே
மறையும் என்ற
தத்துவத்தை உணர்த்த
தண்ணீரில் கரைக்கிறோம்
பண்ணும் பாவங்கள்
போதாதென்று
உன்னை உதைத்தும்
தள்ளியும் விடுகின்றனர்
கடலிலுனுள்
கற்றூணை பூட்டியோர்
கடலிற்பாய்ச்சினும்
நற்றுணையாவது
நமசிவாயவே என நீ
கரையாமல் கரையேறி நிற்பது கூட
பாவங்களிருந்து
எங்களை கரையேற்றத்தானோ?

Saturday, 31 October 2015

வல்லமை


வல்லமை இதழ் நடத்திய கர்ம வீரர் காமராசர் கட்டுரைபோட்டியில் என்
கட்டுரையையும் பரிசுக்குரியதாக (மூன்றாம் பரிசு) தேர்ந்தெடுத்துள்ளமைக்கு ஐயா தமிழருவி மணியன் அவர்களுக்கும், ஊக்கம் கொடுத்தஐயா காவிரி மைந்தன் அவர்களுக்கும் என் மன மார்ந்த நன்றிகள்,வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வல்லமை குழுவினருக்கும் நன்றி

தடாகம் இலக்கிய வட்டம்


அக்டோபர் 16 வல்லமை இதழில் வந்தது

தமிழ் நாட்டின்
கோடியில் பிறந்தாலும்
கோடிக்கு ஆசைப்படாத கோமானே!
உன் நாடி நரம்பெல்லாம் இந்திய
நாட்டின் நலம் மட்டும்தானே!
ஜனாதிபதியானாலும் நீ
மாடி வீட்டுக்கு ஆசைப்படவில்லை
தேடித் தேடி அலைந்தாலும் உனைப்போல
தெய்வமகன் எங்களுக்குக் கிடைப்பாரா?
கூடிக்கூடி அழுதாலும் உன்னைக்
கூற்றுவன் திரும்ப விடுவானா?
ஆடிப் பாடி ஆண்டவனைத் தொழுதாலும்
ஆட்கொண்டவன் விடுவிப்பானா?
எத்தனையெத்தனை பதவிகள் ஏற்றாலும்
புகழ்போதை என்றுமே உனக்குப்
பொய்முகம் அணிவித்ததில்லை
மாணவர்களுக்கு வழிகாட்டியாய்
மக்களுக்கு நல்ல தலைவனாய்
அரசியல்வாதிகளுக்குப் பாடமாய்க்
குழந்தைகளுக்குப் பிடித்தவராய்
அனைவரையும் நல்ல மனத்தால்
ஆட்கொண்டாய் அன்பனே!
அப்துல்கலாமே! உன்னைக் காலனுக்குக்
காவு கொடுத்துவிட்டுக்
கையறு நிலையில் இந்தியாவே
கலங்கி நிற்கிறது
எழுந்து வா கலாமே…!

தமிழ்த்தேர் ஐப்பசி மாத கவிதை


தடாகம் இலக்கி வட்டம் நடத்திய செப்டம்பர் மாதபோட்டியில் வெற்றி பெற்றமைக்காககொடுக்கப்பட்டசான்றிதழ்

தடாகம்கலை இலக்கிய வட்டம் அக்டோபர் மாதம்

ஒக்டோம்பர் மாதப்போட்டிக்கவிதை
44 -வெற்றிக்கான வழி
இலட்சியமும் ஊக்கமுமே வெற்றிக்கான படி
அலட்சியமும் சோம்பலுமே அழிதலுக்கான வழி
பலமும் முயற்சியுமே வாழ்வின் அடையாளம்
பலவீனம் என்றுமே தாழ்வுக்கு அடிகோலும்
பிழையின்றி உழைத்தலே பெற்றுத்தரும் வெற்றி
உழைப்பு ஒன்றேதான் உயர்வுக்கான வழி
தோல்வியை ஒருபோதும் பொருட்படுத்தாதே
வேள்வியாய் வேலையை செய்தால் வெற்றி உறுதி
உழுத நிலம் இருந்து மழை இல்லாமல் விளையுமா
மழை மட்டும் இருந்து நிலம் உழுவாமல் பயன் உண்டா?
சிறகுகளை அசைக்காமல் பறவை பறக்க முடியுமா ?
விறகுக்கு தீவைக்காமல் நெருப்பு பற்றுமா ?
முயற்சி செய்யாமல் முன்னேற்றம் வருமா
அயற்சியை நீக்கி செயல் பட்டால்தான் வெற்றி வரும்
சரஸ்வதி ராசேந்திரன்

Monday, 26 October 2015

வல்லமை புகைப்பட போட்டி --35

இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக என்னைத்தேர்ந்தெடுத்த வல்லமைக்குகுழுவினருக்கும் மேகலாராமமுர்த்திக்கும் நன்றி நன்றி
நாம் வாழும் உலகு அறத்தைச் சார்ந்து இயங்குகின்றதா? அல்லது…பணத்தைச் சார்ந்து இயங்குகின்றதா? என்றொரு பட்டிமண்டபம் வைத்தால் பணத்தின் பக்கமே நீதிபதி சாயவேண்டியிருக்கும். காரணம்… ’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று பொய்யாமொழிப் புலவரே விளம்பிவிட்டாரே! அறச்செயல்கள் செய்வதற்குக்கூடப் பொருளின் துணையைத் தேடவேண்டியிருக்கின்றதே!
’குபேர பொம்மையை விற்றே குபேரனானவர்கள் உண்டு; ஆயினும் உண்மைப் புதையல்களை உழைப்பால் கண்டடைவீர்!’ என்று எளிய சொற்களில் எதார்த்தம் பேசும் இனிய கவிதை ஒன்று என் இதயம் கவர்ந்தது.--மேகலா ராமமூர்த்தி
அக்கவிதை…
உலகம் முழுதும்
உயிர்ப்பொருள் தெய்வம்
பணம் பணமே !
குபேரன் பொம்மைகண்டால்
குஷிகளில் உள்ளம்
குழந்தையாய் துள்ளும்
கீரிப்பிள்ளை
வீட்டிற்குள் வந்தால் கூட
குபேரன் வருவதாக
குறி சொல்லும்
அறியா மக்கள்
குறுக்கு வழியில்
குபேரன் ஆகத்தான்
குவலயமே விரும்புகிறது
குபேரன் பொம்மையை விற்றே
குபேரனானார்கள் பலர்
உண்மைப் புதையல்கள்
உழைப்பால்தான் வரும்
நம்புங்கள் குபேரனை
நம்பி உழையுங்கள்
உவகையுடன் வந்திடுவான்
குபேரனும்!
இந்தக் கவிதையை யாத்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

Wednesday, 7 October 2015

வல்லமை புகைப்ப்ட போட்டி -32

விஞ்ஞானம் வளர்ந்தாலும் அஞ்ஞானம் அகலாத மக்கள் இன்னமும் திருஷ்டிப் பூசணியில் திருப்திகொள்கின்றனர் என்று கூறும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், பூசணியுடன் அதன் வியாபாரி ஆசையாய் எடுத்துக்கொண்ட செல்ஃபி இது! என்று இப்புகைப்படத்திற்கு விளக்கம் தருகிறார்.--மேகலா ராமமூர்த்தி
திருஷ்டி
கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது
கண்ணேறு கழித்தல்என்பது
முன்னோர்கள் வாக்கு
அழகு அழகுன்னு
குழந்தையைகொஞ்சினா
கண்ணேறு படாமலிருக்க்
கன்னத்தில் வைப்பது
திருஷ்டி பொட்டு
புது வீடு கட்டினால்
புதிதான பூஷணிக்காயில்
படம் வரைந்து வாசலில்
திருஷ்டி பொம்மை
அகத்திய முனிவரே
கண் திருஷ்டியிலிருந்துவிடுபட
சுப திருஷ்டி கணபதி என்ற
மகாசக்தியைதோற்றுவித்தார்
விஞ்ஞானம் வளர்ந்தாலும்
அஞ்ஞானம் மாறா மக்கள்
வரைந்த பூஷணிக்கு
திருஷ்டி படாமலிருக்க
வரை படம்போல்
அழகு காட்டி அதன்
அழகில் மயங்கி ஆசையுடன்
எடுத்துக்கொண்டான் ஒரு செல்ஃபி
ஆசை யாரை விட்டது?
சரஸ்வதிராசேந்திரன்

Tuesday, 29 September 2015

அப்துல் கலாமுக்கு அஞ்சலி

                           அப்துல் கலாமுக்கு  அஞ்சலி
காவியத்தலைவன் நீ
திருராமேஸ்வரத்தில்  உதித்த    திருமகனே
திக்கெல்லாம்  புகழ் பரப்பிய ஏழை பங்காளனே
அன்புருவாய்   வந்து   மக்களை ஆட்கொண்டாய்
அறிவொளியால் மாணவருக்கு   வழி காட்டி
அகக்கண்   திறந்து விட்ட  அருட்செல்வன் நீ
தகுதி இருப்பவரை தேடி வரும் தலைவன் பதவி
பதவி செருக்கு கொஞ்சமும் இல்லாத பண்பாளன்  நீ
அஞ் ஞான இருளகற்றி அருள் பாலித்தாய் 
விஞ்ஞான  விளக்கேற்றி விண்ணளந்த மகான்
அக்னி சிறகுகள் விரித்து  அசத்தினாய்  உலகை
பொக்ரைனில் அணுவைப் பிளந்து அடக்கினாய் அண்டை நாட்டை
 ஊனமுற்ற குழந்தைகளுக்கு எடை குறைந்த
செயற்கை கால்களை வடிவமைத்த மனிதாபிமானி
 இந்திய நாடே என்  குடும்பம் என்றுரைத்து
இல்லற வாழ்வைத் துறந்த   துறவி   நீ
தன்னலம் இல்லா தனிப்பெரும் தலைவன் நீ
உன் கனவை நினைவாக்கி இந்தியாவை வல்லரசாக்க
புண்ணியன்  நீ காட்டிய வழியில் நடந்து
பெருமை சேர்ப்போம் என சபதம் ஏற்கிறோம்  உன்
பிறப்பு சம்பவமானாலும் இறப்பை சரித்திரமாக்கி
பிறந்த மண்ணுக்கு பெருமை தேடித் தந்த
ஈடு இணை இல்லாத காவியத்தலைவன் நீ
ஏவு கணை  சூத்திரதாரியே  உன்னைகாலனுக்கு
காவு கொடுத்துவிட்டு கலங்கி நிற்கிறது இந்தியா
 

Monday, 28 September 2015
                                                                

 

      உறுதி மொழி


இந்த படைப்பு என் சொந்த படைப்பு  தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா-2015  புதுக்கோட்டை மற்றும்  தமிழ் நாடுஅரசு --தமிழ்   இணையக் கல்வி கழகம் நடத்தும்  மின்னிதழ் இலக்கியபோட்டிகள்-2015 க்காகவேஎழுதப்பட்டது  என்று உறுதி கூறுகிறேன் .இந்த கட்டுரை   இதற்கு முன்  வெளியானதில்லை ,இதன் முடிவு தெரியும் வரை வேறு எதிலும்  வெளி வராது என்றும் உறுதி கூறுகிறேன் .

  என் தலைப்பு  ------     உயர்வான  வாழ்வுக்கு  உருவாக்கு   தூய்மையை ...


                          (   சுற்று சுழல்    விழிப்புணர்வு   ---கட்டுரை )

விழிப்பின்  முதல் படி  அறிதலில்  இருந்தே தொடங்குகிறது .  மனிதன் உயிர் வாழ்வதற்கு  இன்றியமையாதனவாக விளங்கும்  ஐம்பூதங்களான  காற்று,  நீர்,  நிலம் , நெருப்பு , ஆகாயம்   இவைகள் சுற்றுப்புற சூழலால் பாதிக்கப்பட்டால்     மனித  இனமே அழிந்து போய்விடும் .
பெருகி வரும் வாகனங்களின்   புகை நாம் சுவாசிக்கும் காற்றில் கலப்பதால்  மாசு படுகிறது . இதை நாம் சுவாசிப்பதால் நம் உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது .  நிலத்தடியில் தற்போது அளவுக்கு அதிகமாக  புளோரைடு
என்னும் மாசு காணப்படுகிறது .இதனாலும் நம் உடல் நிலை பாதிக்கப்படுகிறது .காற்று மற்றும் நீர் மாசு அடைவதால்    நாம் கொட்டும் குப்பைக்கூளங்கள்,அதன் மூலம் எலிகள் .கொசுக்கள் தொல்லைகள் ,  நோய்கள் ஏற்படுகின்றன ,டெங்கு ஜுரம் வரும் வாய்ப்பும் உள்ளது .  நிலத்தடி நீரை சார்ந்தே  நாம் வாழ்கிறோம்   .அந்த   நீரில்   சாக்கடைகள்,தொற்சாலை கழிவுகள்  உருக்காலைகள் போன்ற காரணங்களால்  பாதிப்படைகிறது
 மரத்தூள்,திருமண மண்டபங்களில் சமைக்கப்படும் அசைவ கழிவுகள் ,பிளாஸ்டிக் போன்றவைகளை பொது இடங்களில் கொட்டுவதால்  இவை மண்ணில் படிந்து அந்தமாசுகள்  நச்சுகளாக மாறுகின்றன. வீட்டுக்கழிவுகள்’,பாதரசம் போன்ற  உலோக கழிவுகளால் கடல் மிக மோசமான பாதுகாப்பற்ற   நிலைக்கு உள்ளாகிறது .சாலை ஒர்ரங்களில் வைக்கப்படும்  பதாதைகள்,திறந்த் வெளியில் குப்பைக்கிடஙுகள் ,திடக் கழிவுகள் ஆகியவைகளாலும்   மாசு ஏற்படுகிறது .புற ஊதாக்கதிர்கள்  நுண் அலை போன்ற கதிர் வீச்சுகளால் சுற்று சூழல் மாசுபடுகிறது உலக  வெப மய மாதல் என்ற பேரழிவுக்கு இந்த  நெருப்பு  மாசு படுவது ஒரு காரணம்  நிலம் ,னி நீர் ,காற்று ஆகியவை   மாசு படுவதால் இது பனிப்பிரதேசங்களை உருகச்செய்கிறது  இதி கடலில் கலப்பதால்  கடல் சீற்றம் .சுனாமி போன்ற பேரிழப்புகள்  ஏற்படுகிறது .  சாட்டிலைட்,வின் கேமிராக்கள் அதிக அளவிலான பொருட்கள்  குறிப்பிட்ட காலத்திற்குமேல்  செயலிழந்த இந்த விகலங்கள் வான் வெளியில் குப்பையாக சேர்ந்து  சுற்ற ஆரம்பிக்கின்றன  அதிலிருந்து கதிரியக்கம்  வெளிப்பட்டு  பேரிழப்பு ஏற்படுகின்றன  ஆகாயமும் மாசு படுகிறது  இப்படி ஐம்பூதங்களும்    சுற்று சூழலால் மாசு படுவதால்  மனித இனமும்  அழிவுக்குள்ளாகிறது கண் கூடு

தொழி நுட்ப வளர்ச்சியாலும் ,  நவீன  வசதிகளாலும்   சுற்றுப்புற சுழல் மாசுபடுகின்றன

சுற்றுப்புற சூழலை பாதுகாக்க   யோசனைகள்

 பிலஸ்டிக் பொருளை விடுத்து   சணல் ,காகித பொருட்களை உபயோகிக்கலாம்
 வீட்டிலும் ரோட்டோரங்களிலும் மரங்கள் நடலாம்
வாகன பயன் பாட்டை குறைத்துக்கொள்ளலாம்
செயற்கை உரங்களை விடுத்து இயற்கை உரங்களை பயன் படுத்தலாம்
 கடற்கரை ஒரங்களை பாது காக்கலாம்
மழை நீர்  சேமிப்பு திட்டங்களை செய்ல் படுத்தவேண்டும் 
நீராதாரங்களில்  கழிவுகள் கலக்காமல் இருக்கலாம்
மின்சார சேமிப்பை கடை பிடிக்கலாம் ஃப்ரிஜ்,ஏ சி பயன் பாட்டை குரைக்கலாம்
திருமணம் ,தீபாவளி போன்ற  நாட்களில் ஆயிரம் வாலா போன்ற வெடிகளை வெடிக்காமல் இருந்தால்  சுற்று சூழல் பாதுகாக்கப்படும்
இயற்கை வளங்களின் அவசியத்தை யும் ,அவற்றை பாது காக்கக்கூடிய அவசியத்தையும்  அடுத்த தலை முறைக்கு சொல்லி கொடுக்கலாம்
கணினியும் ,ஆடம்பர உபகரணங்களையும்  அளவோடு பயன் படுத்தலாம்
வாகனங்களில் ஒலி யை   குறத்து உபயோகிக்கலாம்
பள்ளிக்கூடங்களிலும்,கல்லூரிகளிலும்  பாடங்களாக  போதிக்கலாம்
மரங்களையும் காடுகளையும் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை கடை பிடிக்கவேண்டும் வீட்டுக்குப்பைகளை  உரங்களாக மாற்றி வீட்டிலேயே நிலத்தொட்டிகள் அமைக்கலாம்
இதை அரசாங்கம் தான் செய்யவேண்டும் என்பதில்லை   நாம் ஒவ்வொருவரும்     முயன்றால்தான் சுற்றுசூழலை பாதுக்காக்கமுடியும்  வீட்டில் மரங்களை வளர்த்து  மர வளத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆகிஸிஜனை அதிக அளவில் பெறமுடியும் இதனால் மழையின் அளவும்  அதிகரிக்கும் இதனால் வெப்ப மயமாதலை தடுக்கலாம்
உயர்வான   வாழ்வுக்கு    உருவாக்க வேண்டும் தூய்மையை , அதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாகமுடியும்


பதிவரின் பெயர்---சரஸ்வதி ராசேந்திரன்

வயது                       ----   70

புகைப்படம்            --மேலே

மின்னஞ்சல்       -----sathira mannai@ gmail .com

 செல்                       ------  9445789388
வலைப்பதிவர் திரு விழா வில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தர்ப்பட்டு விட்டது .
வலைப்பக்கத்தைதவிர மற்ற விவரங்களை வெளியிட வேண்டாம்