வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழ்சேவை --1-10-18

கம்பன் வடித்த காவியம்
கம்பன் கவியில் அவனொரு கொம்பன்
கற்பனை சொல்லில் அற்புத வம்பன்
வித்தகத் தமிழில் சிலம்பாடும் வீரன்
சித்தத்தை ஈர்த்திடும் நற்றமிழ்த் தீரன்
நயமும் நளினமும் நயத்தக்க நாகரீகமும்
பயன்பெற சொல்லும் கம்பன் காவியம்
ஒழுக்க மறைகளை உயர்வாய் ஓதியே
மக்கள் மனதில் என்றும் மங்காத ஓவியம்
கம்பனுக்கொரு இணையினி உலகினில் இல்லை..
சொல்லின் செல்வனாய் செந்தமிழ் அளித்தவன்
விருத்தப் பாக்களில் விதவிதமாய்
உவமையளித்து
திருத்தமாய்ப் பாடி தேனாய் இனித்தவன்
இந்த இப்பிறவிக்கிரு மாதரை
சிந்தையாலும் தொடேன் என்ற
ஏகபத்தினி விரதன்
தந்தை சொல் காப்பாற்றிய தன்மானத் தனயன் ராமன்பெருமை
சுந்தரக் காண்டத்தில் சுகமாய்ச் சொன்னவன்
கம்பனின் கொஞ்சி விளையாடும் கவிதையில்
நெஞ்சு கரையாதவர் இம்மண்ணில் உண்டோ
சொற்களின் தவம் கம்பனவனின் திறமாம் அவனின்
நற்புகழ் காலம்முழுதும் நிலைக்கும் தவப்பயன் பேறு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக