ஞாயிறு, 22 அக்டோபர், 2017

8-8-2017 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா- நாவினால் சுட்ட வடு

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 08/08/2017நடந்து முடிந்த பாரதிதாசன் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் Madhura
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
நாவினால் சுட்ட வடு
அரணை விட்டு வெளிவந்து
அரவமாய்த் தீண்டும் நாக்கால்
அடுத்தவனின் உணர்வுகளை
அலைக்கழிக்கும் அழுக்குமனம் ஏன்?
அன்பான வார்த்தைகள் இருக்க
வம்பான வலுவிழக்க வைக்கும்
வசவுகளும் கசடுகளுமாய் கொட்டி
வன்முறைக்கு வழிவகுக்க வேண்டாமே
நெருப்பின் சூட்டை பொறுக்கும் மனிதர்கள்
நாக்கின் கடுஞ்சொல் பொறுப்பதில்லை
உயிர்களை வாழ வைக்காவிட்டாலும்
உயிர்பறிக்கும் வார்த்தைகள் வேண்டாம்
நாவினால் சுட்ட வடு பாடாய் படுத்தும்
நவில்கிறவனுக்கும் விளைவிக்கும் கேடு
சிதைந்து விடாமல் சீர்தூக்கிப் பார்த்து அன்பு
விதைதூவி அகிலமெங்கும் வார்த்துவிடு
நரம்பில்லா நாக்கை நல் வழியில் திருப்பி
வரம்பில்லா வார்த்தைகளுக்கு அணைபோடு
வலம் வந்து பாதுகாக்கும் நலம் தரும் வாக்கு
குலம் காத்து கோடி நன்மை தர நாக்கை சீர்படுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக