ஞாயிறு, 22 அக்டோபர், 2017

நதியோர நாணல்கள்00கதை--31-8-17

நதியோர நாணல்கள் குழுமத்திற்கும் நடுவருக்கும் நன்றி
நிழல்
பக்கத்து வீட்டு சிறுமிகளுடன் தன் மூன்று வயதுகாவ்யாவை விளையாட விட்டு விட்டு
காவேரி வீட்டின் உள்ளே சென்று சமையலைக்கவனித்தாள்
அந்த அப்பார்மெண்ட்டில் ஐந்து வீடுகள் காவேரியின் பக்கத்து வீட்டில் இரண்டு சிறுமிகள் காவேரியின் மகள் காவ்யா அவர்கள் இருவரையும் விட சிறியவள். குழந்தத்தனம் உள்ளவள் அதனால் அடுத்த வீட்டு சிறுமிகள் எதைச்சொன்னாலும் உண்மையென நினைப்பாள் .
அதை பயன் படுத்தி அவர்கள் இருவரும் காவ்யாவை மிரட்டி
அவள் தின்பண்டங்களைக்கூட வாங்கி சாப்பிட்டு விடுவார்கள்
அவர்களுடன் விளையாட வேண்டும் என்ற நினைப்பில் அம்மாவிடம் காவ்யா எதையும் சொல்வதில்லை இதை நன்கு புரிந்துகொண்ட அந்த சிறுமிகள் சாக்கெலெட் கொடுத்தாயானால்தான் விளையாட வருவோம்
என்று சொன்னால் காவ்யா அம்மாவிடம் அழுது தனக்கு மூன்று சாக்கெலெட் வேண்டுமென்று அழுது மஞ்ச் வாங்கி வந்து கொடுப்பாள்
ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் திடீரென காவ்யாவை பேய் பேய் என்றுபயமுறுத்த காவ்யா வீறிட்டு அழது மயக்கமானாள்
பயந்து ஓடி விட்டார்கள் அந்த சிறுமிகள் ..சமைத்து முடித்த காவேரி
மகளை கூப்பிட வந்தாள் காவ்யா சுருண்டு கிடந்ததைப்பார்த்து பதறிப்போய் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடி நீர் தெளித்தாள் முகத்தில் மயக்கம் தெளிந்த காவ்யா அம்மாவின் கழுத்தைகட்டிக்கொண்டு பேய் பேய் என்று கதற காவேரி பக்கத்து வீட்டுக்குழந்தைகளை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டாள் ’ பயத்தில் தெரியாது ஆண்ட்டி நாங்க அப்பொழுதே வீட்டிற்குப் போய் விட்டோம்’ என்றார்கள்
காவேரி விடவில்லை ‘’இல்லை நீங்கள் பயமுறுத்தியிருக்கிறீர்கள் மரியாதையா சொல்லுங்க இல்லே போலீசுல பிடித்துக்கொடுத்து விடுவேன் ‘’என்று மிரட்டியதும் உண்மையைச்சொன்னதுகள்
இல்லே ஆன்ட்டி வெயிலிலே அவள் உருவத்தைக்காட்டி பேய்ன்னு சொன்னோம் அவள் நடக்க அதுவும் நடக்க தன்னை விட பெரிசா கூட வருதுன்னு நினைச்சு பயந்துட்டா நாக்க பேய்ன்னு சொன்னதும்
பயந்து மயங்கி விழுந்ததும் நாங்க பயந்து ஓடிட்டோம் இதான் ஆண்ட்டி
நடந்தது அவர்கள் சொன்னதும் மகளை ஆசுவாசப்படுத்தி கொழு மோர் காய்ச்சிக்கொடுத்த காவேரி ..அடுத்த நாள் தன் நிழலைக்காட்டி இது நம்மோட நிழல்டா பேய் இல்லே இங்கேபாரு இப்படி பார்த்தின்னா நம்ம உருவம் பெரிசாத் தெரியும் இந்தபாக்கம் பார்த்தின்ன சின்னதாதெரியும்
வெயிலிலே மட்டு மில்லே வீட்டில் உள்ளலைட் வெளிச்சத்திலே கூட
இப்படித்தெரியும் இதுக்கா பயந்தே .. விளக்கம் கொடுத்தாலும் மிரண்டு கொண்டுதான் இருந்தாள் காவ்யா சின்ன வயதுதானே அதுகளுக்கும்
இன்மேலஇப்படி பயமுத்தாதீர்கள் என்று அந்த சிறுமிகளையும் எச்சரித்து அனுப்பினாள் காவேரி
சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக