சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை

#காவிய_களஞ்சியம்
போட்டியில்
          
#வாழ்வில்_கண்ட_வல்_வில்_ஓரி
 🍀 🍀 🍀 🌳 🌳 🌳 🌳 💮 💮 🍁 💮 💮 🌼
என்ற தலைப்பிற்கு கவிதை படைத்த
அனைவருக்கும் வாழ்த்துகள்
போட்டியின் நடுவராக பயணித்து
சிறப்பான பின்னுட்டம் கொடுத்த
கவிஞர் திரு #செல்வா_ஆறுமுகம் அவர்களுக்கு
வாழ்த்துகளும்..
போட்டியின் நெறியாளராக பயணித்த திரு #கவிஞர்_கனகரத்தினம்_செல்லமுத்து
அவர்களுக்கு வாழ்த்துகளும்
தெரிவித்துக் கொண்டு
இதோ... வெற்றியாளர்கள்..
வாழ்வில் கண்ட வல்வில் ஓரி
கொல்லி மலைத் தலைவனவன்
வில் வித்தையிலும் சிறந்தவனவன்
ஊதனின் மகனானதால் புலவர்களால்
ஆதன் ஓரி என அழைக்கப்பட்டான்
பாடி வந்தோருக்கும் தன்னை
நாடி வந்தோருக்கும் யானைகளையும்
பொற்குவளை மலரையும் ஈந்தவன்
ஈகையிலும் வில்வித்தையிலும்
வீரத்திலும் சிறந்தவன்
ஓரி வேட்டுவ குலத்தைச்சேந்தவன்
ஒரே அம்பால் ஒரே முறையில்
ஐந்து உயிர்களை கொன்ற வில்லாளன்
வேட்டையாடிய மானைச்சுட்டுக்கொடுத்தான்
தொட்டுக்கொள்ளத்தேனும் கொடுத்தான்
தம் மலையில் பிறந்தபொன்மணிகளைத்
தனக்கென வைத்துக்கொள்ளாமல்கொடுத்தவன் ஓரி
கொல்லிமலையின் செழிப்பும் ஓரியின் புகழும்
கண்டு பொறாமைப்பட்ட சேரன்
ஓரியின் பகைவனாம் மலையமான் திருமுடிக்
காரியின் துணைகொண்டு ஓரியை வீழ்த்தினான்
கொல்லிமலை சேரனைச்சேர்ந்ததுஓரியின் மறைவால்
கூத்தாடுவோர்களின் கலைத்திறத்தைக்கண்டு
கொடையாகக் கொடுத்தான் பல நாடுகளை
கொடுத்துச் சிவந்த கரங்கள் ஓரியுனுடையது
கடையேழு வள்ளல்களில் ஓரியும் சிறப்புடையவனே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக