சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை---1-7-2018

மண்ணுக்குப்பெருமை சேர்த்த மனுநீதி சோழன்
சோழ நாட்டை சிறப்பாய் ஆண்டவன்
ஊழல் இல்லா ஆட்சி தந்தவன்
காட்சிக்கு எளியவன்
ஆட்சியில் புதுமை செய்தவன்
மனு நீதிச் சோழனவன் அனைத்து
மக்கள் விரும்பும் மன்னனவன்
மன்னவனின் மகனே ஆனாலும்
மந்திரியின் மகனே ஆனாலும்
பாமரனுக்குள்ள நீதிதான்
பார் ஆள்பவனுக்கும் என உரைத்தவன்
மக்களின் குறையை நேரில் கேட்க
மண்டபத்தில் ஆராய்ச்சி மணி கட்டியவன்
வீதிவிடங்கன் ஓட்டியத்தேர்
வீதிவழியே வந்த கன்றின்மீதேற
அழுத கண்ணீரோடு தாய்ப்பசு
ஆராய்ச்சி மணியை அடிக்க
அதிரடியாய் கேட்ட மணியின் ஒலிகேட்டு
அதிர்ந்து போய் ஓடிவந்த மன்னன்
நிலவரம் அறிந்து கலவரம் அடைந்தாலும்
நீதியை நிலை நாட்ட அமைச்சரை அழைத்து
ஆணையிட்டான் தவறிழைத்தவனை தண்டிக்க
அரசனின் மகனை கொல்ல மனம்வராமல்
தன்னையே மாய்த்துக்கொண்டான் அமைச்சனும்
மன்னவன் உண்மை தெரிந்து உடனடியாக
அரும் புதல்வனை தானே ஆழியில் மடித்தான்
திருவாரூர் சோணாட்டின் மன்னன் மனு நீதி
பறவைகளின் குஞ்சுகளைசூறையாடிய
பாம்பின் குடல் அறுத்து குஞ்சுகளைக்
காப்பாற்றியவன் தாய்ப்பறவையின்
முறையீட்டிற்காக
பருவம்தப்பியமழையால்தன்னரிசி
பாழாயிற்று என முறையிட்ட மாதரசிக்காக மன்னவனேவருணனிடம்
வாரம்ஒருமுறை இர வில் மட்டுமே மழைபெய்யஇறைஞ்சிநின்றவன்
செயற்கரிய செயலைச் செய்த சோழனின்
செயலைப் பாராட்டி மணிமேகலையும்
சிலப்பதிகாரமும் நீதிதவறாதமனு நீதி சோழன்
சிறப்பாய் ஆண்ட பூமியிது என சேக்கிழாரும்
திருவாரூரின் சிறப்பினை சேர்க்கிறார்
நிறைவுடன் கோலோச்சி முறை வழுவாமல் மக்கள்
குறை கேட்டு நீதி எனும் சொல்லின் நிகரிலா
சான்றானவன் நீதி தர்மத்தின் இலக்கணமானவன்
மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பவனே மன்னன்
மக்களோடு நெருங்கிய தொடர்பு கொள்பவனே நல்ல
தலைவன் என்பதற்கு எடுத்துக்காட்டய் விளங்கிய
தன்னிகரில்லா மனு நீதியின் புகழ் வாழிய வாழியவே
மலையளவு தவறு செய்தாலும் இன்று
மகன் என வரும்போது மூடி மறைக்கும்
தலைவர்களும் அமைச்சர்களும் இனியாவது உணரட்டும்
தலைவன் மனு நீதியின் புகழை எட்டட்டும்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக