சனி, 29 செப்டம்பர், 2018

புதியதொரு வாழ்க்கை-- 5-6-18

ஆத்துவழி பாதையிலே
ஆத்து வழி பாதையிலே
அத்தை மக போகையிலே
நேசம் வச்சி நான் தவிச்சு 
நிழல்போலே நான் தொடர்ந்தேன்
கொண்டையிலே தாழம்பூ மணக்க காலு
தண்டையிலே மனசு கிறுகிறுத்துப்போகுது
கண்டாங்கி ச்சேலையை இடுப்பிலே கட்டி
கண்ணுல மையை அப்பி கடிசாக போறவளே
சின்ன சிட்டு நீயும் தானே அடிக்கடி
மின்னல் வெட்டி பார்த்துப்போறே
சித்திரை நிலவே அத்தை மகளே
நித்திரை இல்லாம அலையுறேன் நானே
ஆத்து வழி பாதையில் போறவளே
தோப்போரம் யாருமில்லே வாடி புள்ளே
அத்தை மக ரத்தினமே அழகுமயில் சித்திரமே
அத்தான் மனசை புரிஞ்சுக்கோடி அத்திப்பூவே
கள்ளமா பார்த்து கன்னக்குழியிலே பதுக்கிறியே
கவர்ச்சியான உன்னழகில் கவிழ்ந்தே விழுந்தேனடி
நாணலைப்போல் நாணுகிறாய் நளினமாய் நடக்கிறாய்
நானும் எம் மனசை கொட்டிபுட்டேன் நம்பி நீவாடிபுள்ளே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக