திங்கள், 23 ஜூன், 2014

உறுத்தல்


பக்கத்து ப்ளோரில் நடந்த ஷுட்டிங்கை ப் பார்த்துக்கொண்டிருந்த புது நடிகை அவந்திகா படத்தின் கிளைமாக்சை ப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்து ,அந்த முன்பின் தெரியாத டைரக்டரிடம் ஓடி பட படவென ஆங்கிலத்தில் பாராட்டினாள்
டைரக்டர் விஷ்வாவோ எந்தவித ரீயாக்க்ஷனும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றார் அவந்திகாவிற் கு சப்பென்றாகி விட்டது ச்சே என்ன மனுஷன் இவர் எப்படி மனம் திறந்து
பாராட்டினோம் , மரியாதைக்கு கூட தாங்க்ஸ் சொல்லாமல் வேண்டாம் ஒரு சிரிப்பையாவது தெளித்திருக்கலாம் இப்படியா அலட்சியம் செய்வார் தலைக்கனம் கொண்டவரோ ?கோபமாகவும் , எரிச்சலாகவும் வந்தது ,புது முகமானவள் என்ற அலட்சியமோ? எப்படிப்பார்த்தாலும் மரியாதை தெரியாத மனுஷன் போலிருக்கு
நான் ஏன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் ,பேசாமல் இருந்திருக்கலாம் ,நல்லதை பாராட்டாமல் இருக்கமுடியலேயே எனக்கு இது இந்த நோஸ் கட் வேண்டியதுதான் மன வேதனையுடன் வெளியேறினாள் .
அடுத்த நாலு மாதத்தில் ..
விஷ்வா எடுத்த படம் ஓஹோன்னு ஓட ,அடுத்து ஒருபடத்துக்கு கதாநாயகி தேடும் படலம் மும்முரமாகியது ,அப்பொழுது இணை டைரக்டர் கேசவ் அவந்திகாவை பற்றி சொல்ல --டைரக்டர்விஷ்வாவும் சரியென்றான் .கேசவ் ஓடினான் அவந்திகாவிடம்
''என்னசார் சொல்றீங்க ? உங்க டைரக்டர் என்ன சொல்வாரோ?''
''இல்லே மேடம் ..நீங்க வாங்க நான் சொல்லிக்கிறேன் ''--கேசவ் தைரியம் தந்தான்
அவந்திகாவும் விஷ்வா டைரக்சனில் நடிக்க ஆர்வம் கொண்டு வந்தாள்
எல்லா டெ ஸ்டும் ஓகே ஆகி பட சூட்டிங்ஆரம்பமானது .அதுவரை கதாநாயகன் யாரென்றே அவ்ந்திகாவிற்கு தெரியாது .தனக்குத்தரப்பட்ட வசனத்தை ரொம்ப கரெக்டாக சொல்லி ஓகே வாங்கினாள் . இடைவேளையின்போது ....தன்னுடைய ரொம்பநாள்
உறுத்தலை கேட்டால் விஷ்வாவிடம்
''சார் அன்னைக்கு எத்தனை ஆர்வமா வந்து உங்களை பாராட்டினேன் ,,ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போனீர்களே ஏன்?''
'' ஆமாம் நீங்க பாட்டுக்கு வந்து பட படன்னு பேசிட்டு போனீங்க எனக்கு அன்னைக்குத்தான் உறுத்தலே வந்தது நாம படிக்காம போனேமேன்னு ஆங்கிலம் தெரிஞ்சா தானே நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியும் .அதனாலேதான் வெட்கப்பட்டு வேகமா போனேன் இந்த நான்கு மாதத்தில் டியூ ஷன் எடுத்துகிட்டேன் சரளமா ஆங்கிலம் பேச ,அதுசரி நீங்க எப்படி இத்தனை சரளமா தமிழ் பேசுறீங்க ?அன்னைக்கு அப்படி பேசியிருக்கலாமே ''
''நான்கூட உங்க படத்திலே நடிக்க ஆர்வம் கொண்டுதான் நானும் இந்த நாலு மாதத்திலே
தமிழ் கத்துகிட்டேன் சொந்த குரலில் பேசணும்னு ,''
படம் முடிவடைவதற்குள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகி காதல் படம் போல் வளர்ந்து கல்யாணத்தில் முடிந்தது
மின்மினி 2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக