திங்கள், 23 ஜூன், 2014

மருந்து --தேவி இதழ் -6--9--1992


 அந்த பங்களா வின் வெளியில் புல்வெளி இருந்தது ,காலைத்தென்றல் இதமாக இருந்தது பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருந்த அன்னபூரணி கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.காரை நிறுத்திவிட்டு டிரைவர் ஆறுமுகம் இறங்கி வருவதை பார்த்து "என்ன ஆறுமுகம் தம்பி வரலே ?''கேட்டால் .
"வந்துட்டாங்க ,பெரிய அய்யா வீட்டுக்கு போயிட்டு வரேன்னாங்க ''என்றான் பணிவாக .அவனுக்கு எதிரில் உணர்ச்சிகளை காட்ட விரும்பாத அன்னபூரணி எழுந்து உள்ளே போனாள்
இவன் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான் ?லீவிற்கு வரும் குழந்தைகள் பெற்ற தாயையும் ,தகப்பனையும் பார்க்க ஆவலாக ஓடி வருமா ?வந்திறங்கியதுமே பெரியப்பாவை பார்க்க போறதாவது?சதா பெரியப்பா ,பெரியப்பாதானா ?
இவன்தான் இப்படியென்றால் மகள் அனுவும்அப்படித்தான் செய்கிறாள் அவர்களைச்சொல்லி குற்றமில்லை அந்த கிழவன்தான் ஏதோ மருந்து வைத்து பெற்றவர்களையே மறக்க வைத்திருக்கிறான் ,இல்லாவிட்டால் இந்த பிள்ளைகள் பெற்றவர்களைவிட அந்த கிழவனிடம் பாசம் வைக்குமா ?எத்தனை செய்தும் நம்மிடம் பாசம் இல்லையே இவர்களுக்கு .
இது நாள் வரை சரி ,விவரம் புரியாதவர்கள் .கல்லூரியில் கால் வைத்த பிறகும் கூடவா பெற்ற்வர்களைப்புரிந்து கொள்ள முடியவில்லை .வரட்டும் அவன் .'கறுவினாள்அன்னபூரணி .
நீண்ட நேரத்திற்குப்பிறகு பிரபு வந்தான்
"அம்மா ,எங்கள் கல்லூரியிலேயே நான்தான் மாணவத்தலைவனாகதேர்ந்தேடுக்கப்பட்டிருக்கேன் "என்றான்
அந்த சமாச்சாரத்தை சொல்லத்தான் பெரியப்பா வீட்டுக்கு ஓடினாயா?இத்தனைக்கும் காரணமான தாய் தகப்பனிடம் அதை
முதலில் சொல்லனும்னு உனக்குத் தோணலியா ?'காட்டமாக கேட்டாள்.
"என்னம்மா நீங்க ,நம்ம குடும்பத்திலே பெரியவர் அவர் தானே?உங்ககிட்டே சொல்லாம இருந்தால நீங்க கொவிச்சுக்கணும் ,அதான் சொல்லிட்டேனே ,பெரியப்பா வீடு வர்ற வழிதானே அதான் அவர்கிட்டே சொல்லி ஆசீர்வாதம்
வாங்கினேன் அது தப்பா ?'
அன்னபூரணிக்கு அழுகையும் ஆத்திரமும் பீறிட்டன
"ஆமாண்டாப்பா அவர்தான் உங்களை வளர்த்து ஆளாக்கியவர் ,நாங்களெல்லாம் ...'
பிரபு அவளை ஒரு நிமிடம் உற்று பார்த்துவிட்டு சொன்னான் ."பெற்று விட்டால் மட்டும் அம்மா அப்பா ஆகிடமுடியாதும்மா"
"டேய்,என்னடா சொல்றே ?உங்கப்பா உங்ககளைஎல்லாம் பெரிய கான்வென்ட் படிப்பு படிக்க வைக்கலே ?நீங்க கேட்டப்ப
நீங்க விரும்பின பொருட்களை எல்லாம் தடை சொல்லாம வாங்கித்தரலேஇதெல்லாம் நாங்க செய்யாம உங்க பெரியப்பாவா சென்சார் ?உங்களைச்சொல்லி குற்றமில்லை யடா ஏதோ தம்பி கஷ்டப்பட்டுசம்பாதித்து முன்னுக்கு வரட்டும் .அவன் பெத்த குழந்தைகள் அமோகமா வாழட்டும்னு நினைக்காம பொறாமையிலே வம்சம் அற்றுப்போன உங்க பெரியப்பா எதையோ சொல்லி உங்க மனசை கலைச்சிட்டார் ,அதாண்டா இப்படி பேசறே "
கோபத்துடன் முகமெல்லாம் சிவக்கத்தாயை ஏறிட்டுப்பார்த்த பிரபு --"அம்மா அனாவசியமா பெரியப்பாவை திட்டாதீங்க பெரிய கான்வென்ட்டிலே படிக்க வைச்சீங்க ,நல்ல துணிமணி ,பங்களா வாசம் ,காரு னுஎல்லா வசதியும் செய்தீங்க மாதம்
பணம் ,டீக்கா டிரஸ் ,இப்படை எல்லாவசதியும் செஞ்சிருக்கீங்க ,அதை நான் மறக்கலே மறுக்கவு இல்லே .,,ஆனால்
"ஆனால் என்னடா ஆனால் ,இதைவிட பெற்றவர்கள் என்ன செய்யணும் ?தாடை இறுகியது அன்னபூரணிக்கு
"அன்பு செய்ய மறந்துட்டீங்க அம்மா ஊர் பெருமைக்காகவும் ,போலி கௌரவத்திற்காகவும் எல்லாம் செஞ்சீங்க ,ஒரு நாளாவதுஎங்களோட கொஞ்சி மகிழ்ந்து ,சந்தோஷமாக எங்ககிட்டே நடந்ததுண்டா ?படிப்பு ,கண்டிப்பு இதைத்தானே கண்டோம் உங்களிடம் ,பெரியப்பாவிற்கு பிள்ளைங்க இல்லாவிட்டாலும் எங்ககிட்டே அன்பு செலுத்தினார் பாசமா நடந்துகிட்டார் .உண்மையை சொனனால்அவருடைய அன்புதான் இத்தனை வசதி இருந்தும் நாங்க தறி கெட்டுப்போகாம
இருந்ததற்கு காரணம் அவர் அன்பு உரமும் ,நல்வழிகாட்டலும் இல்லேன்னா நாங்க ஊதாரி பிள்ளைகளா மாறி போயிருப்போம் இது புரியாம பணம் இல்லேங்கிறதுக்காக வும் ,பிள்ளைங்க இல்லேன்கிரதுக்காகவும் பெரியப்பாவை கரிச்சு
கொட்டரஈன்களே நியாயமா ?மருந்து வைச்சுட்டாருன்னு சதா அப்பாகிட்டே புலம்பு றீங்களே ,ஆமாம்மா அவர் அன்பு என்னும் மருந்தை வைச்சதினாலேதான் அவரைச்சுற்றியே ஓடறோம் புரியுதா ?''உறுமினான் பிரபு
இத்தனையும் கேட்டு உண்மை ச்சுட பேச்சற்று நின்றாள் அன்னபூரணி
தேவி -----6-9-1992

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக