திங்கள், 23 ஜூன், 2014

திருட்டு


தன் எதிரில் வந்து நின்ற பெண்ணை ப்
பார்த்து ‘’என்ன வேணும் உஙளுக்கு ‘?
இன்ஸ்பெக்டர் கேட்டார்
‘’சார் என் கைபையை ஒருவன் பிக்பாக்கெட் அடிச்சிட்டான் சார் ,அதிலே ஆயிரம் ரூபாய் பணமும் ,என் atm கார்டும் இருக்கு சார் ,அதை கண்டுபிடிச்சு கொடுஙக சார் ‘’ ருத்ரா படபடப்போடு சொன்னாள்
‘’எந்த ஏரியாவில நடந்தது ?’’
‘’ தெற்கு வீதியில் சார் ‘’
‘’எத்தனை மணிக்கு நடந்தது ?’’
‘’பத்தரை மணி இருக்கும் சார் ‘’
‘’309 இவங்ககிட்டே ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதி வாங்கிக்க , எழுதி கொடுத்துட்டு போங்கம்மா தகவல் கிடைத்ததும் சொல்றோம் ‘’
‘’கொஞ்சம் சீக்கிரம் கண்டுபிடியுங்க சார் ’’
‘’சரி சரி நீங்க போயி முதலில் பாங்கில் விவரம் சொல்லி உங்க கணக்கை
ஸ்டாப் பண்ணச்சொல்லுங்க ’’
‘’சொல்லிட்டேன் சார் , அப்ப நான் வரேன் சார் ‘’விடை பெர்றுக்கொண்டாள்
ஒரு வாரம் ஆனது – போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எந்த தகவலும் வராததால் ஸ்டேஷனுக்குப்போனாள் .
‘’ஏம்மா திருடியவனை அடையாளம் காட்ட முடியுமா ?’’
‘’முடியும் சார் ‘’
‘’207 அந்த பிக்பாக்கெட் பயலுவ நாலு பெயரையும் அழைச்சுகிட்டு வாய்யா ‘’
இன்ஸ்பெக்டெர் சொன்னார்
திரு திரு வென விழித்தபடியே வந்து நின்றனர் நாலுபேரும்
இன்ஸ்பெக்டர் ஒவ்வொருத்தன் அருகிலும் நின்று காட்டி இவனா பாருங்க
என்று கேட்டபடி சென்றார் ,
’’இவங்க யாரும் இல்லை சார் ’’
‘’ நல்லா பார்த்து சொல்லுங்க ,இவனுக தான் அந்த ஏரியாவில அடிக்கடி அடிச்சுட்டு இங்க வருவானுங்க ‘’
‘’இல்ல சார் எனக்கு அவனை நல்லா தெரியும் ,அவன் கழுத்துகிட்ட ஒரு நட்சத்திர குறி இருக்கும் சார் ‘’
‘’ஏண்டா உங்க குரூப்பிலே அப்படி எவனாச்சும் இருக்கானா?தெரிஞ்சா சொல்லுங்கடா ‘’திருடர்களைப்பார்த்து கேட்டார்
‘’இல்லேசார் அப்படி யாரும் கிடையாதுசார் ‘’
‘’சரிம்மா நீங்க போங்க ,அடையாளம் சொல்லிட்டீங்களே வாட்ச் பண்றோம் ‘’
எரிச்சலோடு போனாள் ருத்ரா .மன விரக்தி போக முகனூலில் அமர்ந்தாள்.
அதில் யாரோ ஒரு புது முகம் ஒன்று ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தார்கள்
நீண்ட யோசனைக்குப்பிறகு அக்சப்ட் செய்தாள் .பின் ஒரு அப்டேட் போட்டுவிட்டு வெளியேறினாள்
அடுத்த நாள் அந்த புது முகக்காரன் தன் ப்ரொஃப்யில் பிக்சரை அப்டேட் பண்ணியிருந்தான் .ருத்ரா வேண்டா வெறுப்பாக லைக் கொடுத்து விட்டு
மூட எண்ணுகையில்..அவள்புத்தியில் திடீரென பல்பு எரிந்தது .பட்த்தை உர்றுப்பார்த்தாள்,,ஆம் அவனேதான் ,,அன்று தன்னிடம் கைபையை அடித்த அவனேதான் .சட்டென்று அவனைப்பற்றீய விபரங்கள் கண்டு பிடித்து ஓடினாள் இன்ஸ்பெக்டரிடம் ,
வாரே வா அறை மணியில் அவன் இருப்பிடம் சென்று இன்ச்பெக்டர் அவனை பிடித்து இழுத்து வந்தனர் ., நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல் தானே ரிக்வெஸ்ட் கொடுத்து மாட்டிக்கொண்டான் , விசாரித்ததில் அந்த லாப்டாப்பும் வேறு ஒருவரிடம் திருடியது என்று
எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் திருடுவதற்குக் கூட,,அடப்பாவிகளா’
ருத்ராவிற்கு atm கார்டும் கைக்கு வந்து சேர்ந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக