ஞாயிறு, 12 மார்ச், 2023

காவிரியின் அழகினிலே கண்மயங்கி நிற்போமே!

 காவிரியின் அழகினிலே கண்மயங்கி நிற்போமே!

தாவியோடும் பாங்கினிலே தரிசெல்லாம் செழித்திடுமே
காவிரித்தாய் பாய்கின்ற பாதையிலே
காலார நடந்துன்னைக் காண்கிறோம்
பூவிரித்து நாடெல்லாம் புகழ்விரித்தாய்
பொன்விரித்த சோழ புலவோரெல்லாம்
பாவிரித்தார் பாக்களாலே உன்னழகை
குடகு மலையில் பிறந்து வந்தாய்
பூம்புகாரில் வங்ககடலில் கலப்பவளே
வான் பொய்த்தாலும் நீ எப்போதும்
தான் பொழிக்காதவளே எங்கே போனாய்
வற்றாத அன்னை நீ வாழ்வளித்தாய்
பற்று கொண்டோம் உன் அருளால்
புவி மெச்சும் தமிழகத்தில்
பொங்கியோடி வளம் சேர்த்தாய்
நாவினிக்க போற்றினானே
நம் இளங்கோ காதையிலே
சோலையிலே மயில்கள் ஆடும்
குயில் விரும்பி இசை பாடும்
ஊர்ந்து நெளிந்து அசைந்து
வரும் நீயோ கொள்ளை அழகு
காற்றாறாய் பாய்ந்தோடிய உன்னை
கால்கட்டி வைத்தான் கரிகாலன்
தமிழகத்தின் ஆதார சுருதியே
ஆர்ப்பரித்து ஓடிவா அன்னையே நீ
தாவியோடும் பாங்கினிலே
தரிசெல்லாம் செழித்திடவே வந்துவிடு
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக